ஜீ தமிழ் சீரியல்கள் நவம்பர் 21ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!

சென்னை: கெட்டிமேளம் சீரியலில் வெற்றி மற்றும் துளசியை கொல்ல மீனாட்சி ஆட்களை அனுப்பிய நிலையில் இன்று நடக்கப் போவதை பார்க்கலாம். அஞ்சலி துளசிக்கு ஃபோன் போட்டு அக்கா எங்க அக்கா இருக்க பாட்டிக்கு ரோபோட்டிக் ஆபரேஷன் என்பதால் வீட்டுக்கு கூட்டிட்டுப் போக சொல்லிட்டாங்க என்று சொல்கிறாள். இந்த சமயத்தில் லாரி ஒன்று துளசியை மோத வர வெற்றி துளசியை இழுத்து காப்பாற்ற இருவருக்கும் காயம் ஏற்படுகிறது. பிறகு வெற்றி பதறிப் போய் துளசியை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்கிறான். டாக்டர் ட்ரீட்மென்ட் கொடுங்க என்று சொல்ல ரெண்டு பேருக்கும் தான் ட்ரீட்மென்ட் தேவைப்படுகிறது என்று கூறுகிறார்.

ஆனால் வெற்றி துளசிக்கு ட்ரீட்மெண்ட் கொடுங்க என்று சொல்கிறான். துளசியை பரிசோதனை செய்த டாக்டர் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என சொல்கிறார். அபிராமி ஹாஸ்பிடலுக்கு வந்து துளசியோட ராசி தான் காரணம் என சத்தம் போடுகிறாள். மறுபக்கம் பாட்டி விஷயம் அறிய உடல்நிலை மோசம் அடைகிறது‌. வெகு நேரத்திற்கு பிறகு துளசி கண் விழிக்க வெற்றி கண்ணீருடன் காதலையும் பதற்றத்தையும் வெளிப்படுத்துகிறான்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

அண்ணா: சௌந்தரபாண்டி பாண்டியம்மாவின் உடலை இடமாற்ற திட்டமிட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்று பார்க்கலாம். சண்முகம் மற்றும் பரணி மொட்டைமாடிக்கு செல்ல சௌந்தரபாண்டி பாண்டியம்மாவின் உடலை கார் ஏற்றிக்கொண்டு கிளம்புகிறார். சண்முகம் பரணி கார் கிளம்பி செல்வதை பார்த்து சந்தேகப்பட்டு காரை பின்தொடர்ந்து வருகின்றனர். ஓரிடத்தில் காரை மடக்கி பிடிக்க பாண்டியம்மாவின் உடல் கார் சீட்டுக்கு அருகில் விழுந்து விடுகிறது. சௌந்தரபாண்டி நாங்க எங்க வேணா போகும் உங்களுக்கு என்ன என்று சொல்லி சமாளிக்க சண்முகம் வழிவிட்டு விட சௌந்தரபாண்டி கிளம்பி செல்கிறார். ‌

அடுத்ததாக வீட்டுக்கு வந்த சண்முகம் நாளைக்கு எல்லாரும் சீக்கிரம் ரெடியாயிடுங்க ஒரு இடத்துக்கு போகணும் என்று சொல்கிறான். அடுத்த நாள் காலையில் எல்லோரும் தயாராக இருக்க சண்முகம் ஒரு புது வீட்டிற்கு அழைத்து வந்து இங்கதான் பால் காய்ச்ச போறோம் என்று சொல்ல யாருக்கு இந்த வீடு என கேட்கின்றனர். ரத்னா அறிவழகன் இனிமே இங்கதான் இருக்க போறாங்க அவங்களுக்கு தான் இந்த வீடு என்று சொல்ல ரத்னா சந்தோஷப்பட்டு அறிவு ஏன் என்கிட்ட சொல்லல என்று கேட்க சண்முகம் தான் சொல்ல வேண்டாம் என்று சொன்னதாக சொல்கிறான்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:
பாரிஜாதம்: கல்யாணத்திற்கு புடவை இருக்கு ஜவுளி கடைக்கு செல்ல முடிவெடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது பார்க்கலாம். அதாவது, ஜவுளி கடையில் விஷால் டல்லாக இருக்க ராகவ் வர்ஷினிக்கு புடவையை தேர்வு செய்து கொடுக்கிறான். இன்னொரு பக்கம் சிந்தாமணி மற்றும் ஸ்ரீஜா ஆகியோர் கூட்டு சேர்ந்து இரண்டு மூன்று புடவைகளை எடுத்து விஷாலிடம் கொடுத்து இதில் ஒற்றை தேர்வு செய் என சொல்ல விஷால் ஒரு புடவையை செலக்ட் செய்து கொடுக்கிறான். வேலைக்கு போன இசை இதே கடைக்கு துணி வாங்க வர வேண்டிய சூழல் உருவாக கடைக்கு வந்த போது ஸ்ரீஜா, சிந்தாமணி பேசுவது தெரிய வர கோபம் கொள்கிறாள். வர்ஷினியை ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறாள். அடுத்ததாக ஸ்ரீஜாவின் தோழியை சந்தித்து இசை உண்மையை சொல்ல சொல்லி மிரட்டுகிறாள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X