twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஓணம் ஸ்பெஷல்: கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு

    By Mayura Akilan
    |

    ஓணம், கேரளமக்களின் பாரம்பரியப் பண்டிகை. ஓணம் ‘சத்ய' (Sadya) விருந்தை உலகின் ஆகப்பெரிய பாரம்பரிய விருந்துன்னு சொல்லலாம். பத்துநாளும் மலையாள மக்கள் வீடுகளில் ஓணம் பண்டிகை களை கட்டும்.

    கசவு உடுத்தி, வாசலில் அத்தப்பூ கோலமிட்டு விருந்தினர்களை வரவேற்று வகை வகையாக விருந்து படைப்பார்கள்.

    இந்த விருந்தில் இடம் பெறும் உணவு வகைகளைப் பற்றி கேள்விப்பட்டாலே நாவூறும். தலைவாழை இலை போட்டு வகை வகையாக பரிமாறி அசத்திவிடுவார்கள் மலையாள மக்கள்.

    ஓணம் சத்ய விருந்தில் பரிமாறப்படும் உணவுவகைகளை ஸ்பெசலாக ஒளிபரப்புகிறது புதுயுகம் தொலைக்காட்சி. கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு நிகழ்ச்சியில்.

    அத்தப்பூ கோலம்

    அத்தப்பூ கோலம்

    ஓணத்தின் சிறப்பான அத்தப் பூ கோலமிடும் பெண்கள்.

    சதய விருந்து

    சதய விருந்து

    பருப்பு, நெய், ரசகதலி, பப்படம், எலுமிச்சை, அவியல், துவரன், காலன், ஓலன், இஞ்சிப்புளி, கூட்டுக்கறி, நேந்திரம் வற்றல், சக்கை வற்றல், சக்கை உப்பேரி, மிளகு நேந்திரம்

    எரிசேரி, புளிசேரி

    எரிசேரி, புளிசேரி

    சம்பா அரிசி சாதம், சாம்பார், எரிசேரி, புளிச்சேரி, உள்ளித்தீயல், ரசம்

    பாயச வகைகள்

    பாயச வகைகள்

    பாலாடைப் பிரதமன், பருப்பு பாயாசம், இளநீர் பாயாசம், கடலை பாயாசம், பால் பாயாசம், வல்சியம், இலை அடை, சம்பந்தி, கொத்துமுந்திரி, மாலாடு, நெய்யப்பம், பழம்பொரி

    இஞ்சிப்புளி

    இஞ்சிப்புளி

    கிச்சடிவகைகள், பச்சடி வகைகள், இஞ்சிப்புளி, மாங்காய்க்கறி... இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகும். அதேபோல கொண்டாட்டங்களுக்கும் குறைவில்லை.

    நடனம், கொண்டாட்டங்கள்

    நடனம், கொண்டாட்டங்கள்

    புலிக்களி - கைக்கொட்டுக்களி ரெண்டுமே ஓணத்தோட முக்கியமான கொண்டாட்டங்கள். நான்காவது நாள்ல சிவப்பு, கருப்பு, மஞ்சள்னு உடலெல்லாம் புலி மாதிரி வண்ணத்தினால பூசிட்டு நடனம் ஆடுவாங்க.

    உணவின் வரலாறு

    உணவின் வரலாறு

    இந்த புலிக்களி திருச்சூரில் பிரபலம். இதை யார் ஓணக் கொண்டாட்டத்தில் இணைத்தது. அதன் வரலாறு என்ன? போன்ற தகவல்களுடன் ஓணம் சிறப்பு "கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு" நிகழ்ச்சி ‘புதுயுகம்' தொலைக்காட்சியில் வரும் ஞாயிறு(செப்-07)மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்நிகழ்ச்சியை ஹரி தொகுத்து வழங்கி இயக்குகிறார்.

    English summary
    Onam Special virunthu Konjam Soru Konjam Varalaru On Pudhu Yugam TV on September 7.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X