ஜீ தமிழ் சீரியல்கள் நவம்பர் 28ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!

சென்னை: கெட்டிமேளம் சீரியலில் நேற்றைய எபிசோடில் முருகன் வீட்டுக்கு வராததால் வீட்டில் உள்ளவர்கள் பதற்றம் அடைந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். ரேவதி நான் இந்த வீட்டுக்கு வந்த பிறகு தான் எல்லா பிரச்சனையும் நான் இங்க வராமலேயே இருந்திருக்கலாம் என்று கண்கலங்க அவளுக்கு லட்சுமி உட்பட எல்லோரும் ஆறுதல் சொல்கின்றனர். அடுத்ததாக வெற்றி மற்றும் துளசி என இருவரும் கோவிலுக்கு வந்து முருகன் குறித்து விசாரிக்கின்றனர். அங்கும் முருகன் கிடைக்காத நிலையில் அஞ்சலி எனக்கு ஒருத்தர் மேல சந்தேகமா இருக்கு என்று சொல்லி கிளம்பி மகேஷை சந்திக்க வருகிறாள்.

மகேஷ் அஞ்சலியை பார்த்ததும் வா அஞ்சலி என்கூட சேர்ந்து வாழ வந்துட்டியா என்று வரவேற்க அஞ்சலி அண்ணன முருகனை என்ன பண்ண என்று சத்தம் போடுகிறாள். மகேஷ் எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நான் உனக்காகவும் நம்ம குழந்தைக்காகவும் திரும்பி வாழலாம்னு அமைதியா இருக்கேன் என்று சொல்கிறான். ஆனால் அதை ஏற்க மறுக்கும் அஞ்சலி மகேஷ் மீது போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்க போலீஸ் மகேஷை கைது செய்கிறது. மகேஷ் மற்ற கைதிகளை போல என்னையும் ட்ரீட் பண்ணுங்க என்று சொல்கிறான். வெற்றி மகேஷை சந்தித்து உங்க மேல நான் கொஞ்சம் மரியாதை வைத்திருந்தேன். ஆனால் அத நீங்க கெடுத்துக்கிட்டீங்க என்று சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது. அஞ்சலியா வந்து என் புருஷன் மேல எந்த தப்பும் இல்லை என அவர் சொல்ற வரைக்கும் நான் வெளியே வர மாட்டேன் என சொல்கிறான்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

அண்ணா: வீராவையும் மாறனையும் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து இன்ஸ்பெக்டருக்கு தகவல் கொடுக்க அவர் பணத்தை எடுத்து கொண்டு நீங்க அவங்களை பக்கத்துல இருந்து பாத்துக்கோங்க என்று சொல்கிறார். அடுத்து வீராவும் மாறனும் கண் விழிக்க உங்களுக்கு ஒன்னும் இல்ல என்று ஆறுதல் சொல்கிறாள் வீரா. அடுத்து ஜெயிலில் இருந்த இரண்டு ரவுடிகள் இன்ஸ்பெக்டர் பணத்தை எடுத்ததை வீடியோ எடுத்து அதை வைத்து இன்ஸ்பெக்டரை மிரட்ட அவர் நான் என்ன பண்ணனும் என்று கேட்கிறார். ரவுடிகள் இந்த பையை வீரா வீட்டில் கொடுக்கணும் என்று சொல்கிறார். இதையடுத்து ரவுடிகள் அந்த பையை கொண்டு வந்து வீரா கொடுத்தாக சொல்லி கொடுக்க இசக்கி இதை வாங்கி வைக்கிறாள்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

பாரிஜாதம்: ஸ்ரீஜாவின் அப்பா இசையை கடத்த ஆட்களை அனுப்பி வைக்கிறார். மறுபக்கம் நலங்கு வைக்கும் நிகழ்ச்சியில் முதலில் ராகவ் மற்றும் வர்ஷினிக்கு நலங்கு வைக்க தொடங்குகின்றனர். உள்ளே புகுந்த ரவுடிகள் இசையை தேடி அலைகின்றனர். ஒரு கட்டத்தில் ஆளை மாற்றி ஸ்ரீஜாவை கடத்தி விடுகின்றனர். ஸ்ரீஜாவின் அப்பாவிற்கும் நீங்க சொன்ன பொண்ணை கடத்தியாச்சு என்று தகவல் கொடுக்கின்றனர். அடுத்து ராகவ் வர்ஷினிக்கு நலங்கு வைத்து முடித்ததும் விஷாலை மேடை ஏற்றுகின்றனர், ஸ்ரீஜாவை அழைத்து வர சொல்ல அவள் இல்லை என்று தெரிந்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். மறுபக்கம் கடத்தப்பட்ட ஸ்ரீஜா ஒரு குடோனுக்குள் அடைக்கப்படுகிறாள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X