ஓவியா ஆர்மி கவனத்திற்கு.. உங்களுக்கு ஒரு சர்ப்பிரைஸ் தர இருக்கிறார் தலைவி!
பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் செல்ல இருக்கிறார் ஓவியா.
Recommended Video

சென்னை: முதல் சீசன் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஓவியா, மீண்டும் பிக் பாஸ் இல்லத்திற்கு வர இருப்பதாகத் தெரிகிறது.
பிக் பாஸ் முதல் சீசனில் பாதியிலேயே வெளியேறிய போதும், டைட்டில் வின்னரைவிட மக்களிடையே பிரபலமானவர் நடிகை ஓவியா. இன்றளவும் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் குறித்து மக்கள் கேள்வி எழுப்பாமல் இல்லை. அந்தளவிற்கு பிக் பாஸ் என்றாலே ஓவியா என்றாகி விட்டது.
இதனாலேயே சீசன் 2 முதல் நாளன்று மற்ற போட்டியாளர்களுடன் ஓவியாவும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டார்.
ஓவியா:
இந்நிலையில், தற்போது மீண்டும் அவர் பிக் பாஸ் வீட்டிற்கு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தனது டிவிட்டர் பக்கம் மூலம் மறைமுகமாக ஓவியாவே தெரிவித்துள்ளார். ஓவியா ஆர்மியுடன் நடந்த சாட்டில் இது தொடர்பாக அவர் பேசியுள்ளார்.

சீனியர் போட்டியாளர்கள்:
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளர்களான சினேகன், வையாபுரி, ஆரவ், காயத்ரி, ஆரத்தி மற்றும் சுஜா ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் விருந்தினர்களாகச் சென்றிருந்தனர். சுமார் ஒரு வார காலம் அங்கே அவர்கள் தங்கி இருந்தனர்.

ஓவியா வருவாரா?
அப்போதே ஓவியாவும் வருவாரா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்தது. காரணம் கடந்த சீசனில் ஓவியா நடந்து கொண்ட விதம் தான். இயல்பாக, முகமூடி இல்லாமல் அவர் நடந்து கொண்ட விதம் மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஆர்மி ஹேப்பி:
தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் செல்ல விருப்பதாக அவர் மறைமுகமாக கூறியிருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கிராண்ட் பினாலே அன்று அவர் வீட்டிற்குள் செல்வாரா அல்லது அதற்கு முன்னதாகவே வீட்டுக்குள் சென்று போட்டியாளர்களை அவர் சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











