ஜீ தமிழ் சீரியல்கள் நவம்பர் 3ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!

சென்னை: கெட்டிமேளம் சீரியலில் சனிக்கிழமை எபிசோடில், முருகன் ரேவதி பூ அலங்கார வேலைக்காக ரகுவரன் வீட்டிற்கு வந்து பெல் அடிக்க ரகுவரன் இவர்களை பார்த்து அதிர்ச்சிய அடைகிறான். உங்களை யாரு இங்க வர சொன்னது? உங்களுக்கு பத்திரிக்கை கூட வைக்கலையே ஓசி சாப்பாட்டுக்கு வந்துட்டீங்களா? என்று அவமானப்படுத்த நாங்கள் பூ வேலை செய்வதற்காக வந்தோம் என்று சொல்கின்றனர். யார் கிட்டயும் பேசாம வேலைய மட்டும் பாத்துட்டு கிளம்புங்க என்று உள்ளே விடுகிறான்.

அஞ்சலி இன்சூரன்ஸ் பணம் குறித்து பேங்க் மேனேஜருக்கு போன் செய்து பணம் குறித்த விசாரிக்க ரகுவரன் பணத்தை வாங்கிக் கொண்டு சென்றது தெரியவந்து அதிர்ச்சி அடைகிறாள். துளசி அஞ்சலிக்கு ஃபோன் செய்ய அஞ்சலி போன் எடுக்காததால் ஒரு எட்டு பார்த்து வந்துவிடலாம் என்று வெற்றியுடன் கிளம்பி வருகிறாள். ஒரு கடையில் வண்டியை நிறுத்தி பொருட்களை வாங்கும்போது வெற்றி மீனாட்சியின் அண்ணனை பார்த்து அவனை துரத்தி செல்ல துளசி காணாமல் தேடுகிறாள். வெற்றியின் அண்ணன் எஸ்கேப் ஆகிவிட அந்த இடத்தில் ரகுவரனின் வீடு கிரகப்பிரவேசத்திற்கான ஏற்பாடுகள் நடப்பதை வெற்றி கவனிக்கிறான்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

அண்ணா: கனியை காணவில்லை என்ற தகவலை கேள்விப்பட்ட சண்முகம், ஊட்டிக்கு செல்லாமல் கிளம்பி வீட்டிற்கு வருகிறான். ஸ்கூல் அருகே சென்று விசாரிக்க கனி ஆட்டோவில் கிளம்பி சென்றது தெரிய வருகிறது. வீரா ஒரு ஆட்டோக்காரன் மேல தான் சந்தேகமா இருக்கு என்கிறான். அந்த ஆட்டோ பற்றி ஏதாவது அடையாளம் இருக்கா என்று விசாரிக்க ரத்னா ஆட்டோ பின்னாடி வேல் போட்டு இருந்தது என்று சொல்கிறாள். பிறகு பக்கத்தில் இருக்கும் ஸ்டிக்கர் கடையில் விசாரிக்க ஆமா ஒரு ஆட்டோவில் நான் தான் வேல் ஸ்டிக்கர் போட்டு விட்டேன் அது பக்கத்து ஸ்டாண்ட் ஆட்டோ தான் என்று சொல்கிறான். பிறகு ஆட்டோ ஸ்டாண்ட் குறித்து விசாரிக்க சோமு என்பவனின் ஆட்டோ தான் அது வீடு பக்கத்தில் தான் இருக்கிறது என்ற தகவல் தெரிய வருகிறது.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

பாரிஜாதம்: விஷால், இசை திருமணத்தை கெடுக்க திட்டம் போடும் பானுமதி, ஸ்ரீஜாவை அழைத்து நீ விஷாலை ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துவிடு என்று ஐடியா கொடுக்கிறாள். பிறகு ஸ்ரீஜா விஷாலிடம் இதுகுறித்து பேசுகிறாள். எனக்கு இங்கு நடப்பதை எல்லாம் பார்த்தால் பயமாக இருக்கிறது. உண்மையிலே என்னை நீ காதலிப்பதாக இருந்தால், நாளைக்கு நாம ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து கொள்ளலாம் என்கிறாள். ஸ்ரீஜா அழுததால், மனம் இறங்கிய விஷால், சம்மதம் தெரிவிக்கிறான்.

இதனைத் தொடர்ந்து இருவரும் வீட்டுக்கு தெரியாமல் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்வதற்கு திட்டமிடுகின்றனர். அதுமட்டுமின்றி பானுமதி ஒரு தாலியை வாங்கி வந்து அதை ஸ்ரீஜாவிடம் கொடுத்து ரெஜிஸ்டர் மேரேஜ் முடிந்ததும் விஷால் கையால் தாலி கட்ட சொல்ல, அதன் பிறகு உங்களை யாராலும் பிடிக்க முடியாது என்கிறாள். இதை வர்ஷினி கேட்டுவிட்டு இசையிடம் சொல்ல, இசை, தன்னுடைய திருமணம் நின்றுவிட்டால், தங்கையின் திருமணமும் நின்றுவிடுமே என்ற பயத்தில் அந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என ரெஜிஸ்டர் ஆபிசுக்கு செல்கிறாள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X