கார்த்திக்கின் காதல் வாழ்க்கை யாருடன்? ஆபிஸ் சஸ்பென்ஸ்

By Mayura Akilan

விஜய் டிவியின் ஆபிஸ் தொடர் சுவாரஸ்யமாக விசயங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது.

கார்த்திக்கிடம் காதலை சொல்ல ராஜியும், சூசனுடம் போட்டி போடுகின்றனர்.

பிறந்தநாளில் காதலை வெளிப்படுத்தப் போவதாக சூசன் சொல்லவே, ராஜியும் அதேநாளில் காதலை சொல்லப் போவதாக லட்சுமியிடம் தெரிவிக்கிறாள்.

இதில் யாருடைய காதலை கார்த்திக் ஏற்றுக் கொள்வான் என்பதுதான் இந்தவார எபிசோடுகளின் கதையாக இருக்கிறது.

காதலை சொல்லு ராஜி

காதலை சொல்லு ராஜி

பிறந்த நாளுக்கு முதல்நாள் இரவில் ரொமான்ஸ் உடன் பேசி சிரித்த ராஜி உடனே காதலை சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். சரியாக 12 மணிக்கு காதலை சொல் என்று கூறவே, உன் கண்ணைப் பார்த்து காதலை சொல்லவேண்டும், அதுபிறந்தநாள் பரிசாக கொடுக்கவேண்டும் என்று கூறுகிறாள்.

காணமல் போன ராஜி

காணமல் போன ராஜி

ஆனால் பிறந்தநாளன்று காதலை சொல்வாள் என்று எதிர்பார்த்த நேரத்தில் ராஜியை காணவில்லை. ஆபிசிற்கும் வரவில்லை. எங்கே போனாள்? என்ன ஆனாள் என்பது யாருக்கும் தெரியவில்லை. நண்பர்கள் சூழ, கேக் வெட்டுகிறான்.

காதலை சொன்ன சூசன்

காதலை சொன்ன சூசன்

ஏற்கனவே திருமணமாகி டைவர்ஸ் ஆன சூசன், கார்த்திக்கிடம் காதலை சொல்கிறாள். ராஜி எங்கே போனால் என்ற குழப்பத்தில் இருக்கும் கார்த்திக், சூசனுடன் காரில் செல்லும் போது விபத்தாகிவிடுகிறது.

பழி ஏற்ற சூசன்

பழி ஏற்ற சூசன்

கார்த்திக்கிற்கு பதிலாக சூசன் பழியேற்றுக் கொண்டு சிறைக்குப் போகவே சூசன் மீதான மதிப்பு கார்த்திக்கிற்கு அதிகரிக்கிறது. லாக் அப்பில் இருக்கும் போது கார்த்திக்கிடம் காதலை சொல்கிறார் சூசன்.

சப்போர்ட் செய்த ஹெச். ஆர்

சப்போர்ட் செய்த ஹெச். ஆர்

சூசனை ஜாமினில் எடுக்க வரும் ஹெச் ஆர் டேவிட், ஆபிஸ்ல நாம அடிச்சிக்கலாம். ஆன வெளியில உங்களுக்கு ஏதாவது பிரச்சினைன்னா நான்தான் மொத ஆளா வருவேன் என்று பேசவே, கார்த்திக், விஷ்ணு நெகிழ்ந்து விடுகின்றனர்.

நன்றி சொன்ன சூசன்

நன்றி சொன்ன சூசன்

தன்னை விடுவித்த சூசன், டேவிட்டை பார்த்து நன்றி கூறவே இதெல்லாம் சாதாரணம் என்று கூறி ஆபிஸ்ல இருக்கிறவங்கதான் சொந்தக்காரங்க என்று நெகிழ்கிறார்.

எரிமலை வெடிக்கிறப்ப

எரிமலை வெடிக்கிறப்ப

படத்தில் லஷ்மி, விஷ்ணு டயலாக்குகள்தான் இந்த வார காமெடி. கையை உதறி சிரிக்கிறவனை நம்பக் கூடாது என்று கூறும் லஷ்மியிடம் மறுபடியும் தன்னுடைய டிரேட் மார்க் சிரிப்பை உதிர்க்கிறான். எரிமலை வெடிக்கிறப்ப சிகரெட் பத்தவைக்கிறயே என்று கூறி கமெண்ட் அடிக்கிறாள் லஷ்மி.

ராஜியின் சங்கடம்

ராஜியின் சங்கடம்

இரண்டு நாள் காத்திருப்புக்குப் பின் ஆபிஸ் வரும் ராஜியால் இயல்பாக நடந்து கொள்ள முடியவில்லை. மூவருடனும் ஒட்டாமலேயே நகர்த்துகிறாள்.

காதலை சொல்வாளா?

காதலை சொல்வாளா?

கார்த்திக் மீதான காதலை ராஜி வெளிப்படுத்துவாளா? சூசனுக்கு கார்த்திக் என்ன பதில் சொல்லப் போகிறான்? கார்த்திக்கிற்காக சிறைக்குப் போன சூசனுக்கு ஆபிசில் கிடைக்கும் ரியாக்சன் என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X