ஜீ தமிழ் சீரியல்கள் அக்டோபர் 14ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!

கெட்டிமேளம்: நேற்றைய எபிசோடில் மகேஷுக்கு மதியாக வந்திருப்பது அஞ்சலியா என்ற சந்தேகம் வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்று பார்க்கலாம். அதாவது மகேஷ் அஞ்சலிக்கு மயக்கம் மருந்து கொடுத்து தூங்க வைக்கிறான். அதன் பிறகு பிளட் சாம்பிள் எடுத்து டாக்டருக்கு அனுப்பி வைக்கிறான்.

அடுத்த நாள் காலையில் மகேஷ் போன் பேசிக்கொண்டே நடந்து வரும் போது டிவி ப்ளர்ராக தெரிகிறது. இதனால், தெரிந்த ஒருவரை வீட்டுக்கு வர பார்க்க, டிராக்கர் இருப்பது தெரிய வருகிறது. தான் பேசுவது எல்லாம் யாரோ ஒருவர் ஒட்டு கேட்கிறார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சி அடையும் மகேஷ் அது யார் என்பதை கண்டுபிடிக்க ஒரு மாஸ்டர் பிளான் போடுகிறான். ரவுடிகளுக்கு போன் போட்டு முருகனின் அம்மாவை பத்திரமா பாத்துக்கோங்க என்று இருக்கும் இடத்தை சொல்லி சொல்லி பேச அஞ்சலி இதையெல்லாம் போட்டு கேட்கிறாள். பிறகு அஞ்சலி முருகனின் அம்மாவை காப்பாற்ற கிளம்பி செல்கிறாள். மகேஷ் இன்னொரு ஃபோனில் இருந்து போன் போட்டு முருகனின் அம்மாவை காப்பாற்ற யார் வந்தாலும் அவங்கள கொன்னுடு என்று சொல்கிறான்.

இங்கே பாட்டி, முருகன் குறித்த அனைத்து விஷயங்களையும் லட்சுமியிடம் சொல்ல லட்சுமி அதிர்ச்சி அடைகிறாள். துளசிக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல துளசி தனக்கு ஏற்கனவே இந்த விஷயங்கள் தெரியும் என்பதை உடைக்கிறாள். அஞ்சலி ஒருவனின் அம்மாவை காப்பாற்ற சென்று இருக்கும் விஷயத்தையும் சொல்ல லட்சுமி உன் கூட நானும் வரேன் என்று துளசியுடன் கிளம்புகிறாள். முருகனின் அம்மாவை காப்பாற்ற வந்த அஞ்சலி ரவுடிகளின் பிடியில் சிக்கிக் கொள்ள மகேஷக்கு டாக்டர் பிளட் சாம்பிள் எல்லாம் ஒத்துப் போகிறது வந்திருப்பது அஞ்சலி தான் என்ற உண்மையை உடைக்கிறார். மகேஷ் ரவுடிகளுக்கு அஞ்சலி எதுவும் பண்ணிடாதீங்க என்று சொல்ல தொடர்ந்து போன் செய்ய ரவுடிகள் போன் எடுக்காமல் இருக்க டென்ஷன் ஆகிறான்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

அண்ணா: நேற்றைய எபிசோடில் சண்முகம் பட்டாசு கடை போடுவதற்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது பைனான்சியர் சண்முகத்திற்கு பணத்தை கொண்டு வந்து கொடுக்க அவர் பணம் வேண்டாம் முத்துப்பாண்டி கொடுத்து விட்டதாக சொல்ல இதை ஒட்டுக் கேட்ட சனியன் சௌந்தர பாண்டிக்கு தகவல் கொடுக்கிறான்.

இதைத்தொடர்ந்து சௌந்தரபாண்டி நாட்டு வெட்டிக்கொண்டு ஒன்றை வாங்கிக் கொண்டு சனியனுடன் சண்முகம் கடைக்கு வந்து பேச்சு கொடுப்பது போல பேசி நாட்டு வெடி குண்டை அங்கு வைத்து விடுகின்றனர். இதையடுத்து சண்முகம் ஆட்டோவில் வீட்டுக்கு மளிகை சாமானை ஏற்றி அனுப்பும் போது நாட்டு வெடிகுண்டு பெட்டியையும் ஏற்றி அனுப்பி வைத்து விடுகிறான். இங்கே வீட்டில் வைகுண்டம் வெளியில் எண்ணெய் சட்டியை வைத்து நாட்டு வெடிகுண்டு இருக்கும் அட்டை பாக்ஸை எடுத்து வைத்து அதில் மீது உட்கார்ந்து பலகாரம் செய்ய தொடங்குகிறார்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

பாரிஜாதம்: தீப்தியின் ஜாதகம் போலி என்பதை கண்டுபிடித்த இசை, ராகவ் மற்றும் வர்ஷினிக்கு திருமணம் செய்து வைக்க செய்து வரும் நிலையில் இன்று நடக்கப் போவது என்பதை பார்க்கலாம். இந்த விஷயத்தை இசை, அனைவரின் முன்பும் சொல்லிவிட சுப்ரதா அதிர்ச்சி அடைகிறாள். ஆனால் பானுமதி இதெல்லாம் பொய் என நாடகம் ஆட தொடங்குகிறாள். இதனால் நிச்சயதார்த்த மண்டபத்தில் கடும் குழப்பமும் வாக்குவாதமும் ஏற்படுகிறது. இசை தன்னுடைய தங்கையின் வாழ்க்கைக்காக இப்படி பொய் சொல்வதாக பானுமதி பழி போட முயற்சி செய்கிறாள். இந்த சூழ்நிலையில் கட்டி போடப்பட்டிருந்த பட்டம்மாள் தனது கட்டுக்களை அவிழ்த்து கொண்டு வெளியே வருகிறாள். இதை பார்த்ததும் பானுமதி ஷாக் ஆகிறாள். பிறகு பட்டம்மாள் சுப்ரதா தேவியிடம் இசை, ராகவ் செய்வது அனைத்தும் உண்மைதான் இவர்கள் ஜாதகத்தை மாற்றி வைத்து தான் இந்த கல்யாணத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள் என்று அவர்கள் பேசியதை சொல்ல சுப்ரதா கடும் கோபம் அடைகிறாள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X