காதல் கிசுகிசுவில் சிக்கணும்... ஆபீஸ் விஷ்ணுவின் அட்ராசிட்டி ஆசை

By Mayura Akilan

விஜய் டிவியில் இரவு நேரத்தில் ஒளிபரப்பாகும் ஆபிஸ் சீரியலில் சீரியஸ் ஆன விசயத்தைக் கூட சிரித்து சமாளிக்கும் விஷ்ணுவிற்கு தனி ரசிகர்கள் உள்ளனர்.

டிவி நிகழ்ச்சி தயாரிப்பு பிரிவில் இருந்து இப்போது சீரியலில் நடிக்க வந்துள்ள விஷ்ணு சினிமாவிலும் நுழைந்துள்ளார்.

இதன்மூலம் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த காமெடி நடிகர்களான எம்.எஸ்.பாஸ்கர், சந்தானம், சிவகார்த்திகேயன், இமான் அண்ணாச்சி, மா.பா.கா ஆனந்த், பட்டியலில் இப்போது விஷ்ணுவும் இணைந்துவிட்டார்.

கிரியேட்டிவ் ஹெட்

கிரியேட்டிவ் ஹெட்

சீரியலில் நடிக்கும் முன்பாக விஜய் டிவியில் நிகழ்ச்சி தயாரிப்பு பணியில் இருந்துள்ளார் விஷ்ணு. கிரியேட்டிவ் ஹெட் ஆகவேண்டும் என்பதுதான் விஷ்ணுவின் மிகப்பெரிய கனவாம். கடைசியில் சீரியல் நடிகராகிவிட்டார்.

சீரியல் வாய்ப்பு

சீரியல் வாய்ப்பு

கனா காணும் காலங்கள், கல்லூரியின் கதை சீரியல்களில் நடித்த விஷ்ணு ஆரம்பத்தில் சொதப்பினாலும் அப்புறம் நன்றாக நடிக்க கற்றுக் கொண்டாராம்.

என் நிஜ கேரக்டர்

என் நிஜ கேரக்டர்

ஆபீஸ் தொடரில் என் நடிப்புக்கு மக்கள் தரும் ஆதரவு ஆச்சர்யமா இருக்கிறது. சின்னத்திரையிலும் காமெடி பண்ண முடியும் என்பதை நான் நிரூபித்திருப்பதாக சொல்கிறார்கள் என்கிறார் விஷ்ணு. என் எல்லா நடிப்புக் காட்சிகளும் நிஜ கேரக்டரில் இருந்தே வருகிறது என்றும் கூறுகிறார் விஷ்ணு.

காதல் கிசுகிசுவில்

காதல் கிசுகிசுவில்

சீரியலில் காதலில் கலக்கும் விஷ்ணுவிற்கு நிஜ வாழ்க்கையில் காதல் செட் ஆகவில்லை என்கிறார். ஒருவேலை காதலில் விழுந்தால், சினிமாவில் சிம்பு, நயன்தாரா, ஹன்சிகா, திரிஷா காதல் செய்தி மாதிரி பரபரப்பாக பேசப்படவேண்டும் என்பதுதான் விஷ்ணுவின் ஆசை.

சினிமாவில் நுழையும் விஷ்ணு

சினிமாவில் நுழையும் விஷ்ணு

சீரியலில் பிரபலமான விஷ்ணு தற்போது சினிமாவில் கால்பதித்துள்ளார். படத்தின் பெயர் வெள்ளைக்குதிரையில் ராஜகுமாரான். இதற்குமுன் என்னமோ ஏதோ, பூலோகம் ஆகிய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் தட்டிப்போய்விட்டது. தற்போது வந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன் என்கிறார் விஷ்ணு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X