கவுரவக் கொலை செய்யப்படுவாரா கார்த்திக்?: 'ஆபிஸ்' திடீர் திருப்பங்கள்!
விஜய் டிவியில் ஆபிஸ் தொடர் 300 வது எபிசோடினை எட்டப்போகிறது. பொறியியல் படித்த இளைஞர்களும், இளைஞிகளும் ஐ.டி நிறுவனத்தில் சந்தோசமாக தொடங்கிய பயணம், காதல், திருமணம், ஊடல் என்று போய்க்கொண்டிருக்கிறது.
பெற்றோர்களுக்குத் தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்ட கார்த்திக் - ராஜி தம்பதியர் ஒரே வீட்டில் நண்பர்களாவே வசிக்கின்றனர்.
ராஜியின் திருமண விவகாரம் அப்பாவிற்கு தெரியவர கணவரை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு வருகிறாள்.
அங்கே ராஜியின் உறவினர், கார்த்திக்கை கவுரவக்கொலை செய்ய திட்டமிடுகின்றனர். தன் தந்தையிடம் இருந்தும் உறவினர்களிடம் இருந்தும் கணவனை ராஜியினால் காப்பாற்ற முடிந்ததா என்பதை இனிவரும் எபிசோடுகளில் விறுவிறுப்பாக காணலாம் என்கிறார் சீரியலின் இயக்குநர்.

ஐ.டி.நிறுவனத்தில் வேலை
கை நிறைய சம்பளம், ஜாலியான வேலை என்று போய் கொண்டிருந்த விஷ்ணு, லட்சுமி, கார்த்திக், ராஜி ஆகிய நால்வர் வாழ்க்கையில் சிக்கல் உருவாகிறது.

குழிபறிக்கும் சூசன்
டீம் ஹெட் சூசன் செய்த சதி மூலம் காதல் ஜோடியான விஷ்ணு - லட்சுமி இடையே பிரிவு ஏற்படுகிறது.

சதிமுறியடிப்பு
அந்த சதியை சாமர்த்தியமாக முறியடித்த விஸ்வநாதன், பிரச்சினைக்கு காரணமான நபரை கண்டுபிடித்து விஷ்ணு நிரபராதி என்று நிரூபிக்கிறார். ஆனாலும் லட்சுமிக்கு சமாதானம் ஏற்படவில்லை.

காத்திருக்கும் விஷ்ணு
தன்னுடைய உண்மையான காதல் லட்சுமிக்கு புரியவரும் என்று விஷ்ணு காத்திருக்கிறான். ஆனால் இனிமேல் உன்னுடன் எனக்கு எந்த ஈர்ப்பும் வராது என்று கூறிவிடுகிறாள் லட்சுமி. இந்த ஜோடி மீண்டும் இணையுமா?

கோவில்பட்டி வீரலட்சுமி
காதல் திருமணம் செய்து கொண்ட ராஜி தன் கணவனுடன் தைரியமாக கோவில்பட்டியில் உள்ள சொந்த வீட்டிற்கு வருகிறாள். அங்கே வரவேற்பு கொடுத்தாலும் கார்த்திக்கை கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிடுகின்றனர் ராஜியின் உறவினர்கள்.

கார்த்திக் தப்புவானா?
அலுவலகத்தில் சிக்கல்களை லாவகமாக தீர்க்கும் கார்த்தி சொந்த பிரச்சினையை சிக்கலின்றி தீர்ப்பானா? சதி வலையில் இருந்து வெளியேறுவானா? என்பதை இனிவரும் எபிசோடுகளில் காணலாம்.


Click it and Unblock the Notifications











