Malar serials: பொண்ட்டாட்டியை உள்ளங்கையில் வச்சு தாங்கறது இதுதானா?
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் மலர் சீரியலில் மலர் கதிரேசன் கல்யாணம் நல்லபடியா நடந்து முடிஞ்சுது. இந்த கல்யாணத்துக்கு திருமணம் சீரியலின் ஜனனி, சந்தோஷ் கூட வந்திருந்தார்கள். சிறப்பாக கல்யாணம் நடந்து முடிந்து. இப்போது கதிரின் அறைக்குள் அவன் உயிருக்கு உயிராக நேசித்த மலர்.
பெரியவர்கள் பார்த்து நிச்சயித்த கல்யாணம் என்றாலும், கதிர் மலரை ரொம்ப காதலித்தான் .மலரும் தன்னைப் பார்த்து ஐ லவ் யூ சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால், அதுதான் நடக்கவில்லை. காவல் துறை உதவி ஆணையர் கதிர் முன்னால் தான் ஒரு கொலைகாரி என்கிற பயத்திலேயே இதுவரை இருந்து வருகிறாள் மலர்.
கல்யாணம் முடிந்த நிலையில் மலருக்குள் காதல் மலர் பூத்து குலுங்கிய அந்த முதலிரவில், அவள் தொடர்புடைய கொலை கேஸ் பற்றியே கதிர் பேச வியர்த்து விறுவிறுத்து அவனின் ரொமான்ஸ் அனுபவிக்க முடியாமல் மயங்கி விழுந்துடறா.

மலர் மயங்கிட
மலர் மயங்கிட துடிதுடித்து போய், அம்மாவை அழைத்து வந்து பின்னர் டாக்டரை அழைத்து பெரிதுப படுத்தி விடறான் கதிர். கதிரின் அப்பா ஒய்வு ராணுவ அதிகாரியாச்சே.. சும்மா இருப்பாரா.. அந்த பொண்னு ஏன் சடங்கு சம்பிரதாயம்னு பாடாய் படுத்தறீங்க. அவளுக்கு ஒய்வு வேணாமா நீங்களே முடிவு எடுத்துருவீங்களா, என்கிட்டே ஒரு வார்த்தை கேட்க மாட்டீங்களான்னு கத்தறார்.

பூஜாவின் அம்மா
கதிரின் அத்தையும் பூஜாவின் அம்மாவுமான அந்த பெண்மணி வந்து, மலருக்கு இதுக்கு முன்னாடி மயக்கம் வந்திருக்கா...எதனால அப்படி மயக்கம் வருதுன்னு விசாரிக்க ஆரம்பிச்சுட்டா, மலரின் அம்மாவும், அப்பாவும் தயங்கிவிட்டு அவளை மதிக்காம எழுந்து போயிடறாங்க. கல்யாணத்தில் இப்படி எல்லாம் நடந்தால் பெண்களோ அல்லது ஆண்களோ இப்படி பேசுவது வழக்கம்தான். இனி அது மாதிரி எதுவும் கேட்க கூடாது என்று நாமே நல்லதாக எடுக்க வேண்டும்.

இளநீருடன் கதிர்
மலரை இரவு முழுக்க பாதுகாப்பாக காத்து தூங்க வச்சுட்டு, விழித்து இருந்த காதிர் காலையில் அவளுக்கு சமாதானம் சொல்கிறான்.சாரி மலர்.. நன் ஏதேதோ பேசிட்டேன்ன்னு சொல்றான். அவளை விளக்கேத்தனும்ணு குளிக்க சொல்லிட்டு போறாங்க மாமியார். அப்போது அவள் கிளம்பு, அதற்குள் இளநீருடன் வர்றான் கதிர். இந்த மலர் இதை குடிச்சுட்டு பொண்ணு சொல்ல, இல்ல அத்தை குளிச்சுட்டு வர சொன்னாங்கன்னு சொல்றான்.

இளநீர் குடிச்சுட்டு
இளநீர் குடிச்சுட்டு குளி மலர்னு இவன் சொல்ல, அவ கையில் வைத்திருந்த புடவையை கீழே வைக்கப்போக, இல்லை நான் பிடிச்சுக்கறேன்.நீ ஸ்ட்ராவால் குடின்னு இளநீரை பிடிச்சுக்கிட்டு நிக்கறான் கதிர். அப்போது அவனுக்கு போன் வர இதை பிடிச்சுக்கோ மலர் நான் போன் பேசிட்டு வரேன்னு சொல்றான் மலர் இளநீரை தனது காலில் போட்டுக்கொண்டு, அம்மான்னு கத்தறா. துடித்துப் போன கதிர் அவளை கட்டிலில் உட்கார வச்சுட்டு மருந்து எடுத்து வர போகிறான்.

மருந்து மயிலிறகு
வரும்போது மயிலிறகு மருந்து எடுத்து வர்றான்.அவள் பாதத்தை தனது உள்ளங்கையில் தாங்கி,, பாதத்தின் மேல் பகுதிக்கு மயிலிறகால் மருந்தை இதமாகத் தடவி விடறேன்.இப்போது மலருக்குள் காதல் பூ பூக்குது.அதை ஓர கண்ணால் பார்த்து சிரிச்சுக்கறான் கதிர்.கதிர் சிரிச்சதை பார்த்து மலரும் சிரிச்சுக்கறா.எவ்ளோ அழகான கணவன் மனைவியாக காணப்படுகிறார்கள் இந்த காட்சியில்.


Click it and Unblock the Notifications











