ஜீ தமிழ் சீரியல்கள் நவம்பர் 10ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!

சென்னை: கெட்டிமேளம் சீரியலில் இன்று, மீனாட்சி தனது அண்ணனை சந்தித்து வெற்றி உன் மேல பயங்கர கோபத்துல இருக்கான் அவன் கண்ணில் பட்டுவிடாதே, மாமா வேற எம்எல்ஏ ஆயிட்டாரு.. ஊர்ல அவருக்கு தெரியாத ஆளுங்களே இல்ல என்று எச்சரிக்கிறாள். அதன் பிறகு வெற்றி துளசியிடம் உங்களை இந்த நிலைமைக்கு ஆளாக கணவனை சும்மா விடமாட்டேன் என்று சொல்கிறாள். அடுத்து தியா பாப்பா எனக்கு பசிக்குது என்று சொல்ல வெற்றி பாப்பாவுக்கும் துளசிக்கும் சாப்பாடு போட்டு கொண்டு வருகிறார்‌. துளசியை சாப்பிட சொல்லி கொடுத்து விட்டு தியாவிற்கு ஊட்டப் போக தியா அம்மாவுக்கு கைல அடிபட்டு இருக்கும்போது அவங்க எப்படி சாப்பிடுவாங்க நீங்க முதல்ல அவங்களுக்கு ஓட்டுங்க அப்பதான் நான் சாப்பிடுவேன் என்று சொல்கிறாள்.

ஆனால், துளசி அதெல்லாம் வேண்டாம் நானே சாப்பிடுகிறேன் என்று சாப்பிட முயற்சி செய்ய அவளால் சாப்பிட முடியாமல் போக வெற்றி ஊட்டி விடுகிறான். இங்கே மகேஷ் அஞ்சலிக்கு ஒரு கிப்ட் கொடுத்து அனுப்ப அஞ்சலி அதை பார்த்து கோபமாகி கொண்டு வந்தவனை திட்டி விரட்டி விடுகிறாள். அதைத்தொடர்ந்து லட்சுமிக்கு போன் செய்து நாளைக்கு நீங்க வீட்டுக்கு வாங்க பாட்டிக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கிற விஷயமா அப்பா கிட்ட டாக்குமெண்ட்ல கையெழுத்து வாங்கிடலாம் என்று சொல்ல அடுத்த நாள் இருவரும் கிளம்பி வருகின்றனர். மீனாட்சி என்ன துளசிக்கு அடிபட்டு இருக்கிறதுனால பார்க்க வந்தீங்களா என்று கேட்க லட்சுமி பதறுகிறாள். வெற்றி அத்தை பெரிய காயம் எல்லாம் இல்லை என்று ஆறுதல் சொல்கிறான்.

பிறகு ஈஸ்வரமூர்த்தி டாக்குமெண்டில் கையெழுத்து போடப்போகும் சமயத்தில் இரண்டு பெண்கள் வீட்டு வாசலில் வந்து பண உதவி கேட்டு நிற்க அபிராமி உதவி கேட்டு வீடு தேடி வருகிறேன் உங்களுக்கெல்லாம் அசிங்கமா இல்லையா லட்சுமியை அவமானப்படுத்துவது போல மறைமுகமாக பேசுகிறாள். இதனால் அஞ்சலி கோபமடைகிறாள்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

அண்ணா: குடும்பத்தோடு சேர்ந்து சுற்றுலா செல்லலாம் என முடிவு எடுத்து அனைவரும் சுற்றுலா செல்கின்றனர். கௌதம் கவிதாவை கொல்வதற்காக துரத்திக்கொண்டு வர அவள், சண்முகம் குடும்பத்தினர் செல்லும் வேனில் ஏறிக்கொண்டு தன்னை காப்பாற்றும்படி சொல்கிறாள். அதையடுத்து மறுபக்கம் இத்தனை நாட்களாக சண்முகம், பரணி இருவரும் ஒன்று சேராமல் இருந்த நிலையில், சுற்றுலா சென்ற இடத்தில் இருவரும் மனதை விட்டு பேசி ஒன்று சேர்கின்றனர்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

பாரிஜாதம்: இசையின் ஜாதகம் உண்மையானதாக இருந்தால், முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். இதனால், முன்னோர்களுக்கு படையால் போட்டு கேட்கலாம் என்று முடிவு செய்கின்றனர். இதில், ருக்குமணி யாருக்கும் தெரியாமல் சாப்பாட்டை எடுத்து இலையை காலி செய்ய அதன் பிறகு சிந்தாமணி மற்றும் ஸ்ரீஜா ஆகியோர் மீண்டும் சாப்பாட்டை வைத்து விடுகின்றனர். ஆனால் இரவில் லேட்டாக வீட்டுக்கு வந்த விஷால் இந்த சாப்பாட்டை சாப்பிட்டு ஒரு பூவை மட்டும் வைத்து விட மறுநாள் காலையில் எழுந்து பூஜை அறையை திறந்து பார்க்க இலை காலியாக இருப்பதை பார்த்து முன்னோர்கள் ஆசீர்வாதம் கொடுத்து விட்டதாக சுப்ரதா சந்தோஷம் அடைகிறாள். இதனால் ஸ்ரீஜா சிந்தாமணி, பானுமதி ஆகியோர் கடுப்பாகின்றனர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீஜா விஷாலை அடைவதற்காக திட்டமொன்றை தீட்டி தனது தோழி வீட்டிற்கு செல்கிறாள். பின், விஷாலை தோழி வீட்டிற்கு அழைக்கிறாள். விஷாலும் அங்கு செல்ல அவனுக்கு ஜூஸின் மயக்கம் மருந்து கலந்து கொடுத்து விஷாலை மயங்க வைக்கிறாள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X