»   »  திருமணமான ஆணை 'கரெக்ட் செய்ய' கிளாஸ் எடுக்கும் டிவி சீரியல்கள்!

திருமணமான ஆணை 'கரெக்ட் செய்ய' கிளாஸ் எடுக்கும் டிவி சீரியல்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டிவி சீரியல்களில் கள்ளக்காதல்கள், இருதாரங்கள் என எடுத்து ஒளிபரப்பி அலுத்துப் போன தயாரிப்பாளர்கள் இப்போது திருமணமான ஆண்களை கவிழ்ப்பது எப்படி என்று கிளாஸ் எடுத்து வருகின்றனர்.

மருமகளை கொடுமைப் படுத்தும் மாமியார். நாத்தனாருக்கு குழிபறிக்கும் அண்ணி போன்ற கதைகளை எழுதி போரடித்துப் போன கிரியேட்டிவ் ஹெட்டுகளுக்கு இப்போது திருமணமான ஆணை கரெக்ட் செய்யும் கான்செப்ட் கையில் சிக்கியுள்ளது.

சன்டிவியில் ஒளிபரப்பாகும் 5 சீரியல்களில் இதே கதைதான் இப்போது ஒளிபரப்பாகி வருகிறது.

மருதாணி

மருதாணி

சன் டிவியில் காலையில் 10 மணிக்கு ஒளிபரப்பாகும் மருதாணி தொடரில் மீனாட்சியின் கணவரை கைக்குள் போட்டுக் கொள்ள நினைக்கிறாள் ஒரு பெண். அதற்கு அந்த ஆணின் தாயும் உடந்தையாக இருப்பதுதான் கொடுமை.

முத்தாரம்

முத்தாரம்

பிற்பகலில் ஒளிபரப்பாகும் முத்தாரம் சீரியலில் திருமணத்திற்கு முதல்நாள் மணப்பெண்ணை ஏமாற்றிவிட்டு காதலியை திருமணம் செய்து கொள்கிறான் மணமகன். இதற்கு மணப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறாள்.

பெண்ணின் அப்பாவே

பெண்ணின் அப்பாவே

அந்தப் பெண்ணை காப்பாற்றிவிடுகின்றனர் உறவினர்கள். பெண்ணைப் பார்க்கப் போகும் அப்பா, பெண்ணிற்கு செய்யும் அட்வைஸ் அபாயகரமானதாக இருக்கிறது. அவளை வாழ விடாதே. அது உனக்கு பட்டா போட்ட இடம் நீ போய் உட்கார்ந்து கொண்டு அவள் வாழ்க்கையை கெடுக்க வேண்டும் என்கிறார்.

இளவரசி

இளவரசி

திருமணமான சுப்ரமணியத்தை மிரட்டி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள நினைக்கிறாள் மகா. உனது மனைவி செத்துப் போனால் கூட கவலையில்லை. உன்னையும், உன் குழந்தைகளையும் நான் காப்பாற்றுகிறேன் என்ற டயலாக் வேறு அடிக்கிறாள்.

உதிரிப்பூக்கள்

உதிரிப்பூக்கள்

மாலை நேரத்தில் ஒளிபரப்பாகும் உதிரிப்பூக்கள் சீரியலில் திருமணமானவன் என்று தெரிந்தும் அவனை காதலிக்கும் பெண், தன்னை குடிபோதையில் பலாத்காரம் செய்துவிட்டான் என்று கூறி நாடகமாடுகிறாள். இதனால் மனைவியை விவாகரத்து செய்து விட்டு சதி செய்த பெண்ணை திருமணம் செய்ய முயற்சிக்கிறான். பின்னர் உண்மை தெரிய வரவே அந்த பெண்ணை உதறிவிட்டு மனைவியிடம் வந்து சரணடைந்திருக்கிறான்.

வாணி ராணி

வாணி ராணி

இரவு நேரத்தில் ஒளிபரப்பாகும் இந்த தொடரில் மிகப்பெரிய கொடுமை அரங்கேறி வருகிறது. தன்னுடைய மாமன் மகன் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டான் என்று தெரிந்தும் அவளை டார்ச்சர் செய்வதற்காக மாமா வீட்டில் டேரா போடுகிறாள் ஒரு பெண். இதற்கு சொந்த மாமாவே உடந்தை.

கத்தியால் கையை வெட்டுவதும். கொடுமை செய்வதும் அரங்கேறி வருகிறது. இதையும் பொறுமையாக நம் ஊர் இல்லத்தரசிகள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

நிஜத்தில் பாதிப்பு

நிஜத்தில் பாதிப்பு

இதில் 2 சீரியல்கள் ராடான் டிவி நிறுவனத்திற்கு உரியது. முதலில் இருதார திருமணத்திற்கு ஆதரவாக எடுக்கப்பட்ட தொடர்கள் இப்போது இப்படி திரும்பிவிட்டன. திருமணமான ஆண் என்றாலும் பரவாயில்லை டார்ச்சர் செய்தாவது அவனை அடையவேண்டும் என்று அறிவுறுத்தும் இது போன்ற தொடர்களால் நிஜத்தில் நிறைய பேரின் வாழ்க்கை பாதிக்கப்படப்போகிறது என்கின்றனர் டிவி சீரியல்களை எதிர்க்கும் சமூக ஆர்வலர்கள்.

English summary
TV serials in Tamil channels are going to a dangerous path and most of the serials showing the bad side of the men and women.
Please Wait while comments are loading...