நீரில்லா நீச்சல் குளத்தில் விழுந்து சாண்டி மயக்கம்: பரபரக்கும் BiggBossTamil3 வீடு

By Siva

Recommended Video

Bigg boss 3 Tamil: Day 1 Today Promo 1: நீரில்லா நீச்சல் குளத்தில் விழுந்த சாண்டி- வீடியோ

சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கியுள்ள நிலையில் புதிய ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி நேற்று இரவு பிரமாண்டமாக துவங்கியது. கடந்த சீசனை போன்றே இந்த சீசனிலும் வீட்டில் நீச்சல் குளம் உள்ளது. ஆனால் அதில் நீர் இல்லை. அதை பார்த்த ரசிகர்கள் ஏம்பா, நீரில்லாமல் இப்படி வைத்திருக்கிறீர்களே, யாராவது விழுந்து விட்டால் பிரச்சனையாகிவிடும் என்றார்கள்.

அவர்கள் சொன்னது பிக் பாஸ் காதில் விழுந்துவிட்டது. நம்மை விட பிக் பாஸ் தான் சமூக வலைதளங்களில் யார், யார் என்னென்ன பேசுகிறார்கள் என்று கவனித்துக் கொண்டிருக்கிறார்.

சாண்டி

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கிய பிறகு முதல் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் பாட்டை கேட்டு எழுந்து டான்ஸ் ஆடுகிறார்கள். மோகன் வைத்யா சாண்டியுடன் சேர்ந்து ஆடுவது ஆறுதல். இந்நிலையில் நீரில்லாத நீச்சல் குளத்தில் சாண்டி விழுந்து கிடப்பது போன்று காட்டியுள்ளார்கள். அத்துடன் ப்ரொமோ முடிகிறது.

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியை மூன்று சீசன்களாக பார்க்கிறோம். ப்ரொமோவில் காட்டுவது ஒன்று நிஜத்தில் நடப்பது ஒன்று என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும் பிக் பாஸ். இப்படி எல்லாம் சாண்டி கண்ணை மூடிக் கிடப்பதால் அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக நம்பி பதட்டப்பட்டு ஏமாற மாட்டோமே. நீங்க மட்டும் அல்ல நாங்களும் ரொம்ப தெளிவு தான் பிக் பாஸ்.

முத்தம்

காலையில் எழுந்தவுடன் போட்டியாளர்கள் அனைவரும் டான்ஸ் ஆடுவது சரி. அந்த மோகன் வைத்யாவும், சாண்டியும் என்னய்யா செய்கிறார்கள். இந்த கருமத்திற்கு தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்யும் நேரத்தை 8ல் இருந்து 9.30 மணிக்கு மாற்றினீர்களா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மகிழ்ச்சி

பிக் பாஸ் 3 வீட்டில் முதல் நாளே தலைவர் பாடல் போட்டதால் ரஜினி ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி. கவின், முகென், சாண்டி ஆகியோரிடம் இருந்து ரசிகர்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். முகென் நிச்சயம் யாரையாவது காதலிப்பார் என்று நெட்டிசன்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டார்கள். சூதானமாக இருங்க முகென்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X