சினிமாவில் கண்டிப்பா நடிக்க மாட்டேன்… தீபிகாஷி

By Mayura Akilan

சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமாகும் பலருக்கும் சீரியல், சினிமா என்று செட்டில் ஆகத்தான் பலரும் நினைப்பார்கள். ஆனால் இன்றைக்கு சில அழகு தொகுப்பாளினிகள் கூட சின்னத்திரையே போதும் சினிமா வேண்டாம் என்று முடிவெடுத்து விடுகின்றனர்.

ஜெயா டிவியில் செவ்வாய்தோறும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, 'அறுசுவை நேரம்'. 'நித்தம் நித்தம் ஒரு புத்தம் புது சுவை' என்ற நோக்கில் பிரபல சமையல் கலைஞர்களின் கைவண்ணத்தில் புதுப்புது உணவு வகைகளை சமைத்துக் காட்டுகிறார்கள். அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளின் செய்முறை விளக்கங்கள் இந்த நிகழ்ச்சியின் ஸ்பெஷல்.

இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் அழகான தொகுப்பாளினி தீபிகாஷி. சமையல் பற்றி பேசும் போதே வேகம்தான். பேச்சே சுவையாக இருப்பதால் நிகழ்ச்சியை ஆவலுடன் ரசிக்கின்றனர் ரசிகர்கள். தன்னுடைய சின்னத்திரை அனுபவங்களை கூறுகிறார்

ஜாக்பாட்டில் வென்றோம்

ஜாக்பாட்டில் வென்றோம்

சென்னை, டபிள்யூ.சி.சி-ல பி.காம் முடித்திருக்கிறேன். ஃபேஷன் டிசைனிங் எனக்கு ரொம்ப இஷ்டம். சிம்ரன் தொகுத்து வழங்கின 'ஜாக்பாட்' நிகழ்ச்சியில் கலந்துகிட்ட எங்க குழு, பரிசோடத்தான் வெளியில் வந்தோம். அந்த நிகழ்ச்சியில் ஃபேஷன் டிசைனிங் பிரிவுல என்னோட பங்களிப்பும் இருந்துச்சு.

என்.டி.டிவி தொகுப்பாளினி

என்.டி.டிவி தொகுப்பாளினி

என்.டி.டி.வி. அதுல 'மெனு கார்டு', 'என்டர் தி கிச்சன்'னு நிறைய நிகழ்ச்சிகள், சினிமா நட்சத் திரங்கள் பேட்டினு கலக்கியிருக்கேன்.

சமையல் நிகழ்ச்சி வாய்ப்பு

சமையல் நிகழ்ச்சி வாய்ப்பு

இப்போ ஜெயா டிவியில் அறுசுவை நேரத்தில் ஒவ்வொரு ரெசிபி செய்து காட்டும்போதும், அந்த உணவோட வரலாறை தனி பைட்ஸா ஒளிபரப்பறதுதான் இந்த நிகழ்ச்சியோட சிறப்பு.

அப்பாவின் அட்வைஸ்

அப்பாவின் அட்வைஸ்

சமையல் நிகழ்ச்சிகளை சிறப்பா தொகுத்து வழங்கக் காரணமே, ஹோட்டல் இண்டஸ்ட்ரி - எஜுகேஷன்ல டீன் லெவல்ல இருக்குற அவருடைய அப்பாதானாம்.

சினிமாவுக்கு நோ

சினிமாவுக்கு நோ

தீபிகாஷி நேவி குயின் ஃபேஷன் ஷோ 2010ல் டைட்டில் வென்றவர். நிறைய சினிமா வாய்ப்புகள் வந்தும் நோ சொல்லியிருக்கிறார். கார்ப்பரேட் ஈவன்ட் ஆங்கரிங், அட்வர்டைஸ்மென்ட் டிசைனிங் பக்கம்தான் அதிக ஆர்வம். டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக வந்தும் நடிக்க ஒருபோதும் ஆர்வமில்லை என்கிறார் தீபிகாஷி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X