சரியா டிரஸ்ஸை போட்டுக்கிட்டா ஸ்பெஷல் கிஸ்ஸா... அப்டீன்னா எப்புடி அது?
சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் எல்லாரும் சிங்கப்பூர் டிரிப் போறாங்க.வினோதினி-ஹரீஷ் ஹனிமூனுக்கு, வீட்டில் இருக்கும் பெரியவங்க தவிர அத்தனை ஜோடிகளும் கிளம்பிட்டாங்க.
செம்பாவா நடிக்கற ஆல்யா மானஸா, சஞ்சீவ் ரெண்டு பேருக்கும் உண்மையா என்கேஜ்மென்ட் ஆகிருச்சு.கல்யாணம் எப்போன்னு இன்னும் அறிவிக்கலை. இந்த சமயத்துலதான் ராஜா ராணி குடும்பம் சிங்கப்பூர் போறாங்க.

நடிப்புன்னாலே ரொமான்ஸ்ல பின்ற செம்பாவும், சஞ்சீவும் உண்மையாவே ரொமான்ஸ் பண்ணவும் நல்ல வாய்ப்பு கிடைச்ச மாதிரி இந்த சிங்கப்பூர் ட்ரிப் அமைஞ்சு இருக்குன்னுதான் சொல்லணும்.
எல்லா ஜோடிகளும் சிங்கப்பூர் போறதுக்காக டிரஸ் பர்ச்சேஸ் பண்ண போறாங்க. செம்பாவுக்கு மாடர்ன் டிரஸ், ஹை ஹீல்ஸ் செப்பல்ன்னு வாங்கித் தர்றான். டிரஸ்ஸை போட்டு பார்க்கறேன்னு உள்ள போன செம்பா கதவைத் திறக்க முடியாம மாட்டிக்கறா..

சின்னய்யா சின்னையான்னு கத்த, அவன் கதவைத் தள்ளறான் கதவு திறந்துக்குது.. அவளை பாவாடை சட்டையில் பார்த்த கார்த்திக் அசந்து போயி பார்க்கறான். என்ன சின்னய்யா நானே வெட்கத்துல இருக்கேன்..நீங்க அப்படி பார்க்கறீங்கன்னு கேட்கறா.
இந்த டிரஸ்ல நீ ரொம்ப அழகா இருக்கே செம்பான்னு சொல்றான்.ரெண்டு பேரும் ஒருவரை ஒருவர் பார்த்து மெய் மறந்து பாட்டு போட்டு காதல் செய்ய..வடிவு வந்து கலைக்கறா.

புத்தம் புது ஜோடி வினோதினி ஹரீஷ் இருக்காங்களே அவங்க எப்படி தெரியுமா டிரஸ் பர்ச்சேஸ் பண்றாங்க...வினோதினிக்கு தேவையான டிரஸ்ஸை எல்லாம் ஹரீஸ் செலக்ட் பண்ணி இவளுக்கு தெரியாமலே அவன் சஸ்பென்ஸா வைக்கணுமாம். அதையும் இந்த நாளைக்கு எந்த டிரஸ்ஸுன்னு குறிச்சு வச்சுடணுமாம்.

அதே மாதிரி ஹரீஷ்க்கு தேவையான டிரஸ்ஸை வினோதினி செலக்ட் செய்து, அதே போல வைப்பாளாம் . சிங்கப்பூர்ல போயி, குறிச்சு வச்ச டிரஸ்ஸை ரெண்டு பேரும் சரியா போட்டுகிட்டா ஸ்பெஷல் கிஸ்ஸாம்..
பார்க்கலாம்.. சிங்கப்பூர்ல என்ன நடக்குதுன்னு...!


Click it and Unblock the Notifications











