ராஜி – லட்சுமி இடையே விழும் விரிசல்…. ஆபிஸ் சீரியல்
ஐடி கம்பெனியில் பணிபுரியும் நான்கு நண்பர்களுக்கு இடையேயான நட்பு. அவர்களுக்கு இடையேயான காதலை பேசும் ஆபிஸ் சீரியல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
ராஜி, லட்சுமி, கார்த்திக் விஷ்ணு இடையேயான நட்பை பிரிக்க பலவித சதித்திட்டங்களை தீட்டியும் யாராலும் பிரிக்க முடியவில்லை.
ஆனால் விஷ்ணு செய்த ஒரு சின்னத் தவறு நான்கு நண்பர்களின் நட்பு வட்டத்தில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

திருட்டுப்பழி
தன்னுடைய பொறுப்பில் இருந்த புரெஜெக்டரை திருடியது விஷ்ணு என்று கார்த்திக்கிற்கு தெரியவருகிறது. ஆனால் அதை யாருக்கும் சொல்லாமல் மறைத்தும் விடுகிறான்.விஷ்ணு திருடியதால்தான் தன் மீது திருட்டுப்பழி விழுந்தது என்று கார்த்திக்கு நினைக்கிறான்.

கார்த்திக்கின் கோபம்
புரெஜெக்டர் திரும்ப கிடைத்தாலும் தான் திருடியதை கடைசி வரைக்கும் விஷ்ணு ஒத்துக்கொள்ளாமல் இருப்பது கார்த்திக்கு கோபம் ஏற்படுகிறது. தன்மீது திருட்டு பழி சுமத்திய அலுவலகத்தில் இருந்து ராஜினாமா கடிதம் கொடுக்கிறான்.

அடித்த கார்த்திக்
விஷ்ணுவிடம் பேசாமல் இருந்த கார்த்தி அவனை அடித்து விடவே அந்த சோகத்தில் குடித்துவிட்டு லட்சுமியிடம் உளறி கொட்டுகிறான். ஆனால் விஷ்ணுவை அடித்ததை ராஜியிடம் கார்த்தி மறைத்துவிடுகிறான்.

கோபப்பட்ட லட்சுமி
விஷ்ணுவை அடித்த விசயம் கேட்டு லட்சுமிக்கு கோபம் வருகிறது. ராஜிக்கு நடந்த உண்மை தெரியும் என்று நினைத்து அவளிடம் கோபித்துக் கொள்கிறாள்.

நட்பில் விரிசல்
யாராலும் பிரிக்க முடியாமல் இருந்த நண்பர்களுக்கு இடையே விரிசல் ஏற்பட திருட்டு சம்பவம் காரணமாகிவிடுகிறது. கார்த்திக் - விஷ்ணு இடையே ஏற்பட்ட விரிசல், ராஜி - லட்சுமி இடையேயும் ஏற்படுகிறது.

400 வது எபிசோட்
ஆபிஸ் சீரியல் 400 வது எபிசோடுகளை எட்டப்போகிறது. நண்பர்களுக்குஇடையே ஏற்படும் போட்டி, சூசன், டேவிட் ஆகியோருக்கு சாதகமாகிறது. இனி வரும் எபிசோடுகள் பரபரப்பான கட்டத்தை எட்டும் என்கிறார் தொடரின் இயக்குநர்.


Click it and Unblock the Notifications











