ஜீ தமிழ் சீரியல்கள் நவம்பர் 14ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!

சென்னை: கெட்டிமேளம் சீரியலில் நேற்று ஜாமீனில் வெளியே வந்த மகேஷ் நேராக லட்சுமி வீட்டுக்கு வர அவனைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அஞ்சலி எதுக்கு வந்த என்று கோபப்பட என் அஞ்சலி ஜெயிலில் இருந்து வெளியே வந்த நான் வேற எங்கேயும் கூட போகாம நேரா உன்ன பாக்க தான் வந்து இருக்கேன் என்று சொல்கிறான். நீ எதுக்கு இங்க வந்த உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கு என்று கோபப்பட உன் மேல அளவுக்கு அதிகமாக அன்பும் காதலும் வச்சது தப்பா என்று மகேஷ் கேள்வி கேட்கிறான். நீ எனக்கும் என் குடும்பத்துக்கும் என் பாட்டிக்கும் செஞ்சதெல்லாம் மறந்துட்டியா என்று கேள்வி கேட்கிறாள்.

நான் யாரையும் எதுவும் பண்ணல சிவகாமி அம்மா கூட 20 வருஷமா ரூமுக்குள்ள அடச்சு வச்சிருந்தேனே தவிர அவங்கள நல்லபடியா தான் பாத்துட்டு இருந்தேன். அர்ஜுன் என்னுடைய உயிர் நண்பன் என்று சொல்ல முருகன் சைகையில் உன்னால இனிமே என் அம்மாவுக்கு ஏதாவது ஆபத்து வந்தா உன்ன கொன்னுடுவேன் என்று எச்சரிக்கிறான். பிறகு மகேஷ் முருகனை அடிக்க போக அந்த சமயத்தில் வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்கிறான் வெற்றி. அவங்கதான் உனக்கும் இந்த குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு சொல்றாங்களே எதுக்கு இங்க வந்தீங்க என்று கேட்க மகேஷ் என்ன பிரதர் நீங்களும் இப்படி சொல்றீங்க என்று கேட்கிறான். வெற்றி இது என்னுடைய குடும்பம் என்ன தாண்டித்தான் நீ அவங்கள தொட முடியும் என்று எச்சரித்து மகேஷை அங்கிருந்து வெளியேற்றுகிறான். அடுத்த நாள் கோர்ட்டில் விவாகரத்து கேஸ் விசாரணைக்கு வருகிறது. அஞ்சலி விவாகரத்து கேட்க மகேஷ் அஞ்சலி வயிற்றில் என்னுடைய குழந்தை வளருது அதனால விவாகரத்து தர மாட்டேன் என அதிர்ச்சி கொடுக்கிறான்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

அண்ணா: சீரியலில் நேற்றைய எபிசோடில், குடும்பத்தில் ஒரே பிரச்சனையாக போய்க் கொண்டிருப்பதால் ஜாதகத்தை கொண்டு போய் ஜோசியரிடம் காண்பிக்க குடும்பத்தார் முடிவெடுக்கின்றனர். எல்லோருடைய ஜாதகம் வீட்டில் இருக்க கனியின் ஜாதகம் மட்டும் இல்லை என தெரிய வருகிறது. உடனே கனி என்னை கடத்தியவனிடம் என் ஜாதகம் இருந்ததாக சொல்ல அவனிடம் கனி ஜாதகம் எப்படி போனது? இதற்கு காரணம் பாண்டியம்மாவாக தான் இருக்கும் என சண்முகம் சந்தேகம் கொள்கிறான். ஆனால் பரணி அப்படி எல்லாம் இருக்காது என மறுக்கிறாள். ஆனால் கொஞ்ச நேரத்தில் பரணிக்கு பாண்டியம்மா ஒரு ஒரு நெக்லஸை கழுத்தில் போட்டுக் கொண்டு அழகு பார்த்த விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது. இதனால் பரணிக்கும் பாண்டியம்மா மீது சந்தேகம் உருவாகிறது. பாண்டியம்மா தனது பையில் இருக்கும் கனியின் ஜாதகத்தை மீண்டும் பீரோவுக்குள் வைத்து விட வேண்டும் என திட்டமிடுகிறாள்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

பாரிஜாதம்: நேற்யை எபிசோடில், சுப்ரதா தேவி அதிர்ச்சி அடைந்து விஷாலை அறைந்து எங்கிருந்து வீட்டுக்கு கிளம்பி வருகிறாள். ராகவ் மற்றும் இசை என இருவரும் விஷால் தப்பு பண்ணியிருக்க மாட்டாரு என்று பேசுகின்றனர். ஸ்ரீஜாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து வரும், ராகவ் தனக்கு தெரிந்த டாக்டரை சந்தித்து செக்கப் செய்ய சொல்ல டாக்டர் இரண்டு மணி நேரமாகும் என காத்திருக்க சொல்கிறார். பிறகு ஸ்ரீஜாவை செக்கப் செய்கின்றனர். இந்த விஷயத்தை முன்கூட்டியே பானுமதிக்கு தெரியப்படுத்தியிருக்க பானுமதி டாக்டரை விலைக்கு வாங்க முயற்சி செய்கிறாள். டாக்டர் அதெல்லாம் பொய் சொல்ல முடியாது என்று மறுப்பு தெரிவிக்கிறார். சுப்ரதா தேவி வருத்தம் தாங்காமல் கதவை சாத்திக்கொண்டு ரூமுக்குல் இருக்க, விஷால் வெளியிலிருந்து மன்னிச்சுடுங்க என கெஞ்சுகிறான். ஆனால் சுப்ரதா என் முகத்தில் முழிக்காத என கோபப்படுகிறாள். பிறகு ஹாஸ்பிடலில் ரிப்போர்ட் கிடைக்க அதில் ஸ்ரீஜா விஷாலுடன் ஒன்றாக இருந்தது உண்மை தான் என்று தெரிய வர அனைவரும் மேலும் அதிர்ச்சி அடைகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X