For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Bigg Boss 3 Tamil: வனிதா இல்லாத பிக்பாஸ் வீடு.. நான்வெஜ் இல்லாத சண்டே மாதிரி ஆயிருச்சே!

|

சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா வெளியேற்றம் செய்யப்பட்டது சரியான செயலாக இல்லை என்றே மக்கள் வெளியில் பேசுகிறார்கள். வனிதா வயதை ஒத்த ரேஷ்மா ரொம்ப அமைதியானவர்.

ஆலோசனை சொல்ல, அதிகாரம் செய்ய, சமையல் ருசியாக செய்ய, சமையல் செய்ப்பவர்களுக்கு வலிய சென்று உதவி செய்ய என்று பிக்பாஸில் ஆட்கள் இல்லை.

அவரவர் அவரவருக்கு இட்ட பணிகளை மட்டுமே பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ் செய்து வருகிறார்கள். குரல் உசத்தி பேசுவது எங்க குடும்ப சொத்து என்று அவரே கமலிடம் சொல்லிவிட்டார்.

அழகு வனிதா

அழகு வனிதா

விஜயகுமார் மஞ்சுளாவுக்கு அழகிய பெண்ணாக அதுவும் தனது அப்பா விஜயகுமாரின் முகத்தைக் கொண்டு பிறந்து இருப்பவர் வனிதா விஜயகுமார். மற்ற இரு பெண்களில் இருவருக்கும் மஞ்சுளாவின் சாயல் 99 சதவிகிதம் உண்டு. அதனால்தானோ என்னவோ வனிதா ஒரு தனி அழகுடன் இருந்தார். குடும்பத்தில் பிரச்சனை..வெளியில் பல பிரச்சனைகள் என்று சந்தித்து வரும் பெண்கள் குரலை உசத்தி பேசுவது காலம் தரும் மாற்றம்தான்.

வாழ்க்கையின் யோகம்

வாழ்க்கையின் யோகம்

குரலை உசத்தி பேசியதாலேயே அவருக்கு பஜாரின்னு பேர் வச்சா அது சுகபோக வாழ்க்கையை அனுபவித்துவிட்டு, அந்த யோகத்தில் பேசுபவர்களின் இழிவான செயல் என்றுதான் இந்த கண்ணில் படித்து, அந்த கண்ணில் விட்டு விட வேண்டும். வனிதா பிக்பாஸ் வீட்டிலும் நிம்மதியாக இருக்க முடியாதபடி, மூன்றாவது குழந்தை விவகாரத்தில் அவருக்கு நீதிமன்ற பிரச்சனை, போலீல் விசாரணை என்று நிம்மதி இல்லாமல் இருந்தார்.

ஹவுஸ் மேடாக

ஹவுஸ் மேடாக

பிக்பாஸ் வீட்டுக்கு வெளியே என்ன நடக்கிறது என்று கூட ஹவுஸ் மேட்சுக்கு தெரியாத சூழலில், உள்ளிருந்த இவருக்கு , வெளியில் இருந்து வந்தது அவரது குடும்பப் பிரச்சனை.அதையும் அந்த வீட்டிலிருந்து சந்தித்த வனிதா, பிக்பாஸ் வீட்டுக்குள் இந்த பிரச்சனை தனது முகத்தில் தெரியாதவாறு அனைத்து போட்டிகளிலும் கலந்துக் கொண்டார்.. இதெல்லாம் எல்லாராலும் முடியாது. அதுக்குத்தான் வனிதா வெளியேறியவுடன், ஹவுஸ் மேட்ஸ் பேசிக்கொண்டது அவர் ஒரு கட்ஸ் லேடி என்று.

இவர் வாழ்ந்தார்

இவர் வாழ்ந்தார்

அப்பா விஜய குமார் நாட்டாமை படத்தில், உணமைடா...நீதிடா...நேர்மைடான்னு நடித்து புகழடைந்தார். அவரின் மகள் வனிதா விஜயகுமார் பிக் பாஸ் வீட்டினுள் இப்படித்தான் வாழ்ந்து காண்பித்தார். அவரும் புறம் பேசினார், அதையும் சொல்லிட்டுத்தான் வெளியேறினார்.

புறம் பேசத்தானே

புறம் பேசத்தானே

புறம் பேசத்தான் நிகழ்ச்சியே நடத்துறீங்க. மனிதர் புறம் பேசுவதும், குறை நிறைகளை அலசி ஆராய்வதும்தானே இயற்கை. இப்படி இருக்க, அவருக்கு மட்டும் ஏன் மக்கள் வாக்களிக்கவில்லை என்று மக்கள்தான் சிந்திக்க வேண்டும்.அன்றாட வாழ்வில் நாம் எமோஷனல் காட்டுவது இல்லை ,கத்துவது இல்லையா?

சண்டே நான்வெஜ்

சண்டே நான்வெஜ்

இப்போ பாருங்க மனதில் பட்டதை பேசி பிக் பாஸ் வீட்டில், கலகலப்பை உண்டாக்கி, மக்களைப் பார்க்கத் தூண்டிய பிக் பாஸ் நிகழ்ச்சி களை இழந்து இருக்கிறது. உலக நாயகனும் அதிக நேரம் வந்து நிகழ்ச்சியில் பேசுவதில்லை. நிறைய பேருக்கு பிக் பாஸ் சனி ஞாயிறுகளில் பார்த்தால் போதும் என்றாகிவிட்டது. யாருன்னே தெரியாதவங்க பேசிக்கறதை எல்லாம் நாங்க எதுக்கு பார்க்கணும்னு மக்கள் நினைக்கறாங்க. அவங்களுக்கு பிக் பாஸ் வீடு இப்போது நான்வெஜ் இல்லாத சண்டே மாதிரி, ஐயோன்னு இருக்கு.

மொத்தத்தில் வனிதாவுக்கு குடும்பத்திலும் பிரச்சனை ,பிக் பாஸ் குடும்பத்திலும் பிரச்சனை!

English summary
People say that Vanitha's eviction on Vijay TV'sbigg boss s is not the right thing to do. Reshma is very quiet, similar to Vanitha.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more