என் காதல் தேவதையே.... கவிதையாய் நகரும் கார்த்திக்– ராஜி காதல்!

By Mayura Akilan

ஆபிஸ் தொடரில் கார்த்திக் - ராஜி காதல் உறுதியாகிவிட்டது. ஆழமான நட்பு மகாபலிபுரத்தில் அதிகமாகி பின்னர் ஊடலானது. கார்த்திக் மீதான கோபத்தினால் அப்பாவிடம் சொல்லி திருமணத்திற்கு ஏற்பாடு செய்யச் சொல்கிறாள் ராஜி.

சூட்டோடு சூட்டாக ராஜியை பெண் பார்க்க வருகிறான் மாப்பிள்ளை சௌந்தர். இது கார்த்திக்கிற்கு வருத்தம் தருகிறது. சௌந்தர் அழகாக பேசி ராஜியை பிடித்திருக்கிறது என்று கூறவே அவளால் உடனடியாக பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறாள்.

என்ன சொல்லட்டும்?

என்ன சொல்லட்டும்?

பெண் பார்த்துவிட்டு போன உடன் என்ன சொல்வது என்று தெரியாமல் கார்த்திக்கிடம் வந்து கேட்கிறாள் ராஜி. இது நீயாக ஆரம்பித்த பிரச்சினை நீயாக தீர்த்துக் கொள். இதனால் நம்முடைய உறவில் பாதிப்பு வரக்கூடாது என்று ராஜியிடம் சொல்கிறான் கார்த்திக்.

கார்த்திக்கின் கோபம்

கார்த்திக்கின் கோபம்

பெண் பார்த்துவிட்டுப் போன சௌந்தர் ராஜியை அடிக்கடி சந்திக்க வருகிறான். மாலையில் வெளியே செல்ல அழைக்கவே ராஜியும் செல்கிறாள். இது கார்த்திக் கோபத்தை அதிகமாக்கி கண்ணாடியை உடைக்கும் அளவிற்கு போகிறது.

ஊட்டிவிட்ட ராஜி

ஊட்டிவிட்ட ராஜி

கையில் ஏற்பட்ட காயத்தினால் சாப்பிட முடியாமல் கார்த்திக் தவிக்கவே கேண்டீனில் ஊட்டி விடுகிறாள் ராஜி. இவர்களின் காதல் கவிதையாய் நகர்கிறது.

காத்திருக்க வைத்த விஷ்ணு

காத்திருக்க வைத்த விஷ்ணு

வழக்கம் போல காலை நேரத்தில் ராஜியை அலுவலகத்தில் பார்க்க வருகிறான் சௌந்தர். இந்த தகவலை விஷ்ணு மறைத்து விடுகிறான். இதனால் 8 மணிநேரம் காத்திருந்து விட்டு எரிச்சலோடு வெளியேறுகிறான் சௌந்தர். இதனால் ராஜி அனைவரின் மீதும் கோபப்படுகிறாள்.

மன்னிப்பு கேட்ட நண்பர்கள்

மன்னிப்பு கேட்ட நண்பர்கள்

விஷ்ணுவின் செயலுக்காக எல்லோரும் ராஜியிடம் மன்னிப்பு கேட்கின்றனர். ஒவ்வொரு வரும் ஒவ்வொரு ஸ்டைல். அதில் கார்த்திக் மண்டியிட்டு, ராஜியின் கையை பிடித்து மன்னிப்பு கேட்கவே அனைவரும் பழைய கலகலப்புக்கு மாறுகின்றனர்.

சேல்ஸ் டீம் கலாட்டா

சேல்ஸ் டீம் கலாட்டா

சேல்ஸ் டீம் மோகன், மாமா குரூப் இந்த வாரம் காமெடியோடு நகர்ந்தது. மாமா குரூப் பையன் ஒருவன் பெண் பார்க்கப் போகவே, தான் பெண் பார்த்த அனுபவத்தை அங்கலாய் போடு சொன்னார் மாமா. கடைசியில் பெண் வீட்டார் விசாரணைக்கு போட்டுக் கொடுத்து புண்ணியம் தேடிக் கொண்டார் சேல்ஸ் மேனேஜர் மோகன்.

மாப்பிள்ளையை சமாளிப்பார்களா?

மாப்பிள்ளையை சமாளிப்பார்களா?

ராஜி மீது கோபமாக இருக்கும் மாப்பிள்ளை சௌந்தர் அவளது அப்பாவிடம் என்ன சொன்னான். கார்த்திக் மீதான காதலை ராஜி எப்படி சொல்லப் போகிறாள். அவள் வேலையில் தொடர்வாளா? காதல் ஜெயிக்குமா என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X