வனிதா 'அப்படி' சொன்னப்பவே சேரன் சுதாரிச்சிருக்கணும்: வச்சிடுச்சுல்ல ஆப்பு

By Siva

Recommended Video

Bigg Boss 3 Tamil: Day 8: Promo 1: இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர்- வீடியோ

சென்னை: வனிதா விஜயகுமார் இயக்குநர் சேரனை தன் அப்பா போன்றவர் என்று தெரிவித்தபோதே அவர் கவனமாக இருந்திருக்க வேண்டும்.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கி ஒரு வாரம் முடிந்துவிட்டது. வழக்கமாக முதல் வாரத்தில் யாரையும் வெளியே அனுப்புவது இல்லை. இதையடுத்து இந்த வாரம் நிச்சயமாக ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார்.

இந்நிலையில் நாமினேஷன் வேலையை துவங்கிவிட்டோம் என்பதை தெரிவிக்கும் வகையில் ப்ரொமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அபிராமி

அபிராமி மற்றும் சாக்ஷியை நாமினேட் செய்துள்ளார் மீரா மிதுன். அபிராமி மதுமிதாவையும், ஷெரின் மீராவையும் நாமினேட் செய்துள்ளனர். பாத்திமா பாபு கவின் மற்றும் சரவணனை நாமினேட் செய்துள்ளார். வனிதாவோ இயக்குநர் சேரனை நாமினேட் செய்துள்ளார். ப்ரொமோ வீடியோவில் ஏற்கனவே சோகமாக உள்ளார் சேரன்.

கேப்டன்

கேப்டன்

பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் அனைவரிடமும் மோதுகிறார் வனிதா. அப்படி இருக்கும்போது ப்ரொமோ வீடியோவில் ஒருவர் கூட அவரை நாமினேட் செய்யாதது ஆச்சரியமாக உள்ளதா?. பிக் பாஸ் 3 வீட்டின் கடந்த வார கேப்டன் என்பதால் அவரை நாமினேட் செய்ய முடியாது. அதனால் அவர் தப்பித்துக் கொண்டார்.

மீரா

மீரா மிதுன் அபிராமியை நாமினேட் செய்தபோது அபிராமி ஐயர் என்றார். அவர் அப்படி சொன்னது யாருக்கும் பிடிக்கவில்லை. வேண்டும் என்றே மீரா அப்படி ஐயர் என்று கூறி ட்ரிக்கர் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மீரா மிதுன் தான் ஒரு அப்பாவி என்று மீண்டும் மீண்டும் கூறினாலும் அவர் பேச்சை நம்ப யாருமே தயாராக இல்லை.

ஆப்பு

வனிதா சேரன் தனக்கு அப்பா மாதிரி என்று தெரிவித்தார். அப்பொழுதே பார்வையாளர்களுக்கு லைட்டா சந்தேகம் வந்தது. வனிதாவுக்கு அப்பா என்றாலே பிடிக்காதே அப்படி என்றால் சேரனுக்கு என்ன ஆப்பு வைக்கப் போகிறாரோ என்று எதிர்பார்த்த நிலையில் அவரை நாமினேட் செய்துள்ளார். ஆக, எதிர்பார்த்தது நடந்துவிட்டது. நேற்று பிக் பாஸ் வீட்டில் மதுமிதா தமிழ் பொண்ணு என்று கூற அபிராமியும், ஷெரினும் பேயாட்டம் போட்டுவிட்டார்கள். அதிலும் குறிப்பாக ஷெரின் அந்த தமிழ் பொண்ணு பிரச்சனையை சும்மாவிடுவதாக இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X