குண்டானவர்களை ஒல்லியாக்கும் விஜய் டிவியின் ‘ஒல்லி பெல்லி’

By Mayura Akilan

விஜய் டிவியில் இன்று முதல் ஒளிபரப்பாகும் புத்தம் புதிய நிகழ்ச்சி, ''ஒல்லி பெல்லி.''

இதில் சராசரிக்கும் அதிகமான பருமன் உள்ள பெண்களும், ஆண்களும் பங்கு பெறுகிறார்கள். சுமார் 90 கிலோவிற்கு அதிக எடையுள்ள பெண்களுக்கும், ஆண்களுக்கும் இந்த போட்டிகள் நடத்தப்படும். தற்போதைய காலகட்டத்தில் மக்கள் சந்திக்கும் உடல் பருமன் பிரச்சனையை வைத்து இந்த நிகழ்ச்சி வடிவமைக்கபட்டுள்ளது....

கச்சிதமான எடை

கச்சிதமான எடை

சுமார் 14 போட்டியாளர்கள் பங்கு பெறுவர். அவர்களுக்கு வித்தியாசமான போட்டிகள் நடத்தப்பட்டு இறுதியில் தேர்வாகும் போட்டியாளர்களை கச்சித எடைக்கு கொண்டுவந்து அவர்களை வயதிற்கு ஏற்ற எடையை அடையச் செய்வதே நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

14 போட்டியாளர்களின் எடை குறைப்பு

14 போட்டியாளர்களின் எடை குறைப்பு

14 போட்டியாளர்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இரண்டு அணிகளுக்கு இடையேயும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, இறுதியில் தேர்வாகும் போட்டியாளர்களை, அவர்களது வயதிற்கு, உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை அடையச் செய்கின்றனர்.

யோகா முதல் உணவு வரை

யோகா முதல் உணவு வரை

நிகழ்ச்சியின் புதுமை என்னவெனில் அனைத்து போட்டியாளர்களும் தங்களுடைய தினத்தை யோகா உடன் துவங்க வேண்டும் மேலும் உணவு பழக்கம்,ஜிம்,டான்ஸ்,என அனைத்தும் கற்றுக்கொடுக்கப்பட உள்ளது.போட்டியாளர்கள் எப்போது நடுவர்களின் கண்காணிப்பில் இருப்பார்கள்.

பார்வையாளர்களும் குறைக்கலாம்

பார்வையாளர்களும் குறைக்கலாம்

வீட்டிலிருந்தபடி நிகழ்ச்சியை பார்க்கும் அனைவரும் கூட, எடையை எப்படி குறைப்பது என்பதையும் இந்த நிகழ்ச்சியை பார்த்து தெரிந்து கொள்ளலாம். சனி மற்றும் ஞாயிறுகளில் மாலை 6 மணிக்கு இந்த ‘உடற்கட்டமைப்பு' நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X