ஜீ தமிழ் சீரியல்கள் நவம்பர் 4ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!
சென்னை: கெட்டிமேளம் சீரியலில் இதுவரை, ரகுவரன் வீட்டு கிரகப்பிரவேசம் நடப்பது குறித்து வெற்றிக்கு தெரிய வந்த நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது, துளசி வீட்டிற்கு வந்து அஞ்சலியை சந்திக்க அவள் கண்ணீருடன் இருக்க என்னாச்சு என்று விசாரிக்கிறாள். அம்மாவை ஏமாற்றி ரகுவரன் கையெழுத்து வாங்கி அப்பாவின் இன்சூரன்ஸ் பணத்தை வாங்கி விட்ட விஷயத்தை சொல்கிறாள்.
இங்கே சிவகாமியும் லட்சுமியும் வருத்ததுடன் பேசிக் கொண்டிருக்க அப்போது அதை பார்த்த கேட்டரிங் ஓனர் ரெண்டு பேரும் பேசிட்டே இருக்கீங்க என்று கோபப்பட்டு திட்டுகிறான். ரகுவரனின் பையன் லக்ஷ்மியை பார்த்து விட்டு ஓடி வந்து கட்டியணைத்து கொள்கிறான். இது எங்க பாட்டி இவங்களை திட்ட கூடாது என்று சொல்ல லட்சுமி பேரனை பார்த்து பெருமிதம் கொள்கிறாள், அடுத்து ரேவதியும் முருகனும் லட்சுமி மற்றும் சிவகாமியை பார்த்து விட நீங்க ஏன் மா இங்க வந்தீங்க என்று பேசுகின்றனர். மறுபக்கம் வெற்றி. துளசிக்கு போன் செய்து ரகுவரன் வீட்டு கிரகப்ரவேசத்தில் இருக்கும் விஷயத்தை சொல்ல இருவரும் கிளம்பி அங்கு வருகின்றனர். இப்படி மொத்த குடும்பமும் வீட்டு கிரகப்ரவேசத்தில் கூடி விட ரகுவரன் ஷாக் ஆகிறான்.

அண்ணா: சீரியலில் நேற்றைய எபிசோடில் சண்முகம் குடும்பத்தினர் ஆட்டோ டிரைவர் சோமுவை மடக்கிப் பிடிக்க முடிவெடுத்த நிலையில் இன்று நடக்கப்போவதை பார்க்கலாம். அதாவது, சண்முகம் குடும்பத்தினர் சோமு வீட்டிற்கு வருகின்றனர். முதலில் பரணி மற்றும் ரத்னா ஆகியோர் உள்ளே சென்று ஆட்டோவில் பேக் தொலைந்து விட்டதாக சொல்லி அவனிடம் பேச்சு கொடுத்து உண்மையை வர வைக்க முயற்சி செய்கின்றனர்.
ஒரு கட்டத்தில் சோமு உஷாராகி அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்ய சண்முகம் ஆகியோர் அவனை மடக்கிப் பிடித்து கனி குறித்து விசாரிக்கின்றனர். சோமு நான் பைபாஸ்ல தான் இறக்கி விட்டேன் எனக்கு வேற எதுவும் தெரியாது என்று சொல்கிறான். மறுபக்கம் எம்எல்ஏ வீட்டில் கேரளாவில் இருந்து நம்பூதிரியை வரவைத்து கனியை மயங்கி வைத்து பூஜையில் உட்கார வைத்து வசியம் செய்வதற்கான வேலையை செய்கின்றனர். மறுபக்கம் ஆட்டோ டிரைவரை அழைத்து வந்து பைபாஸில் இறக்கி விட்ட இடத்தில் விசாரிக்க சிசிடிவி காட்சியில் அங்கிருந்து கனியை காரில் அழைத்துச் சென்றது தெரிய வருகிறது. அந்த கார் நம்பரை குறித்து கனி பற்றி விசாரிக்க முடிவு செய்கின்றனர்.

பாரிஜாதம்: விஷாலும் ஸ்ரீஜாவும் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து கொள்ள போவதாக வர்ஷினிக்கு தெரிய வருகிறது, அடுத்து வர்ஷினி மூலமாக இந்த விஷயம் இசைக்கு தெரிய வந்து இசை அதிர்ச்சி அடைகிறாள். மறுபக்கம் விஷாலும் ஸ்ரீஜாவும் ரெஜிஸ்டர் ஆபிஸ்க்கு வந்து விடுகின்றனர், விஷால் ஸ்ரீஜா கழுத்தில் தாலி கட்ட செல்ல அங்கு வந்த இசை இந்த கல்யாணத்தை நிறுத்துகிறாள். விஷாலை தனியாக அழைத்து சென்று உங்க அம்மா உங்க மேல பெரிய மரியாதை வச்சிருக்காங்க, இந்த கல்யாணத்தை நிறுத்தி உங்களை விட்டு போய்டுவேன். அதனால் ரெஜிஸ்டர் மேரேஜ் வேண்டாம் என்று சொல்கிறாள். இசை சொன்னதை கேட்டு விஷாலும் மனம் மாறுகிறான், விஷால் ஸ்ரீஜாவிடம் இப்போதைக்கு இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொல்கிறான்.


Click it and Unblock the Notifications











