twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெண்கள் என்றாலே அழ வேண்டுமா? தலைவிகளாக சித்தரிக்கும் சீரியல்கள்!

    |

    சென்னை: பெண்களை தலைவிகளாக சித்தரிக்கும் சீரியல்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

    தமிழ் சீரியல்களை பொறுத்த வரை, பெண்களை அப்பாவியாகவும், குடும்பத் தலைவியாக மட்டுமே காட்டப்பட்டு வந்த நிலையில், தற்போது கதாநாயகிகளை பிஸினஸ் சாம்ராஜ்யத்தின் தலைவியாகவோ அல்லது ஒரு ஊருக்கு தலைவியாக சித்தரிக்கும் சீரியல்கள் அதிகரித்துள்ளன.

    செம்பருத்தி ஜீ தமிழ்:

    செம்பருத்தி ஜீ தமிழ்:

    ஜீ தமிழ் சேனலின் டிஆர்பி ரேட்டிங்கை உச்சத்தில் கொண்டு நிறுத்திய சீரியல். இதில் பெண் சிங்கமாக, பிஸினஸ் புலியாக ‘ஆதி கடவுர் அகிலாண்டேஸ்வரி'யாக, பிசினஸ் சாம்ராஜ்யத்தையே நிர்வகிப்பவராக கர்ஜிக்கிறார் பிரியா ராமன்.

    லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் சன் டிவி:

    லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் சன் டிவி:

    சன் டிவியில் ஒளிபரப்பாகும் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் மகாலட்சுமியாக லட்சுமி ஸ்டோர்ஸ் துணிக்கடை ஓனராக வருகிறார் நாயகி குஷ்பு. வில்லியாக வரும் சுதா சந்திரன் அதற்கும் மேல். மினிஸ்டர் சகுந்தலா தேவியாக வருகிறார்

    நிலா சீரியல் சன் டிவி:

    நிலா சீரியல் சன் டிவி:

    சன் டிவியின் நிலா சீரியலில் படித்து உலகை ஆள நினைக்கும் இளம் பெண், தன் பெற்றோரையும் தங்கள் சொத்துகளை அபகரித்து பிஸினஸ் ராணியாக வலம் வரும் நீலாம்பரியிடம் இருந்து எப்படி மீட்கிறார் என்பது ஒன் லைன் கதை.

    ஆய்த எழுத்து விஜய் டிவி:

    ஆய்த எழுத்து விஜய் டிவி:

    விஜய் டிவியில் தற்போது புதிதாக ஒளி பரப்பாகும் சீரியல் ‘ஆய்த எழுத்து'. இதில் ஊரையே கைக்குள் வைத்திருக்கும் காளி அம்மாவாக நடிகை மவுனிகா புது கெட்டப்பில் வருகிறார். அவரது கொட்டத்தை அடக்க வரும் சப் கலெக்டராக வருகிறார் ஸ்ரீது நாயர். இவர் ஏற்கனவே விஜய் டிவியின் கல்யாணமாம் கல்யாணம் சீரியலில் நடித்தவர்.

    சீரியல் கதாநாயகிகள் என்றாலே அழுது வடியும் முகத்தோடு இருப்பார்கள் என்பதை மாற்றி வருகின்றன தற்போது ஒளிபரப்பாகும் சீரியல்கள்.

    English summary
    Nowadays tamil TV serials start to potray womans as leaders.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X