உற்சாகத்திற்கு காரணம் பழைய பாடல்கள்தான் : தொகுப்பாளர் ஸ்ரீதேவி

By Mayura Akilan

Anchor Sridevi
ஒரு நிகழ்ச்சியின் வெற்றிக்கு அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் காரணமாக அமைந்துவிடுகின்றனர். ஜெயா டிவியில் தேன்கிண்ணம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்ரீதேவியும் அப்படித்தான்.

புதிய பாடல்களைவிட பழைய பாடல்களுக்குத்தான் இப்பொழுது ரசிகர்கள் அதிகமாகிவருகின்றனர். இதனால் காலை நேரத்தில் சன், ஜெயா, மெகா, வசந்த், ராஜ் என பெரும்பாலான டிவிகளில் பழைய பாடல்களே ஒளிபரப்பாகின்றன. ஜெயா டிவியில் பழைய திரைப்படங்களின் பாடல்களை தொகுத்து வழங்கும் ஸ்ரீதேவிக்கு புதிய பாடல்களை விட பழைய பாடல்கள்தான் உற்சாகத்தை தருகின்றனவாம்.

மற்ற டி.வி.க்களில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஜெயா டி.வி.யின் "தேன் கிண்ணம்' நிகழ்ச்சிக்கான ரசிகர்கள் பல தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள். சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லோரும் ரசிக்க கூடிய இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது பெருமையாக இருக்கிறது. தலைமுறை இடைவெளியில் சில சமயங்கள் இது மாறிவிட்டாலும், சில பாடல்கள் மட்டும் காலம் கடந்து நம் உதடுகளால் முணுமுணுக்கப்படுகிறது. ஏனென்றால் நாம் இன்னும் பழமையின் சாயல்கள்தான் என்கிறார் ஸ்ரீதேவி.

தேன் கிண்ணம் நிகழ்ச்சியை வழங்கியதிலிருந்து ஸ்ரீதேவியின் நண்பர்களும் இப்போது பழைய பாடல்களின் தீவிர ரசிகர்கள் ஆகிவிட்டனராம். தேன் கிண்ணம் நிகழ்ச்சிக்கு முன்பு பொதிகை டி.வி.யில் ஒளிபரப்பாகி வந்த "கதை கதையாம் காரணமாம்' என்ற நிகழ்ச்சியையும் ஸ்ரீதேவிதான் தொகுத்து வழங்கியுள்ளார். தேன் கிண்ணம்' பழைய பாடல்களில் தொகுப்பு என்றால், அந்த நிகழ்ச்சி பழைய சினிமா காட்சிகளின் தொகுப்பு.

ஸ்ரீதேவிக்கு பழைய பாடல்களைப் போல பரத நாட்டியத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நேரம் போக, மற்ற நேரங்களில் பரத நாட்டியம்தான் பிராக்டீஸ் செய்கிறார். தீவிர சினிமா ரசிகையான ஸ்ரீதேவிக்கு சினிமா, சீரியல் தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் வந்தாலும் அவற்றில் நடிக்க ஆர்வம் இல்லையாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X