ஜீ தமிழ் சீரியல்கள் நவம்பர் 17ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!
சென்னை: கெட்டி மேளம் சீ நீதிபதி அஞ்சலிடம் உங்களது தரப்பில் ஏதாவது ஆதாரம் இருக்கா என்று கேட்க வெற்றி இருக்கு யுவர் ஆனர் என்று சொல்லி ஒரு பென்டிரைவை கொண்டு வந்து கொடுக்க அதை ஓபன் செய்து பார்க்க வெறும் எம்டியாக இருக்கிறது. இதனால் நீதிபதி கோபமாகி உங்களது தரப்பில் எந்த ஆதாரமும் இல்லை.. உங்களது விவாதமும் சரியாக இல்லை என்றார். மேலும், இருவரும் சேர்ந்து 5 நாள் ஒன்றாக இருங்க.. அதன் பிறகு உங்க முடிவை சொல்லுங்க என்று சொல்ல அஞ்சலி அதிர்ச்சி அடைகிறாள். மகேஷ் நீதிபதிக்கு நன்றி சொல்லி வெற்றிடம் யாரிடம் மோதறீங்க என்று நக்கல் செய்கிறான்.
மேலும் அஞ்சலியிடம் இந்த அஞ்சு நாளில் உன் மனச மாத்தி என்கூடவே கூட்டிட்டு போறேன் என்று சொன்னதும் அவள் அஞ்சி நாள் இல்ல அஞ்சு நிமிஷம் கூட இருக்க முடியாம உன்ன ஓட விடுவேன் என்று சவால் விடுகிறாள். அடுத்து பாட்டியின் உடல்நிலை மோசமாக அமைச்சரிடம் இருந்து அனுமதி வந்தால் தான் சிகிச்சை அளிப்போம் என்று அதிர்ச்சி கொடுக்க லட்சுமி வெற்றிக்கு தகவல் சொல்ல வெற்றி அவனது அப்பாவுக்கு போன் செய்ய அவர் போன் எடுக்காமல் இருக்கிறார்.

அண்ணா: இன்றைய எபிசோடில், சௌந்தரபாண்டியை ராஜாசிங்கம் வழி மறைத்து தனக்கே கொடுக்க வேண்டிய 20 லட்சம் ரூபாய் பணத்தை கொடு என்று பிரச்சனை செய்து கொண்டிருக்க அந்த பக்கம் பரணி மற்றும் சண்முகம் வருகின்றனர். வழியில் சௌந்தரபாண்டி கார் நிற்பதை பார்த்த பரணி வண்டியை நிறுத்த சொல்லி இறங்குகிறாள். பரணி மற்றும் சண்முகம் இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை பார்க்க சனியன் சண்முகம், பரணி பார்ப்பதை சௌந்தரபாண்டியிடம் தெரிவிக்கிறார்.
உடனே சௌந்தரபாண்டி ராஜா சிங்கத்தை அனுப்பிவிட்டு பாண்டியம்மாவிடம் வேறொரு நகை பிரச்சனை குறித்து பேசுவது போல மாற்றி பேச அவங்க பேரு ஏதும் பேசிக்கிட்டு இருக்காங்க என்று சண்முகம் பரணி கிளம்பி விடுகின்றனர். அடுத்ததாக வீட்டிற்கு ஒருவர் வந்து. வீடு பெயிண்ட் எல்லாம் அடித்து ரெடியாகி விட்டது என்று சொல்லி சாவியை கொடுக்க எல்லோரும் என்ன விஷயம் என்று கேட்க அறிவழகன் ரத்னாவுக்கு இதை தெருவிலேயே நான்கு வீடு தள்ளி வாடகைக்கு வீடு பார்த்து இருக்கும் விஷயத்தை சொல்ல சந்தோஷமடைகின்றனர்.

பாரிஜாதம்: சுபத்ரா வீட்டுக்கு வந்ததும் விஷாலின் பாட்டி ஸ்ரீஜாவை கூப்பிட்டு விஷால விட்டுட்டு போயிடு உனக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் தருகிறோம் என்று சொல்கிறாள். ஆனால் சுபத்ரா வேண்டாம் அத்தை நம்ம வீட்லயும் பொண்ணு இருக்கு என்று சொல்லி தடுத்து நிறுத்துகிறாள். பிறகு ஸ்ரீஜா கிரிக்கெட் விசாரிக்க அவள் தனக்கு அப்பா இல்லை அத்தை மாமா தான் வளர்த்ததாக பொய் சொல்கிறாள். இந்த விஷயம் பானுமதிக்கு தெரிய வர அவள் ஸ்ரீஜாவின் அத்தை மாமாவாக நடிக்க ஆட்களை ஏற்பாடு செய்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











