Pandavar illam serial: பாண்டவர் இல்லத்தில் பெண்களே இல்லையாமே!

சென்னை: சன் டிவியின் பாண்டவர் இல்லம் சீரியல் கடந்த ஒரு வார காலமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. நாயகி சீரியலில் கண்மணியாக நடித்து வரும் பாப்ரி கோஷ் இந்த சீரியலில் பாக்ஸராக நடிக்கிறார்.

பாக்சிங்குக்கு இந்த சீரியலில் முக்கியத்துவம் இருக்குமோ இல்லையோ, காதலில் நிச்சயம் முக்கியத்துவம் இருக்கும். ஆரம்பமே படு அமர்க்களம் என்பது போல தன்னை வம்பிழுத்த பசங்களை முகத்தில் பஞ்ச் வைத்தே ஓட விடுகிறார் பாப்ரி.

இதே போல நினைத்து பாண்டவர் இல்லத்தின் கடைசி பையனாக இருப்பவனின் முகத்தில், பன்ச் விட அவன் சுருண்டு விழுந்து விடுகிறான். பயந்து போன இவள் அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்து வைத்தியம் பார்க்கிறாள்.

பெண்கள் இல்லையாம்

பெண்கள் இல்லையாம்

அஞ்சு பசங்க ஒரு தாத்தா என்று பாண்டவர் இல்லம். இந்த இல்லத்தில் பெண்கள் இல்லையாம். .அந்த வீட்டு அஞ்சு பசங்க மேலயும் பெண்கள் கை பட்டதில்லை. அவ்வளவு ஏன், அந்த வீட்டில் பெண்கள் வாசனையே இல்லை. சரி, அப்புறம் எப்படி இந்த ஐந்து பசங்கள் என்று நீங்கள் கேள்வி கேட்டால், அதற்காக சில வாரங்கள் வெயிட் செய்து, சீரியலைப் பார்த்தால்தான் தெரியும். தாத்தாவுடன் பேரன்கள் போடும் ஆட்டம் கொஞ்சம் காமெடியாகத்தான் இருக்கிறது.

பெண் வேண்டாம்

பெண் வேண்டாம்

பாண்டவர் இல்லத்தின் கடைசி பையனை பாப்ரி ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்க, இங்கே பையனைக் காணலைன்னு தாத்தா பேரன்கள் எல்லாரும் சேர்ந்து தேடிக்கொண்டு இருக்காங்க. இங்கே ஆஸ்பத்திரியில் இருக்கும் அவன் கண் விழித்துப் பார்த்து, பாப்ரியைப் பார்க்க, அவள் சாரி கேட்கிறாள். பாண்டவர் இல்லத்தின் கடைசி பேரன் என்று அவன் சொல்றான். சரி வலிக்குதா தைலம் தடவி விடறேன்னு இவள் கிட்டே போக, ஐயோ என்று அலறுகிறான்.

ஓவர் ரியாகஷன்

ஓவர் ரியாகஷன்

எதுக்கு இப்படி கத்தறீங்க... ஓவர் ரியாக்ஷனா இருக்கே. வலிக்குதேன்னு தைலம் தடவி விட வந்தேன்னு சொல்றா.இல்லைங்க...நான் பாண்டவர் இல்லத்துப் பையன்.எங்க குடும்ப பசங்க மேல பெண்கள் கை பட்டதில்லை. அதனாலதான் கத்திட்டேன்னு சொல்றான். ஆஸ்பத்திரி உதவியாளரை வைத்து, தைலம் தடவி விட சொல்றா. உண்மைதான் போல இருக்கு.. இப்படியும் ஒரு குடும்பமான்னு ஆச்சரியப்படுகிறாள்.

நடுவுல உங்க பேரன்

நடுவுல உங்க பேரன்

தாத்தா வெற்றிலை பிரசன்னம் பார்க்கறவர் கிட்ட பேரன் எங்கே இருக்கான்னு பார்த்து சொல்லுன்னு கேட்க, அவருக்கு ஒரு உண்மை தெரிஞ்சுருது. இதை சொன்ன இவங்க குடும்பமே சேர்ந்து யோசித்தாலும், உண்மையை சொல்லிடறார். உங்க பேரன் இப்போ நாலு பொண்ணுங்க கிட்ட மாட்டிகிட்டு இருக்கான்னு சொல்றார்.அடுத்து என்ன, அவருக்கு அடிமேல் அடி விழுது.

நாலு பொண்ணுங்க யாருன்னு பார்த்தால்தான் தெரியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X