ஜீ தமிழ் சீரியல்கள் நவம்பர் 22ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!
சென்னை: வெற்றியும் துளசியும் சென்ற கார் விபத்துக்குள்ளான நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில், துளசி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். துளசியை பரிசோதனை செய்த டாக்டர் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என சொல்கிறார். வெகு நேரத்திற்கு பிறகு துளசி கண் விழிக்க வெற்றி, கதறி அழுதபடி உனக்கு மட்டும் எதாவது ஆகி இருந்தா, நான் உயிருடன் இருந்து இருக்கவே மாட்டேன் என்று சொல்கிறான். அப்போது, துளசி நீ என் மீது, எவ்வளவு அன்பு வச்சிருக்கேன்னு எனக்கு இப்பதான் புரிஞ்சது. ஆக்சிடென்ட் நடந்த போது நீ, எவ்வளவு கதறின என்பது, எனக்கு நல்லா கேட்டுச்சு, உண்மையிலேயே நீ என் வாழ்க்கையில வரதுக்கு நான் தான் கொடுத்து வச்சிருக்கணும் ஐ லவ் யூ வெற்றி என துளசி மனதில் மறைத்து வைத்த காதலை சொல்கிறாள்.

அண்ணா: தங்கை ரத்னாவின் விருப்பப்படி சண்முகம், தனியாக வீடு பார்த்து வைக்க, வீட்டில் பால் காய்ச்சும் பங்க்ஷன் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டு இருக்க, அந்த நேரம் ஃபோன் செய்யும் முத்துப்பாண்டி, பாண்டியம்மா அத்தையை யாரோ அடித்து கொன்று, உடலை தூக்கிபோட்டு இருக்கிறார்கள் என்று சொல்கிறான். இதைக்கேட்டு பதட்டப்படும் சண்முகம், இந்த விஷயத்தை பரணியிடம் மட்டும் சொல்லிவிட்டு, வீட்டில் அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். இப்பொழுது இந்த விஷயத்தை யாரிடம் சொல்ல வேண்டாம், நான் சென்று பார்த்துவிட்டு வருகிறேன் என செல்கிறான். பின், பாண்டியம்மாளின் உடல் கிடக்கும் இடத்திற்கு சண்முகம் வர, அங்கு பாண்டியம்மாள் உடல் அருகே அழுதுக்கொண்டு இருக்கும், சௌந்தரபாண்டி, டேய் வெறும் பய மகனே என்னுடைய அக்காவை நீதான் கொன்னுட்ட என கத்தி நாடகமாடுகிறான்.

பாரிஜாதம்: ஆபத்தில் சிக்க இருந்த வர்ஷினியை இசை காப்பாற்றுகிறாள். அந்த நேரத்திற்கு சிந்தாமணி அங்கு வர, ஸ்ரீஜாவை, அந்த வீட்டுக்கு அனுப்பியது நான் தான். உனக்கும் விஷாலுக்கும் கல்யாணம் நடக்கவே நடக்காது. ஸ்ரீஜாவுக்கும் விஷாலுக்கும் தான் கல்யாணம் நடக்கும். உன்னை இந்த வீட்டில் துரத்தி விட்டு, ராகவிற்கு என்னுடைய மகளை நான் திருமணம் செய்து வைப்பேன் என சொல்கிறாள். இதை கேட்டு ஆத்திரப்படும் இசை, என்னுடைய தங்கை வர்ஷினிக்கும் ராகவிற்கும் தான் திருமணம் நடக்கும். சொத்துக்காக நான் சொல்லவில்லை, இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் அவர்களுக்கு நான் நிச்சயம் திருமணம் செய்து வைப்பேன் என சவால் விடுகிறாள்.


Click it and Unblock the Notifications











