ஜீ தமிழ் சீரியல்கள் நவம்பர் 12ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!

சென்னை: கெட்டிமௌம் சீரியலில் வெற்றி மற்றும் துளசி என இருவரும் ஒரு இடத்தில் சந்தித்துக் கொள்ள தயாரான நிலையில் இன்று நடக்கப் போவதை பார்க்கலாம். கதிர் பூங்கொத்தை வாங்கி அதை வெற்றியிடம் கொடுத்து காதலை சொல்ல சொல்லி அனுப்பி வைக்கிறான். இன்னொரு பக்கம் அஞ்சலி மற்றும் முருகன் என இருவரும் துளசிக்கு அறிவுரை செய்து அனுப்பி வைக்கின்றனர். பிறகு வெற்றி இருட்டுக்கு நடுவே வந்து பூங்கொத்தை கொடுத்து தனது காதலை சொல்கிறான். பிறகு துளசி நானும் உங்களுக்கு ஒரு முக்கியமான நபரை அறிமுகப்படுத்தணும். அவர் தான் என்னோட வாழ்க்கை என்று சொன்னதும் வெற்றி அதிர்ச்சி அடைகிறான். பிறகு ஒரு நிமிஷம் மேடம் என்று சொல்லி விட்டு, கதிருடன் வந்து துளசி சொன்னதை சொல்லி வருத்தப்படுகிறான். துளசி வெற்றிக்கு போன் செய்து எங்க போய்ட்டீங்க அவர் வந்துட்டாரு என்று சொன்னதும் வெற்றி அங்கு வர துளசி தனியாக நிற்கிறாள்‌.

பிறகு வெற்றி யார் என்று சொல்லுங்க, சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்கிறான். அப்போது துளசி, என் வாழ்க்கையில நான் கடைசி வரைக்கும் இப்படித்தான் இருக்கணும் போல என்று வருத்தப்பட்டு பேச இவர் தான் அவர் என்று துளசி ஒதுங்க பின்னாடி இருந்த கண்ணாடியில் வெற்றி உருவம் தெரிய அதை பார்த்து வெற்றி சர்ப்ரைஸ் ஆகிறான். பிறகு துளசி வெற்றி நீங்கதான் என்னுடைய வாழ்க்கை. இனி வாழ்நாள் முழுக்க உங்களோடு தான் என்று சொல்கிறாள். துளசி இப்படி ஒரு முடிவெடுக்க லட்சுமி உன்னுடைய தொலைபேசி நண்பன் வெற்றி தான் என்ற உண்மையை உடைத்தது தெரிய வருகிறது. இப்படி வெற்றி மற்றும் துளசி என இருவரும் ஒன்று சேருகின்றனர்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

அண்ணா: சண்முகம் மற்றும் பரணி என இருவரும் ரூமுக்குள் இருக்கின்றனர். அப்போது, சண்முகம் இன்னைக்கு என்ன நீ ரொம்ப அழகா இருக்க என்று கேட்டு பரணியை கட்டிப்பிடிக்கிறான். நான்எப்போதும் இப்படித்தான் இருதுக்கேன் இன்னைக்குத்தான் உங்களுக்கு கண்ணு தெரியுது போல என்று சொல்ல, இருவரும் நெருக்கமாக இருக்கின்றனர். இந்த நேரத்தில், வைகுண்டம் எதிர்பாராத விதமாக கதவை திறந்து விட கதவை பூட்டிவிட்டு இருங்க என்று திட்டி விட்டு சிரித்துக்கொண்டே செல்கிறார். மறுபக்கம் சௌந்தரபாண்டி வீட்டில் வீரா மற்றும் சிவபாலன் எனது இருவரும் காதலுடன் விளையாடியபடி இருக்க இதை பார்த்து சௌந்தரபாண்டி கடுப்பாகிறார். பிறகு எல்லோரும் சாப்பிட உட்காரும்போது சூடாமணி பற்றி பேசி வீராவை அவமானப்படுத்த அவள் சாப்பாட்டை தூக்கி வீசிவிட்டு செல்கிறாள்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:
பாரிஜாதம்: ஸ்ரீஜா விஷாலிடம் நைட்டு தவறு நடந்து விட்டதாக சொல்ல விஷால் அதிர்ச்சியடைந்து கண் கலங்குகிறான். அவளிடம் மன்னிப்பு கேட்க ஸ்ரீஜா இந்த விஷயத்தை நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் என்று வாக்கு கொடுக்கிறாள். அடுத்த நாள் சுப்ரதா வீட்டுக்கு கல்யாணம் பத்திரிகைகள் வர அதை பார்த்து எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். விஷால் லேட்டாக வீட்டுக்கு வர அவனிடம் பத்திரிக்கையை கொடுக்க விஷால் அதை பார்க்கிறான். பின்னாடியே வீட்டுக்கு வந்த ஸ்ரீஜா சவாலில் ஜெயிச்சது போல இசைக்கு சைகை காட்ட இசை சந்தேகம் அடைகிறாள். இதுகுறித்து ராகவிடமும் பேசுகிறாள். அதன் பிறகு ஸ்ரீஜா பானுமதிக்கு போன் செய்து வீட்டுக்கு வந்து பிரச்சனை செய்ய சொல்கிறாள். இவர்கள் கல்யாண பத்திரிக்கை வைத்து பூஜை செய்வதற்காக கோவிலுக்கு கிளம்பி செல்கின்றனர். அங்கே விஷாலும் இசையும் மாலை மாற்றிக் கொள்ள ஸ்ரீஜா இதைப்பார்த்து கடுப்பாகிறாள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X