ஜீ தமிழ் சீரியல்கள் அக்டோபர் 15ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!
கெட்டிமேளம்: முருகனின் அம்மாவை காப்பாற்ற வந்த அஞ்சலி ரவுடிகளின் பிடியில் சிக்கிக் கொள்ள மகேஷக்கு டாக்டர் பிளட் சாம்பிள் எல்லாம் ஒத்துப் போகிறது. அது அஞ்சலி தான் என்ற உண்மையை உடைக்கிறார். அதன்பின் மகேஷ் ரவுடிகளுக்கு அஞ்சலி எதுவும் பண்ணிடாதீங்க நான் வந்து பார்த்துக்கொள்கிறேன் என்கிறான். இதையடுத்து இன்றைய எபிசோடில், மகேஷ்,என்னையே நம்ப வைத்து ஏமாத்திட்டல சபாஷ் அஞ்சலி என்று கை தட்டி சென்னை பாஷையில் பேசி அஞ்சலியை கலாய்க்கிறான். அதோடு அஞ்சலியை கத்தியால் குத்துவது போல நாடகமாடுகிறான். இதனால், அஞ்சலி பயப்பட மகேஷ் நான் உன்னையும் என் அம்மாவையும் ஒன்னும் பண்ண மாட்டேன் அஞ்சலி என்று பம்புகிறான். அடுத்து அஞ்சலி என்னது உன் அம்மாவா என்று கேட்க மகேஷ் ஆமா என் அம்மா தான் என்று ட்ராமா போடுகிறான். ஒரு கட்டத்தில் அஞ்சலி என்னை நீ வீட்டிக்குள்ளேவே அடைத்து வைத்தெல்லாம் என் மேலே இருக்க அன்புல தான் என்று நினைச்சிட்டு இருந்தேன். ஆனால், நீ இவ்வளவு மோசமானவனா இருக்க என்று சத்தம் போடுகிறாள். அடுத்து லட்சுமி, துளசி, முருகன் என அனைவரும் அங்கு வந்து மகேஷை சுற்றி வளைத்து கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். லட்சுமி என் புருஷனை என்னடா பண்ண என்று சட்டையை பிடிக்கிறாள்.

அண்ணா: வைகுண்டம் நாட்டு வெடிகுண்டு பெட்டியின் மீது உட்கார்ந்து பலகாரம் செய்ய தொடங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பதை பார்க்கலாம். சண்முகம் வெட்டுக்கிளி ஆகியோர், பட்டாசு கடையில் வியாபாரத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். வீட்டில் வைகுண்டம் பலகாரம் சுட்டுக் கொண்டிருக்கும்போது ஒரு நெருப்பு பட்டாசு பெட்டி அருகே விழுகிறது.
வீட்டில் உள்ளவர்கள் நெருப்பைப் பார்த்து பதறிப் போய் நெருப்பு அனைத்து கொஞ்சம் பார்த்து சூதானமாக இருங்க என்று சொல்கின்றனர். பிறகு எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுகின்றனர். மறுபக்கம் சண்முகத்தின் பட்டாசு கடைக்கு வந்த போலீஸ் கடையில் நாட்டு வெடிகுண்டு இருப்பதாக சொல்லி சோதனை செய்கிறார். சனியன் இதையெல்லாம் மறைந்து நின்று பார்க்க சோதனையை செய்த போலீஸ் நாட்டு வெடிகுண்டு எதுவும் இல்லை என்று சொல்லி கிளம்புகின்றனர். உடனே சனியன் சௌந்தரபாண்டியனிடம் இந்த விஷயத்தை சொல்கிறான். தீபாவளி பலகாரம் கொண்டு வருகின்றனர். பலகாரத்துடன் சேர்ந்து நாட்டு வெடிகுண்டு பெட்டியின் சௌந்தரபாண்டி வீட்டிற்கு வந்துவிட, அது வெடிகுண்டு பெட்டி என தெரியாமல், முத்துப்பாண்டி மற்றும் சிவபாலன் ஆகியோர் அதை கொண்டு போய் ரூமுக்குள் வைக்கின்றனர்.

பாரிஜாதம்: பானுமதியின் திட்டத்தை முறியடித்து இசை நிச்சயத்தை நிறுத்திய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்று பார்க்கலாம். சுப்ரதா தேவி, பானுமதி மற்றும் அவளது மகள் தீப்தியை வெளியே போங்க என்று மண்டபத்தை விட்டு வெளியே துரத்த இசை, சுப்ரதாவிடம் ராகவ் மற்றும் வர்ஷினி இருவருக்கும் ஒருத்தர ஒருத்தர் மனதார காதலிக்கறாங்க, அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கணும் நீங்க தான் மனசு வைக்கணும் என்று சொல்லி கேட்கிறாள்.
அதன் பிறகு வர்ஷினியை மணமகளாக ஏற்று மேடைக்கு அழைத்து வருகிறாள். வர்ஷினி மற்றும் ராகவ் என இருவருக்கும் நல்லபடியாக நிச்சயதார்த்தம் நடந்து முடிய இசை சந்தோஷம் அடைகிறாள். இதே நேரத்தில் விஷால் இசையை கூப்பிட்டு தனது காதல் விஷயத்தை சொல்ல இதைக்கேட்டு இசை அதிர்ச்சி அடைந்து கண் கலங்குகிறாள். ருக்குமணிக்கு விஷயம் தெரிய வர அவள் உன் நிச்சயம் நின்னு போனால் வர்ஷினி கல்யாணமும் நின்னு போயிடும். அதனால இந்த கல்யாணம் நடக்கணும் என்று சொல்லி இசையை நிச்சயதார்த்த மேடைக்கு ஏற்ற விஷால் அதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறான். பிறகு சுப்ரதா விஷாலிடம் மோதிரத்தை கொடுத்து இசைக்கு போட்டு விட சொல்கிறாள்.


Click it and Unblock the Notifications











