Don't Miss!
- News சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரிகள் இடையே மோதல்.. பாட்டிலால் தாக்கியதில் ஒருவர் காயம்! பரபர!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
Bigg Boss 3: களைக்கட்டும் பிக் பாஸ் ஜெயிலில் சூப்பர் மார்க்கெட் இல்லையாம்!
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் 3 ஞாயிறு அன்று ரொம்ப களைக்கட்டித் துவங்கியது. நம்ம கமல்ஹாசன் ஆழ்வார் பேட்டை இல்லத்திலிருந்து பிக் பாஸ் 3 பயணம் தொடங்கி இருக்கிறது.
பிக் பாஸ் இல்லத்தின் மூலம் நாட்டில் தண்ணீர் பஞ்சம் எப்படி தலை விரித்தாடுது என்று மக்கள் தெரிஞ்சுக்க இந்த பிக் பாஸ் வீடு எல்லா விதத்திலும் கட்டமைக்கப்பட்டு இருப்பதாக கமல் சொன்னார்.
உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் ஆங்கிலத்தில் பேசினால், என்ன தண்டனை கொடுப்பார்கள் என்று தெரியவில்லை.
சேகரிப்பு பாடம்
இந்த பிக் பாஸ் வீட்டில் மழை நீர் சேகரிப்பு, பூமிப் பாதுகாப்பபு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை போட்டிகள் மூலம் மக்களுக்கு எடுத்து சொல்வார்கள் என்கிற எதிர்பார்ப்பும் இருக்கிறது. எல்லா மொழிகளிலும் பிக் பாஸ் நடத்தத்தான் செய்கிறார்கள்.ஆனால், அப்படி ஏனோ தானோவென்று நடத்துவதில் கமலுக்கு என்றுமே விருப்பம் இருந்ததில்லை. அதனாலதான் பல விதி விலக்குகளை பிக் பாஸிடம் கடந்த இரண்டு சீசன்களிலும் கேட்டு வாங்கி அமல் படுத்தினார். பின்னர் இதை மற்ற மொழியிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடைபிடிச்சதுன்னு சொல்லலாம்.
சூப்பர் மார்க்கெட் இல்லை
பிக் பாஸ் வீட்டை பார்த்த கமல் ஹாசன் பிக் பாஸ் ஜெயிலைப் பார்த்தார். இந்த ஜெயிலில் சூப்பர் மார்க்கெட் இருக்கான்னு கேட்டார். இல்லைன்னு தானே சொல்லிக்கிட்டார். உங்களுக்கு புரியுதா? புரியாதவங்க தெரிஞ்சவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க.தெரிஞ்சவங்க சும்மா அப்படியே இருந்துக்கோங்கன்னு விவேக் டயலாக்தான் இங்கே சொல்லலாம். வீட்டில் நிறைய மாற்றம் செய்துள்ளார்கள், மாற்றம் ஒன்றே மாறாததுன்னு சொன்னார்.
கோல்டு மெடலிஸ்ட்
காலாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருமகளாக நடிச்ச சாக்க்ஷி அகர்வால், உத்திரகண்ட் பெண்ணாக இருந்தாலும், வளர்ந்தது முழுக்க முழுக்க சென்னையில்தான். அண்ணா யுனிவர்சிட்டி இன்ஜினியரிங் கோல்டு மெடலிஸ்ட்டாம். இப்போ எம்பிஏ டாப் லெவல் என்று கூறினார். இப்போ எல்லாம் நிறைய படிச்சவங்கதான் கலைத் துறையிலும் ஜொலிக்கறாங்க. படிப்பு வாழ்க்கைக்கு மிக முக்கியம் என்கிற அளவுக்கு எல்லாருக்கும் கல்வி விழிப்புணர்வு வந்திருக்கிறது. பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.
நடிகை ஷெரீன்
துள்ளுவதோ இளமை திரைப படத்தின் மூலம் திரை உலகுக்கு அறிமுகமான நடிகை ஷெரீன், தான் பன்னிரண்டு வருடங்கள் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து இப்போது பிரேக் அப் ஆகி அப்செட் ஆனதாகவும் கூறினார். ஆனால், இத்தனை வருடங்கள் சும்மா இல்லாமல் இரண்டு வித இசைகளை பயின்று, அதில் தான் முழு கவனத்தையும் செலுத்தி வருவதாக கூறினார்.
இரண்டு இலங்கை போட்டியாளர்கள்,ஒரு மலேசியா தமிழர் என்று நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு இருக்கின்றனர். இது சிறப்பு!