தமிழ் சீரியல்கள் நவம்பர் 25ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!

சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று, கும்பாபிஷேகத்தில் தொடக்க விழாவிற்காக முளைப்பாரி எடுக்க வேண்டும் என்று பரமேஸ்வரி பாட்டி எல்லோரையும் கூப்பிட சாமுண்டீஸ்வரி நான் கோவில் கும்பாபிஷேகத்தை பார்க்கத்தான் வந்ததுக்கு இதெல்லாம் செய்ய மாட்டேன் என்று மறுப்பு தெரிவிக்கிறாள். அதன் பிறகு,காளியம்மா ஏற்பாடு செய்த நபர் வெடிகுண்டை அந்த இடத்தில் மறைந்து வைக்கிறான். கார்த்திக் குடும்பத்தினர் எல்லோரும் இங்கே சந்தோஷமாக இருக்கின்றனர். இந்த சமயத்தில் கார்த்திக்கு போன் செய்ய காளியம்மா அது எப்படி உங்கள சந்தோஷமா இருக்க விட்டுடுவேன்.. அங்க ஒரு இடத்துல வெடிகுண்டு வச்சிருக்கேன் என அதிர்ச்சி கொடுக்கிறாள்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

கெட்டிமௌம்: துளிசி, வெற்றி இருவரும் ஸ்ரீகாந்திற்கும் அவரது தாயார் ராஜலட்சுமிக்கு நடந்த விபத்து வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமென காவல்நிலையத்திற்கு சென்று கேட்கின்றனர். ஆனால், அங்கு இருக்கும் இன்ஸ்பெக்டர் முடியாது என்று சொல்ல, இருவரும் சேர்ந்து காவல்நிலையம் முன்பு தர்ணா செய்கின்றனர். இந்த விஷயம் ஈஸ்வரமூர்த்திக்கு தெரியவருகிறது. பின் துளசி, வெற்றி இருவரும் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது ஈஸ்வரிமூர்த்தி, என்னிடம் எதைபற்றியும் சொல்லாம் போலீஸ் ஸ்டேனுக்கு சென்று போராட்டம் செய்தால் என்ன அர்த்தம் என்று கேட்கிறார். அப்போது, வெற்றி, இரண்டு பேரும் பேசி முடிவு செய்துவிட்டுத்தான் போலீஸ் ஸ்டேஷன் சென்றோம் என்று சொல்கிறார்.

'அப்போது வெற்றியின் அம்மா, இப்படி சொல்ல உனக்கு வெட்கமா இல்லையா, உன் பொண்டாட்டி அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்க இருந்தா, அவன் கடைசி நேரத்தில் செத்துப்போனதால் நீ கல்யாணம் பண்ணி இருக்க, அப்படி இருக்கும் போது, அவன் வழக்கை விசாரிக்க போனேன் என்று சொல்வதற்கு உனக்கு வெட்கமா இல்லை என்று கேட்கிறாள். உடனே, இதில், வெட்கப்பட என்ன இருக்கு, நல்ல மனுஷன் இறந்து இருக்கிறார். அந்த விபத்தில் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது அதை மீண்டும் விசாரிப்பதற்காக சென்றோம். இதில் நீங்க தலையிடாதீங்க என்று சொல்கிறான் வெற்றி.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

பாரிஜாதம்: இசை ஸ்ரீஜாவிடம் இந்த கல்யாணம் நடக்காது என்று சவால் விட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, அடுத்ததாக கல்யாண பத்திரிக்கை அடிக்க வேண்டிய வேலைகளை பார்க்க சொன்ன விஷாலின் அண்ணா ராகவ், அந்த வேலைகளை செய்கிறான். ஆனால் கல்யாண பத்திரிக்கை ஸ்ரீஜா பெயருக்கு பதிலாக இசை பெயரை பத்திரிக்கையை அச்சடிக்கின்றனர். பிறகு இசை இந்த பத்திரிக்கையை பார்த்து பீல் செய்கிறாள். ஸ்ரீஜா கல்யாண பத்திரிக்கை தனது அப்பாவிடம் கொடுக்க அவர் இசையின் பெயரை பார்த்து யார் இது என்று கேட்க ஸ்ரீஜா கடும் கோபம் அடைகிறாள். வீட்டுக்கு வந்த ஸ்ரீஜா இசையை பிடித்து அடிக்கிறாள்.

அண்ணா:பாண்டியம்மாலை யார் அடித்து கொன்றது என தெரியாமல், முத்துப்பாண்டி குழப்பத்தில் சண்முகத்திடம் சில விஷயத்தில் சொல்கிறான். பாண்டியம்மாவை, நாம் தேடிக்கொண்டு இருந்த நேரத்தில் தான் யாரை அத்தையை அடித்து இருக்கிறார்கள். அந்த நேரத்தில் தான் அத்தையின் உயிர் போயிருக்கு, அந்த நேரத்தில் அப்பா நம்மக்கூடத்தானே இருந்தார். அப்படி என்றால் யாரை அத்தையை கொன்று இருப்பார்கள் என்று தெரியவில்லை என சொல்கிறான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X