ஓவியாவுக்கு பிக் பாஸ் தேவைப்பட்டது போய், இப்போ பிக் பாஸுக்கு தேவைப்படும் ஓவியா #Oviya
Recommended Video

சென்னை: ஓவியாவுக்கு பிக் பாஸ் தேவைப்பட்ட காலம் போய் தற்போது பிக் பாஸுக்கு ஓவியா தேவைப்படுகிறார்.
கோலிவுட்டில் சுத்தமாக மார்க்கெட் இல்லாமல் இருந்தார் ஓவியா. ஓவியா திரையில் வந்தாலே பலர் அவரை கலாய்த்த காலத்தில் பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது.
அவரும் என்ன தான் நடக்கிறது என்று பார்க்கலாம் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

கிண்டல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போராடிய ஜூலியை பிக் பாஸ் வீட்டில் பார்த்த ரசிகர்கள் அவரை கொண்டாடினார்கள். ஓவியாவை கிண்டல் செய்தார்கள், மீம்ஸ் போட்டார்கள்.

ஓவியா
சிசிடிவி கேமரா முன்பு வந்து நின்று வாழைப்பழம் வேண்டும் என்று பாவம் போன்று கேட்ட ஓவியாவை வச்சு செய்தார்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள். அதன் பிறகு நிலைமையே மாறிவிட்டது.

ஜூலி
ஜூலி பொய் பேசுவதை பார்த்த மக்கள் அவரை போலி என்று கூறி ஒதுக்கத் துவங்கினர். திமிராக நடந்தாலும் கேமராவுக்கு முன்பு நடிக்காமல் இருந்த ஓவியாவை மக்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இதையடுத்து ஓவியாவை கொண்டாடினார்கள்.

ட்விட்டர்
ஓவியாவை ரொம்ப பிடித்துப் போகவே அவரின் ரசிகர்கள் ட்விட்டரில் ஓவியா ஆர்மியை துவங்கினர். பிக் பாஸ் மூலம் ஓவியாவுக்கு கிடைத்த ரசிகர் பட்டாளத்தை பார்த்து தமிழ் திரையுலகமே வியந்து போனது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் ஓவியா மீதான மவுசு இன்னும் குறையவில்லை.

பிக் பாஸ்
இருக்கும் இடம் தெரியாமல் இருந்த காலத்தில் ஓவியாவுக்கு பிக் பாஸ் தேவைப்பட்டது. ஆனால் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஓவியா தேவைப்படுகிறார். அதனால் தான் அவரை விருந்தாளியாக அழைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











