கடைசி ப்ரொமோ வீடியோவில் கூட எவிக்ஷன் பற்றி பேசாத கமல்
Recommended Video
சென்னை: இன்று வெளியான 3 ப்ரொமோ வீடியோக்களிலும் எவிக்ஷன் பற்றி ஒரு வார்த்தை கூட கமல் பேசவில்லை.
ஞாயிற்றுக்கிழமை வந்தாலே பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து யார் வெளியேறப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ள பார்வையாளர்கள் ஆர்வமாக இருப்பார்கள். நடிகை கஸ்தூரி வெளியேற்றப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று வெளியான முதல் 2 ப்ரொமோ வீடியோக்களில் எவிக்ஷன் பற்றி எதுவும் கூறவில்லை.
இந்நிலையில் 3வது வீடியோவிலும் அது பற்றி கமல் ஹாஸன் பேசவில்லை.

கே. எஸ். ரவிக்குமார்
உங்கள் சார்பாக அகம் டிவி வழியே அகத்திற்குள் என்கிற குரலை கேட்டதும் அது இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாருடையது என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது. அவர் தனது சிஷ்யன் சேரனிடம் பேசியதை தான் 3வது ப்ரொமோ வீடியோவில் காட்டியுள்ளனர். இந்த வீடியோவில் கமல் சும்மா நின்று கொண்டிருக்கிறார்.

கமல் ஹாஸன்
கடைசி வரைக்கும் எவிக்ஷன் பற்றி எதுவுமே பேசவில்லையே கமல் சார் என்று பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சேரனிடம் மட்டும் பிக் பாஸ் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சேரன் பெரிய இயக்குநர் என்பதால் அவரை வெற்றி பெற வைத்தால் அடுத்த சீசனுக்கு பெரிய திரையில் இருந்து மிகவும் பிரபலமானவர்களை அழைத்து வரலாம் என்று கணக்கு போட்டு பிக் பாஸ் செயல்படுவதாக பார்வையாளர்கள் நினைக்கிறார்கள்.

காரணம்
பிக் பாஸ் 3 வீட்டில் டாஸ்குகள் கொடுக்காமல் இருப்பதற்கும் சேரன் ஒரு காரணம் என்று பார்வையாளர்கள் நினைக்கிறார்கள். சேரனுக்கு வயதாகிவிட்டதால் கடினமான டாஸ்குகளை செய்ய முடியாது என்பதால் பிக் பாஸ் யாருக்கும் டாஸ்க் கொடுக்கவில்லை என்று பார்வையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்கள்
சேரன் நடிப்பதாக சிலரும், அவர் உண்மையாக இருப்பதாக சிலரும் தெரிவித்துள்ளனர். சேரன் சார் இருக்க வேண்டிய இடம் பிக் பாஸ் வீடு இல்லை. நல்ல மனிதரை போய் அங்கு தங்க வைத்து பாடாய் படுத்துகிறார்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள். தேவையில்லாத உறவும், அன்பும் உங்களை பாதிக்கும். அந்த லாஸ்லியாவிடம் இருந்து தள்ளியே இருங்கள் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











