ஜீ தமிழ் சீரியல்கள் நவம்பர் 19ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!
சென்னை: கெட்டிமேளம் சீரியலில் நேற்றைய எபிசோடில் பாட்டிக்கு நல்லபடியாக ஆப்ரேஷன் நடந்து முடிகிறது. இதையடுத்து, துளசி பாட்டிக்கு மாத்திரை வாங்க மெடிக்கல் ஷாப் வருகிறாள். அப்போது அங்கு ஒரு பெண்மணி தீபா சாப்பிடும் அதே மாத்திரையை வாங்குவதை துளசி பார்த்துவிட்டு, நீங்க கர்ப்பமாக தயாராகறீங்களா என்று கேட்க இல்ல, இது குழந்தையை தள்ளி போடுவதற்கான மாத்திரை என்று சொல்கிறாள். இதனால் துளசி குழப்பமடையும், துளசி தீபா சாப்பிடும் மாத்திரை போட்டோவை அனுப்ப சொல்லி அதை மெடிக்கல் ஸ்டோரில் காட்டி இது என்ன மாத்திரை என்று விசாரிக்க. இந்த மாத்திரையை போட்ட குழந்தையை பிறக்காது என்ற விஷயத்தை சொல்ல அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறாள்
அடுத்ததாக தீபா விட்டு வேலை செய்து கொண்டிருக்க அபிராமி மாத்திரை போட்டியா என கேட்டு மாத்திரையை கையில் கொடுக்க தீபா, அதை சாப்பிட போகும் சமயத்தில் இங்கு வந்த துளசி, அதை தப்பி விடுகிறாள். அபிராமி எதுக்குடி இப்படி பண்ற? என் பொண்ணுக்கு குழந்தையே பொறக்க கூடாதுன்னு நினைக்கிறியா? நீ கொண்டு வந்த அனாதை குழந்தையை என் குடும்ப வாரிசா மாத்தலாம்னு பாக்குறியா என்று ஆவேசப்படுகிறாள். ஈஸ்வரமூர்த்தியும் அங்கு வந்துவிட அபிராமி நடந்ததை சொல்ல துளசி இந்த மாத்திரை ஏற்பட்ட குழந்தை பிறக்காது என்று உண்மையை உடைக்கிறாள். மேலும் ஆன்லைனில் செக் பண்ணி பாருங்க என்று சொன்னால் அதை செக் பண்ண துளசி சொன்னது உண்மை என தெரியவந்து அபிராமி அதிர்ச்சி அடைகிறாள். உடனே டாக்டரை பார்க்க கிளம்ப மீனாட்சி அண்ணனுக்கு போன் போட்டு டாக்டரை எப்படியாவது சந்தித்து ஏதாவது பண்ணு என்று சொல்கிறாள்.

அண்ணா: கனியின் ஜாதகத்தை பாண்டியம்மா திருடி, எம்எல்ஏ விடம் கொடுத்தது தெரிந்து சண்முகம் அடிக்க வர பாண்டியம்மாள் வீட்டிற்குள் சென்று ஒளிந்துக்கொண்டு, தப்பித்து சௌந்தரபாண்டி வீட்டிற்கு செல்கிறாள். இனி மேல் இந்த ஊரில் இருந்தால் பிரச்சனை என முடியு செய்யும், பாண்டியம்மா வீட்டை விட்டு கிளம்ப தயாராகிறார். இதனால் கோவிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகையில் பங்கு கேட்கிறாள். கோவிலிலிருந்து திருடன நகை தானே? எனக்கும் இதுல பங்கு இருக்கு என்று சொல்ல சௌந்தரபாண்டிக்கும் பாண்டியம்மாவுக்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது.
ஒரு கட்டத்தில் சௌந்தரபாண்டி பாண்டியம்மாவை தள்ளிவிட தலையில் அடிபட்டு உயிர் போகிறது. இந்த சமயத்தில் சண்முகம் பரணி வீட்டுக்கு வந்து விட சௌந்தரபாண்டி பாண்டியம்மாவின் உடலை ஒரு கபோர்டில் மறைத்து வைக்கிறார். இருவரும் விடும் முழுக்க தேடி பாண்டியம்மா இல்லை என கிளம்புகின்றனர். சௌந்தரபாண்டி பாண்டியம்மாவின் உடலை சண்முகம் வீட்டில் எடுத்துச் சென்று போட்டு பழியை அவன் மீது போட்டுவிடலாம் என்று திட்டமிடுகிறார். ஆனால் முத்துப்பாண்டி போலீஸுடன் வந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வீட்டிற்கு போலீஸ் காவல் போட சண்முகமும் இங்கேயே காவல் காக்க சௌந்தரபாண்டி என்ன செய்வது என தெரியாமல் குழப்பம் கொள்கிறார்.

பாரிஜாதம்: விஷாலுக்கு உடம்பு முடியாமல், காய்ச்சலால் அவதிப்பட இசை மெடிக்கல் ஷாப்பில் இருந்து மாத்திரை வாங்கி வந்து கொடுத்து அவனை பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்கிறாள். அடுத்த நாள் காலையில் விஷால் மற்றும் இசை ஒரே ரூமில் இருப்பதை பார்த்த சிந்தாமணி பிரச்சனை செய்கிறாள். இன்னொரு பக்கம் இசையில் மாமா, ருக்குமணி வீட்டுக்கு வந்து பிரச்சனை செய்கிறான். அடுத்ததாக சிந்தாமணி வீட்டில் உள்ள எல்லோரையும் கூப்பிட்டு இசையை வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என சொல்கிறாள். ஆனால் சுபத்ரா இசையை வெளியே அனுப்ப முடியாது என பதிலடி கொடுக்கிறாள்.


Click it and Unblock the Notifications











