பார்த்து "வனஜா".. கால் சுளுக்கிடப் போகுது.. இந்த வயசுல இது தேவையா.. !

சென்னை: இந்த வயசில இது தேவையா பார்த்து கால் சுளுக்கு பிடித்து விட போகுது என்று செம்பருத்தி சீரியல் வனஜா மொட்டைமாடியில் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து கலாய்த்து தள்ளுகிறார்கள் ரசிகர்கள்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் தெரியாதவர்களே இருக்க முடியாது .பல வருடமாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது .

முதன்முதலில் ஜீ தமிழ்சேனலை டி ஆர் பி யில் முதலிடத்தில் கொண்டு வந்தது இந்த சீரியல் தான். இந்த சீரியலில் ஒவ்வொரு கேரக்டருக்கும் ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர்.

கழுவி ஊற்றும் வில்லி

கழுவி ஊற்றும் வில்லி

ஹீரோயினுக்கு மட்டுமில்லாமல் வில்லிக்கும் ரசிகர்கள் இருப்பது இந்த சீரியலில் அதிசயமானது தான். அதுவும் வனஜாவின் கேரக்டரை சிலர் தினமும் திட்டி கழுவி கழுவி ஊற்றினாலும் பலர் ரசித்து வருகின்றனர் .அந்த கேரக்டரில் நடிக்கும் நடிகையின் பெயர் லக்ஷ்மி என்பது பலருக்கு தெரியாது. அவரை ஊர் வம்பு லக்ஷ்மி என்று சொன்னால்தான் தெரியும். ஆனால் தற்போது வனஜாவாகவே அனைவரின் மனதிலும் ஒட்டிக் கொண்டார்.

ஜாலியான டான்ஸ்

ஜாலியான டான்ஸ்

இந்த சீரியலில் பல வில்லிகள் இருந்தாலும் வனஜா கேரக்டர் தான் அதிகமாக தினமும் ரசிகர்களால் கழுவி கழுவி ஊத்த பட்டு வரும் .ஆனால் ரசிகர்கள் இப்படி திட்டி தீர்ப்பது கூட எனது நடிப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் தான் என கூலாக இருக்கும் லக்ஷ்மி தான் தற்போது குத்தாட்டம் போட்டிருக்கிறார் .சீரியலில் இவரது குழந்தைத்தனமான முகத்தில் வில்லத்தனத்தை காட்டி இருந்தாலும் வீட்டு மொட்டைமாடியில் இந்த வயதில் இப்படி ஒரு குத்தாட்டம் தேவையா என இவரை கழுவி கழுவி ஊற்றிய ரசிகர்கள் கூட இவரின் இந்த வீடியோவை பார்த்து சிரித்து வருகின்றனர்.

செம மூவ்மென்ட்

செம மூவ்மென்ட்

இவருக்கு இவரை விட உயரத்தில் அதிகமான திருமண வயதில் பையன் இருக்கும்போது மாடல் உடையில் நான் டிரண்டாக போகிறேன் என இவர் ஆடிய ஆட்டம் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது .அதுவும் கடைசியில் பிளாப்பராக முடிந்ததும் அதையும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருக்கிறார் .இதை பார்த்ததும் பலர் சிரித்து வந்தாலும் சிலர் நன்றாகவே கலாய்த்து வருகின்றனர் .

டாப் டான்ஸ்

டாப் டான்ஸ்

செம்பருத்தி சீரியலில் என்னதான் வில்லத்தனத்தை பண்ணி கொண்டு இருந்தாலும் கடைசியில் எல்லாமே பிளாப் ஆக தான் முடிந்து கொண்டிருக்கிறது. அதுபோலதான் இப்ப டான்ஸ் முடிகிறது என சிலர் கூறியிருக்கிறார்கள். அதிலும் சிலர் வில்லி என்றாலே ரசிகர்களின் மனதில் அதே கேரக்டரில் பதிந்துவிடும் .ஆனால் உங்கள் கேரக்டர் அப்படி இல்ல சீரியல் மட்டும் தான் நீங்கள் வில்லி நிஜத்தில் ஒரு காமெடி பீசு என கலாய்த்து தள்ளியிருக்கிறார்கள்.

சிரிக்க வைக்கும் லட்சுமி

சிரிக்க வைக்கும் லட்சுமி

இவர் செம்பருத்தி சீரியல் க்கு முன்பாகவே வம்சம் சீரியலில் ரமாமணி கேரக்டரில் இதேபோலத்தான் வில்லத்தனம் பண்ணிக் கொண்டிருந்தாலும் வயிறுகுலுங்க சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் கேரக்டரை பண்ணிக்கொண்டு இருந்தார் .அதனால் தான் தற்போதும் கூட இவர் என்னதான் கண்களாலே மிரட்டி வில்லத்தனம் பண்ணினாலும் கூட இவரை ஒரு காமெடி பீசு போலத்தான் சிலர் பார்த்து வருகின்றனர் .

வத்திப் போச்சு உடம்பு

வத்திப் போச்சு உடம்பு

வம்சம் சீரியலில் இவர் நடித்துக் கொண்டிருக்கும்போது புசுபுசுவென இருந்த இவர் தற்போது நன்றாகவே உடம்பை குறைத்து செம்பருத்தியில் டெரராக மாறி இருக்கிறார் .இவர் தன்னுடைய பெயரிலேயே ஒரு யூடியூப் சேனல் ஓபன் பண்ணி அதில் இவர் எவ்வாறெல்லாம் உடம்பை குறைத்தார் என ரசிகர்களுக்கு டிப்ஸ் வழங்கிவருகிறார் .இதுவும் லட்சக்கணக்கான வியூஸ்களைத் தாண்டி போய்க் கொண்டிருக்கிறது.

செம பிசி

செம பிசி

சீரியல் யூடியூப் சேனல் என எவ்வளவுதான் இவர் பிஸியாக இருந்தாலும் தற்போது சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார் அதுவும் இளம் கதாநாயகர்களுக்கு போட்டி போட்டுக் கொண்டு நானும் வருகிறேன் என இவர் அடிக்கடி சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் வீடியோக்களையும் போட்டோக்களையும் பதிவிட்டு வருவார் .அந்த மாதிரி தான் தற்போது மொட்டை மாடியில் வீடியோவை வெளியிட்டு அதனை பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் கமெண்டுகளை கொட்டி வருகின்றனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X