ஜீ தமிழ் சீரியல்கள் நவம்பர் 11ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!

சென்னை: கெட்டிமேளம் சீரியலில் இன்றைய எபிசோடில், பாட்டியின் ஆப்ரேஷனுக்கு பணம் வாங்குவதற்காக லட்சுமி, அஞ்சலி இருவரும் வெற்றி வீட்டிற்கு வருகின்றனர்.
அப்போது, அபிராமி பேசுவதை கேட்டு கோபப்படும் அஞ்சலி இது என் அக்கா வீடு எங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு என்று பதிலடி கொடுக்கிறாள். பிறகு வெற்றி நீங்க எதுக்கு அத்தை இங்கே வந்தீங்க? என்கிட்ட சொல்லி இருந்தா நானே கையெழுத்து வாங்கி கொடுத்திருப்பேனே என்று சொல்ல லட்சுமி பரவால்ல மாப்பிள்ளை என்று சொல்கிறாள். இதையடுத்து, துளசியை சந்திக்கும் அஞ்சலி, மகேஷை விவாகரத்து செய்ய முடிவு எடுத்திருப்பதாக சொல்ல, துளசி நல்ல முடிவுதான் உன்னுடைய முடிவுக்கு எப்போதும் நான் உன்னுடன் இருப்பேன் என்று சொல்கிறாள்.

பிறகு மகேஷ் அஞ்சலிக்கு கிப்ட் ஒன்றை அனுப்ப அஞ்சலி அதை தூக்கி வீசுகிறாள். பிறகு வக்கீலை சந்தித்து விவாகரத்து குறித்து பேச இது மகேஷுக்கு தெரிய வர மகேஷ் தனது வக்கீலிடம் எவ்வளவு செலவானாலும் பரவால்ல நான் உடனடியா வெளிய வரணும் என்று கண்டிஷன் போடுகிறான். அடுத்து அஞ்சலி துளசியுடன் உனக்கு வெற்றி மாமா மேல காதல் இருக்கு எனக்கு தெரியும் அதை அவர்கிட்ட சொல்லிடு என்று சொல்ல மறுபக்கம் கதிர் வெற்றியுடன் துளசியிடம் உன்னுடைய காதலை சொல்லி வாழ்க்கையை தொடங்கு என்று அறிவுரை சொல்ல துளசி வெற்றிக்கு போன் போட்டு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்று ஒரு இடத்திற்கு வர சொல்கிறாள்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:
பாரிஜாதம்: இசை ஸ்ரீஜாவிடம் விஷால் என்னை திருமணம் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. உன்னை திருமணம் செய்யவிடமாட்டேன் என்று சொன்னதால், ஆத்திரப்படும் ஸ்ரீஜா, விஷாலை எப்படியாவது அடைய வேண்டும் என நினைத்து, தோழியின் வீட்டிற்கு வரவைத்து, அவனுக்கு கொடுத்த கூல் ட்ரிங்கில் மயக்க மருந்தை கலந்து கொடுக்கிறாள். அதை குடித்த விஷால் மயங்கிவிடுகிறான். விஷால் வீட்டுக்கு வராததால் இசை அவனைத் தேடி ஸ்ரீஜா இருக்கும் இடத்திற்கு செல்கிறாள்.

ஆனால் அங்கு யாரும் இல்லை எல்லோரும் கிளம்பி விட்டதாக சொல்லி இசையை திருப்பி அனுப்புகின்றனர். இங்கே மயக்கத்தில் இருக்கும் விஷாலுடன் ஸ்ரீஜா படுக்கையில் இருப்பது போல போட்டோ எடுத்துக் கொள்கிறாள். மறுநாள் காலையில் விஷால் கண் விழிக்க ஸ்ரீஜா, நைட் நீ என்னிடம் தவறாக நடந்து கொண்டதாக சொல்லி போட்டோவை காட்ட விஷாலும் அதை நம்பி விடுகிறான். இதையடுத்து, வீட்டிற்கு வரும் ஒரு பெண், உங்க வீட்டில் இருக்கும் ஸ்ரீஜா கர்ப்பமாகக்கூடாது என்று மாத்திரை வாங்கி இருக்கிறாள் என்று இந்த பில் பேப்பரை காட்ட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதற்கு காரணம் விஷால் தான் என்று ஸ்ரீஜா சொல்ல ஆத்திரப்படும் சுபத்ரா, எதற்காக இப்படி செய்த, கல்யாணத்திற்கு ஏற்பாடு நடக்கும் போது நீ இப்படி செய்யலாமா என சரமாரியாக விஷாலை அடிக்கிறாள். அப்போது குறுக்கே வரும் இசை, அத்தை இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்று தீர விசாரிக்காமல் தண்டனை கொடுக்கக் கூடாது, முதலில் என்ன நடந்தது என்று விசாரிக்கலாம் என்கிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X