ஜீ தமிழ் சீரியல்கள் நவம்பர் 7ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!
சென்னை: கெட்டிமேளம் சீரியலில், தீபாவிற்கு குழந்தை இல்லாததால், ஹாஸ்பிடலுக்கு சென்று போய் செக்கப் செய்து விடலாம் என்று கிளம்புகின்றனர். மீனாட்சி தனக்கு தெரிந்த டாக்டர் இல்லாமல் வேறொரு டாக்டரிடம் அழைத்து செல்வதால் அதிர்ச்சி அடைகிறாள். ஹாஸ்பிடலில் யாருக்கும் தெரியாமல் அண்ணனுக்கு போன் செய்து ஹாஸ்பிடல் அட்ரஸை கொடுத்து டாக்டரை சந்தித்து பேச சொல்கிறாள்.
பிறகு மீனாட்சியின் அண்ணா டாக்டரை சந்தித்து பேச அவர் நேர்மையானவர் என்பதால் தவறான மாத்திரை கொடுக்க முடியாது, பொய் சொல்ல முடியாது என்று பதிலடி கொடுக்கிறார். ஒரு கட்டத்துக்கு மேல் மீனாட்சியின் அண்ணன் டாக்டரை மிரட்டுகிறான். வெற்றியும் துளசியும் இதே ஹாஸ்பிடலுக்கு வர மீனாட்சியின் அண்ணன் வெளியே வருகிறான்.

அண்ணா: சண்முகம், பரணியை மீண்டும் ஹனிமூன் அனுப்பி வைக்கலாம் என்று அறிவழகன் ஐடியா கொடுக்க வீட்டில் உள்ளவர்கள் அண்ணா கண்டிப்பா போகவே போகாது, அதுவும் கனிக்கு இப்படி ஆகி இருக்கும் போது நிச்சயமா போகாது என்று சொல்கின்றனர். இதையடுத்து குடும்பத்தோட சேர்ந்து சுற்றுலா செல்லலாம் என முடிவெடுக்கின்றனர். இப்போதும் சண்முகம் வர மாட்டான் என்பதால் கனிக்காக செல்லலாம் என்று சொல்லி விடலாம் என்று முடிவு செய்கின்றனர்.
பிறகு சண்முகத்திடம் பேச அவன் நான் வரல என்று சொல்கிறான், கனிக்காக என்று சொல்ல அப்போ நீங்க போயிட்டு வாங்க என்று சொல்கிறான். இறுதியில் ஒரு வழியாக சண்முகத்தை சம்மதிக்க வைக்கின்றனர். சிவபாலனையும் அழைத்து செல்லலாம் என்று சொல்ல இசக்கி அதுக்கு வீரா ஓகே சொல்லணுமே என்று சொல்ல வீரா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல என்று சொல்கிறாள். இதனால் சிவபாலனை அழைக்க சௌந்தரபாண்டி வீட்டிற்கு செல்கின்றனர். மறுபக்கம் கௌதம் வெளியே வர கவிதா ரேப் கேஸ் குறித்து வாக்குமூலம் கொடுத்தால் வெளியேவே வர முடியாது என்று சொல்ல அவன் கவிதாவை சந்திக்க செல்கிறான்.

பாரிஜாதம்: இசை சவால் விட்டது போல, குடும்பத்தினர் முன்னிலையில் விஷாலுக்கு முத்தம் கொடுத்ததால், கடுப்பான ஸ்ரீஜா குடிபோதையில் கார் ஓட்டி போலீஸில் சிக்கிய நிலையில் இன்று நடக்கப்போவது பார்க்கலாம். அதாவது ஸ்ரீஜா குடித்துவிட்டு கார் ஓட்டியது செய்திகளாக வெளியே வர வர்ஷினி இதை பார்த்து வீட்டில் உள்ள அனைவரையும் அழைக்கிறாள். சிந்தாமணி இதை பார்த்துவிட்டு பவரை கட் செய்து சதி செய்கிறாள்.
பிறகு வீட்டுக்கு வரும் ஸ்ரீஜாவை பின்பக்கமாக சிந்தாமணி அழைத்துச் சென்று தூங்க வைக்கிறாள். அடுத்ததாக பானுமதி வீட்டில் இருக்கும் இசையின் ஒரிஜினல் ஜாதகத்தை எடுப்பதற்காக மங்காவும் ருக்குமணியும் மாறு வேடத்தில் வருகின்றனர். ஊதுவத்தி விற்க வந்தவர்கள் போல வீட்டுக்குள் நுழைந்து ஜாதகத்தை எடுக்கின்றனர். பிறகு அங்கிருந்து வெளியே வரும்போது பானுமதி இவர்களை கண்டுபிடித்து துரத்த ஓடி வந்து ஒளிகின்றனர். அந்த இடத்தில் தள்ளுமுள்ளு நடக்க கடைசியில் ஜாதகம் கோவில் உண்டியலில் விழுகிறது.


Click it and Unblock the Notifications











