Oscars 2023: ஆஸ்கர் விழா.. விருந்தில் பரிமாறப்பட்ட உணவுகள் என்னென்ன தெரியுமா?.. முழு விவரம்
பாடகர் அஜய் கிருஷ்ணாவின் மனைவி பிரசவ நேரத்தில் ஆரம்பத்தில் இருந்து தான் பெற்ற கஷ்டங்களை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் நடைபெற்ற ஆஸ்கர் விருதுகள் விழாவின் விருந்தில் பரிமாறப்பட்ட உணவுகள் குறித்து தெரியவந்திருக்கிறது.
சினிமா உலகின் உச்ச விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. இந்த விருதை பெறுவதுதான் சினிமாவில் இருக்கும் ஒவ்வொருவரின் கனவாக இருக்கும். இதற்காக அவர்கள் கடுமையாக உழைக்கவும் செய்வார்கள். வருடா வருடம் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெறுவது வழக்கம்.

கோலாகலமாக தொடங்கிய 95ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா
ஆஸ்கர் வெற்றியாளர்கள் தேர்வு சில வாரங்களுக்கு முன்பே நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து 95ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் டால்பி திரையரங்கில் இன்று நடைபெற்றது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கியது விழா. ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களில் பணியாற்றிய கலைஞர்கள் டால்பி தியேட்டரில் குழுமினர்.

விருது வென்ற ஆர்ஆர்ஆர்
ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை அந்தப் பாடல் வென்றிருந்ததால் ஆஸ்கரையும் வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதனை பூர்த்தி செய்யும் விதமாக நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற ஆஸ்கர் விருதை தட்டி சென்றது. விருதினை இசையமைப்பாளர் கீரவாணியும், பாடலாசிரியர் சந்திரபோஸும் பெற்றுக்கொண்டனர். அதேபோல் சிறந்த ஆவண குறும்பட பிரிவில் The Elephant Whisperers படம் ஆஸ்கர் விருது வென்றது.

7 விருதுகளை அள்ளிய எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்
இந்த வருட ஆஸ்கர் விருது விழாவில் அதிக விருதுகளை வென்ற படமாக எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் திரைப்படம் இருக்கிறது. டேனியல் க்வானும், டேனியல் ஸ்கெய்னெர்ட்டும் இயக்கிய இந்தப் படமானது சிறந்த நடிகை, சிறந்த இயக்கம், சிறந்த ஒரிஜினல் திரைக்கதை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த திரைப்படம், சிறந்த படத்தொகுப்பு என மொத்தம் ஏழு விருதுகளை அள்ளியிருக்கிறது. மேலும் டேனியல் க்வானும், டேனியல் ஸ்கெய்னெர்ட்டும் இயக்கிய இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் விருதின் கோலாகல விருந்து
இப்படி கோலாகலமாக நடந்த ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் பரிமாறப்பட்ட உணவுகள் குறித்து இப்போது தெரியவந்திருக்கிறது. அதன்படி மீன், மாட்டிறைச்சி, கோழிக்கறி, வறுத்த கோழி, ஐந்து வகையான பாஸ்தா, சிப்ஸ் உள்ளிட்ட உணவுகள் பரிமாறப்பட்டிருக்கின்றன.
முக்கியமாக, ஆஸ்கர் விருது எப்படி இருக்குமோ அதே வடிவத்தில் தயாரிக்கப்பட்ட சால்மன் மீன் உணவான ஸ்மோக்டு சால்மன் ஆஸ்கர் மாட்ஸோ மற்றும் ஜப்பானிய உணவு வகையான மியஜாகி வாக்யூ உணவுகள் விருந்தில் கலந்துகொண்டவர்களை வெகுவாக கவர்ந்த உணவுகளாக இருந்தன.

ஆஸ்கர் விருந்துக்கு சமையல்காரர் யார் தெரியுமா?
ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவை முன்னிட்டு நடந்த விருந்துக்கு பிரிட்டனை சேர்ந்த சமையல் கலைஞர் எலியட் க்ரோவர் தலைமையில் 115 சமையல் கலைஞர்கள் மேற்கூறிய உணவுகளை தயாரித்திருக்கின்றனர். இந்த விருந்துக்கான மெனுவை மூத்த செஃப் வொல்ஃப் காங் பக் தயாரித்திருக்கிறார். இவர் 29 ஆண்டுகளாக ஆஸ்கர் விழாவுக்கான விருந்து மெனுவை தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











