ஜீ தமிழ் சீரியல்கள் நவம்பர் 5ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!

சென்னை: கெட்டி மேளம் சீரியலில் ரகுவரன் துளசியை அடிக்க கை ஓங்க வெற்றி கையைப் பிடித்து அடக்கிய நிலையில் இன்று நடக்கப்போவதை பார்க்கலாம். அதாவது,எதுவாக இருந்தாலும் பேச்சா இருக்கணும், கை வைக்கிற வேலையெல்லாம் வேண்டாம் என சொல்ல தூக்கத்துல தாலி கட்டினவன் தானே நீ என வெற்றியையும் அவமானப்படுத்தி பேசுகிறான். இதனால் துளசி அவர பத்தி பேசுற அருகதை உனக்கு இல்லை என்று கோபப்பட்டு பேசுகிறாள். லட்சுமி பிரச்சனை வேண்டாம் கிளம்பலாம் என்று சொல்ல அவன் பணத்தை எடுத்து வைக்கட்டும் என்று சொல்ல அந்த பணம் நமக்கு வேண்டாம் அவளே வச்சுக்கட்டும், நல்லா இருக்கட்டும் என்று சொல்கிறான்.

லட்சுமி வீட்டில் இருந்து கிளம்ப ரகுவரன் மனைவி இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, சாப்பிட்டு போங்க அத்தை என்று சொல்ல லட்சுமி வேண்டாம் எனக்கு உங்க மேல கோபம் இல்ல வருத்தம் தான் என்று சொல்கிறாள். லட்சுமி கிளம்பும்போது பேரன் ஓடி வந்து பாட்டி சாப்பிட்டு போங்க என்று ஸ்வீட்டைக் கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுக்க எமோஷனல் மொமென்ட் உருவாகிறது. அதன் பிறகு வீட்டுக்கு வந்ததும் தீபாவுக்கு குழந்தை இல்லை என்பதால் கேசவனை பிடித்து திட்டுகின்றனர். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் குழந்தை வேண்டாம் என்று தள்ளி வைத்திருப்பதாக துளசியிடம் சொல்ல வெற்றி அம்மாவுக்கும் பேரப் பிள்ளையை பார்க்கணும்னு ஆசை இருக்கும்ல, நாளைக்கு ஹாஸ்பிடல் போயிட்டு பாத்துட்டு வந்துடலாம் என்று சொல்கிறான்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

அண்ணா : கனியை கடத்திய கார் நம்பரை வைத்து அது யாருடைய கார் என்பதை டிரேஸ் செல்கின்றனர். மறுபக்கம் பாண்டியம்மா எம்எல்ஏ ராஜராஜனுக்கு போன் செய்து சண்முகம் உன்னை நெருங்கி வந்துவிட்டால் உஷாரா இரு என எச்சரிக்கிறாள். இசக்கி பாண்டியம்மா யாரிடம் பேசுகிறார் சந்தேகப்பட்டு அருகே வர உடனே பாண்டியம்மா சுதாரித்துக் கொண்டு சௌந்தரபாண்டியனிடம் பேசுவது போல டிராமா போடுகிறாள்.

பிறகு இங்கே கார் நம்பரை வைத்து அது யார் பெயரில் இருக்கிறது என்று விசாரிக்க தெரிய வந்த பெயரை வைத்து எம்எல்ஏ வீட்டிற்கு கிளம்பி வருகின்றனர். மறுபக்கம் கனியை வைத்து பூஜைகள் நடந்து கொண்டிருக்க இங்கே எம்எல்ஏ வீடு பூட்டப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். அக்கம் பக்கத்தில் விசாரிக்க அவர்கள் விடியற்காலையிலேயே வெளியில் சென்று விட்டது தெரிய வருகிறது.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

பாரிஜாதம்: விஷால் இசை சொல்வதை கேட்டு ஸ்ரீஜாவிடம் இப்போதைக்கு இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொல்ல அவளும் மறுப்பு சொல்ல முடியாமல் சரி என்கிறாள். அடுத்து இசையும் ஸ்ரீஜாவும் நேருக்கு நேராக சந்திக்க இசை, நான் இந்த வீட்டிற்கு மருமகளா வரலைனா கூட பரவாயில்ல, ஆனால் உன்னை மருமகளாக விட மாட்டேன் என்று சொல்கிறாள். பானுமதி சரியான நேரத்துக்கு இசை எப்படி வந்தா என்று குழப்பம் கொள்கிறாள்.

அதன் பிறகு வீட்டிற்கு வந்த ஸ்ரீஜா இசையிடம் நான் விஷாலை கல்யாணம் பண்ணிக்கிட்டா உனக்கு என்ன என்று கோபப்பட இசை விஷால் என்னை தான் காதலிக்கிறாரு, அவர் நெஞ்சுல என் பேரை பச்சை குத்தி இருப்பாரு போய் பாரு என்று சொல்ல ஸ்ரீஜாவும் இதை பார்த்து ஷாக் ஆகிறாள். விஷாலிடம் இது பற்றி கேட்க அவன் தவறுதலாக நடந்ததாக சொல்கிறான், அடுத்து ஸ்ரீஜா விஷாலை கட்டி பிடித்து என்னால் முத்தம் கொடுக்க முடியும்.. உன்னால் முடியுமா? என்று கேட்க என்னால் முடியும் என இசை சவால் விடுகிறாள். பிறகு எல்லாரு

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X