#NoVanithaNoBiggBoss இந்த டுவிஸ்டை பிக் பாஸ் என்ன வனிதாவே எதிர்பாத்திருக்க மாட்டாரே

By Siva

சென்னை: பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் ட்விட்டரில் ஒரு அதிசயம் நடந்துள்ளது.

பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து இன்று இரவு ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார். அந்த போட்டியாளர் சண்டக்கோழி வனிதா விஜயகுமார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அவர் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பி தன் வீட்டிற்கு சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது.

வனிதா

வனிதா

வனிதா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய விஷயம் அறிந்த பார்வையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அவர் கிளம்பியது சந்தோஷமாக இருந்தாலும் வனிதா இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி போர் அடிக்குமே, அவர் இருக்கும்போதே மொக்கையாக இருந்தது. இந்நிலையில் அவரும் இல்லை என்றால் நிகழ்ச்சியை பார்க்க முடியாதே என்று ஃபீல் பண்ணுகிறார்கள்.

ட்விட்டர்

வனிதா வெளியேற்றப்பட்டால் பிக் பாஸ் நிகழ்ச்சியே கிடையாது என்று நெட்டிசன்கள் ட்வீட் செய்கிறார்கள். #NoVanithaNoBiggBoss என்கிற ஹேஷ்டேகுடன் ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள். நெட்டிசன்கள் இப்படி அந்தர் பல்ட்டி அடிப்பார்கள் என்று பிக் பாஸ் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார். பிக் பாஸை விடுங்க வனிதாவே எதிர்பார்த்திருக்க மாட்டார்.

மோகன் வைத்யா

வனிதா இருக்கட்டும் அவருக்கு பதில் அங்கிள் மோகன் வைத்யாவை வெளியேற்றுங்கள் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிலரோ வனிதாவை அனுப்பி வைத்துவிட்டு அவரை விட பயங்கரமான போட்டியாளரை பிக் பாஸ் கொண்டு வரப் போகிறார் என்று கொளுத்திப் போட்டுள்ளனர்.

விளையாட்டு

பிக் பாஸ் வனிதாவை வெளியேற்றவில்லை மாறாக தனி அறையில் தங்க வைத்திருப்பார். வீட்டில் உள்ளவர்களிடம் கண்ணாமூச்சி ஆடப் பார்க்கிறார் பிக் பாஸ். அவராவது வனிதா விஜயகுமாரை வெளியேற்றுவதாவது என்று சில நெட்டிசன்கள் நம்பிக்கையுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வனிதா இருக்கும்போது அவரை கழுவிக் கழுவி ஊத்திவிட்டு அவர் வெளியேற்றப்பட்டுவிட்டார் என்றதும் பாசம் காட்டுகிறார்களே. இந்த பாசத்தை எல்லாம் பார்த்தால் வனிதா விஜயகுமார் நிச்சயம் நெகிழ்து போய்விடுவார். ஊரே வனிதாவை பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது பிக் பாஸ் மட்டும் ப்ரொமோவில் ரகசியம் காக்கிறாராம். ப்ப்பபா, சான்சே இல்ல பிக் பாஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X