நிழல்கள் ரவி தொகுத்து வழங்கும் நம்பினால் நம்புங்கள்
ஜீ டிவியில் நம்பினால் நம்புங்கள் என்ற நிகழ்ச்சி மீண்டும் ஒளிபரப்பாகத் தொடங்கி உள்ளது
அமானுஷ்யம், ஆவிகள், வித்தியாசமான மனிதர்கள், மக்களின் நம்பிக்கைகள், புரியாத புதிர்கள் என அனைத்திற்கும் விடை தேடும் ஒரு நிகழ்ச்சியாக நம்பினால் நம்புங்கள் நிகழ்ச்சி ஜீ டிவியில் இடம் பெறுகிறது.

இதனை நடிகர் நிழல்கள் ரவி தொகுத்து வழங்குகிறார். கடந்த முறை ஒளிபரப்பான சீசனை நிழல்கள் ரவி தொகுத்து வழங்கினார். இம்முறையும் தனது கம்பீரமான குரலினால் தொகுத்து வழங்குகிறார்.
முதல் வார சிறப்பு பகுதிகளாக, நடுக்கடலில் நடக்கும் சுறா வேட்டையில் பிரத்தியேக நிபுணர்களோடு கடலில் இறங்கி வேட்டையாடும் காட்சிகள்.
பதிமூன்று வருடங்களாக தனி அறையில் யாருமே கண்டிராத ஒரு மனிதன் வெளியே வரும்போது எப்படி இருப்பான்? அவனது நிலை என்ன?
தமிழகத்தின் ஒரு காட்டில் ஒரு சமூக மக்கள் தொட்டால் மட்டுமே பூக்கும் பூ ஒன்று உள்ளது. அது ஏன் அப்படி? அது எங்கே உள்ளது?இப்படி பல கேள்விகளை எழுப்பும் பல வித்தியாசமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானது.
நம்பினால் நம்புங்கள் நிகழ்ச்சி. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது காதல் பொக்கிஷமாக போற்றப்படும் தாஜ்மகால் பற்றியும், சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் இன்றைக்கு பழுப்பாக மாறிவருவதன் காரணம் என்ன என்பதைப் பற்றியும் வெள்ளிக்கிழமை எபிசோடில் ஒளிபரப்பானது.


Click it and Unblock the Notifications