Azhagu serial: கடவுளே... அழகுக்கு இப்படி ஒரு நிலையா?

சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் நடிகை ரேவதி அழகம்மையாக நடிக்கிறார்.இவருக்கு இணையாக பழனிச்சாமி வாத்தியார் கதா பாத்திரத்தில் காதல்கோட்டை படத்தில் நடித்த சூர்யா நடித்திருக்கிறார்.

இந்த ஜோடிக்கு ரவி, மகேஷ், திருநாவுக்கரசு, காவ்யா என்று நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். இவர்களில் ரவி, மகேஷ், காவ்யா மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதில் ரவிக்கு திருமணம் ஆனதுதான் பெரிய கதை.

ரவியின் நண்பன் ஒரு ஆக்சிடெண்டில் இறந்துவிட, சந்தர்ப்ப வசத்தால் அவனது மனைவி சுதாவை ரவி கல்யாணம் செய்துக்க நேர்ந்துருது.நண்பனுக்கும் சுதாவுக்கும் பிறந்த ஆண் குழந்தையையும், ரவி தனது குழந்தையாக பாவித்து வளர்க்கிறான்.

ரவி சுதா

ரவி சுதா

ரவியை அத்தைப் பெண்ணான பூர்ணா கல்யாணம் செய்துக்க ஆசைப்படறேன். ரவிக்கும், பூர்ணாவை கல்யாணம் செய்துக்கத்தான் விருப்பம். சூழ்நிலைகள் சாதகமாக அமையவில்லை. சுதாவைக் கல்யாணம் செய்து கொண்டதால், பூர்ணாவுக்கு ரவியின் தம்பி மகேஷை கல்யாணம் செய்து வைத்து விடுகிறார்கள்.அண்ணனை காதலித்துவிட்டு, அதே வீட்டில் தம்பியை கல்யாணம் செய்து வைத்தால் எந்த பெண்ணுக்குத்தான் பிடிக்கும்?

பூர்ணா சுதா

பூர்ணா சுதா

சுதாவை வீட்டை விட்டுத் துரத்த பூர்ணா பல்வேறு யுக்திகளைக் கையாண்டு, கடைசியில் சுதா, ரவி இருவருக்கும் ஜாதகம் 27 நாட்களுக்கு அனுகூலமாக இல்லை. இருவரும் பிரிந்து இருக்க வேண்டும் என்று ஜோதிடரை வைத்து பொய் சொல்லிவிடுகிறாள் பூர்ணா.ஆனாலும் இவர்கள் இருவர் ஜாதகத்திலும் இப்போதைக்கு நேரம் சரியில்லை என்று உண்மையைத்தான் சொல்கிறார் ஜோதிடர். இதன் காரணமாக அப்பாவும், ரவியும் சிறிது நாட்களாகள் கிராமத்தில் இருக்கும் பண்ணை வீட்டில் இருந்துவிட்டு வரலாம் என்று கிளம்புகிறார்கள்.

பெண்ணுக்கு பேய்

பெண்ணுக்கு பேய்

அங்கு அவுட் ஹவுஸிலிருக்கும் பெரியவரின் பெண்ணுக்குப் பேய் பிடித்து விடுகிறதாம். அந்த பேயை கோணான்டி வந்து அடித்து விரட்டி ஓட்ட. மன உளைச்சலுக்கு உள்ளாகிறான் ரவி.அந்த பேய் பிடித்த பெண்ணும், வாடா வா... உனக்காக்கத்தான் காத்திருக்கேன்னு சொல்ல இன்னும் குழப்பமாகி விடுகிறது. ரவி தோப்பின் குத்தகையை வேறு உயர்த்தி கேட்கிறான் குத்தகைக்கு நிலத்தை பார்த்துக் கொள்ளும் பெண்ணிடம்.

ஆள் வைத்து

ஆள் வைத்து

அந்த பெண் ஆள் வைத்து ரவியை அடிக்க முயல, அடியாட்கள் தாங்களாக அடிபட்டு கீழே விழுந்து விடுகிறார்கள். ரவிக்கே ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் பல ரவுடிகள் வந்தாலும் அவர்களுக்கும் இதே நிலைதான்.இந்த ஆச்சரியத்தை கண்டு தோப்பை குத்தகைக்கு எடுத்த பெண்மணியும் வியந்து போகிறார்.கடைசியில் ரவி என்று அந்த பெண்ணே இவனை அழைக்கிறாள்.

நண்பன் ரவி

நண்பன் ரவி

நான்தான் சுதாவோட புருஷன் ரவி...என்னைத் தெரியலையா? உன் உடம்பில் அடிபட நான் விடுவேனா. இந்த உடம்பை எனக்குத் தந்துடு. அப்போதான் நான் சுதா கூட வாழ முடியும். அப்புவை கொஞ்ச முடியும். அதுக்காகத்தான் ரவுடிகளிடம் இருந்து உன்னை காப்பாத்தினேன். எப்போது உன் உடம்பை எனக்குத் தருவேன்னு கேட்கிறான் நண்பன்.

அழகு சீரியல் எத்தனை அருமையான குடும்பக் கதையா ஒளிபரப்பாகிட்டு இருந்தது.அதில் இந்த பேயின் இடைச் செருகலை சத்தியமா ஏத்துக்க முடியலை. கதை பண்ண தெரியலேன்னா ஊத்தி மூடிட்டு போங்க சார்... மக்கள் மனசை கெடுத்துகிட்டு....

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X