ஷட்அப் பண்ணுங்க, ஸ்ப்ரே அடிச்சிடுவேன், எல்லாம் சிரிப்பா இருக்கு சார்: ஞாபகம் இருக்கா?
Recommended Video

சென்னை: பிக் பாஸ் முதல் சீசனில் ஓவியா சொன்ன சில வாசகங்கள் பிரபலமானது. இந்நிலையில் அவர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி இன்று இரவு துவங்குகிறது. இந்த சீசனில் 8 பெண்கள், 8 ஆண்கள் என்று மொத்தம் 16 பேர் கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 17வது ஆளாக முதல் சீசனில் கலந்து கொண்ட ஓவியா பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

கெஸ்ட்
ஓவியா போட்டியாளராக சென்றிருக்க மாட்டார். நிகழ்ச்சியின் டிஆர்பியை ஏற்ற சில நாட்கள் விருந்தாளியாக தங்குமாறு கேட்டிருப்பார்கள் அதனால் வந்திருப்பார்.

ஷட்அப்
முதல் சீசனில் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஓவியா சொன்ன நீங்க ஷட்அப் பண்ணுங்க என்ற வசனம் ஏகப் பிரபலமானது. ரசிகர்கள் டி-ஷர்ட்டில் எல்லாம் அந்த வாசகத்தை பிரிண்ட் செய்து அணிந்தனர்.

மீம்ஸ்
எல்லாம் சிரிப்பா இருக்கு சார் என்று ஓவியா கூறியதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மீம்ஸ் கிரியேட்டர்கள் இன்று வரை அந்த வாசகத்தை பயன்படுத்துகிறார்கள்.

கிண்டல்
ஜூலியை ரசிகர்கள் கொண்டாடிய நேரத்தில் ஓவியா சிசிடிவி கேமரா முன்பு வந்து நின்று கிரீன் டீயும், வாழைப்பழமும் கேட்டதை பார்வையாளர்கள் கிண்டல் செய்தனர். அதன் பிறகு ஓவியா தான் பார்வையாளர்களின் செல்லப்பிள்ளை ஆனார்.

ஓவியா ஆர்மி
ஸ்ப்ரே அடிச்சிடுவேன் என்று ஓவியா கூறியதும் பிரபலமானது. முதலில் அவரை திமிர் பிடித்தவர் என்று திட்டிய ரசிகர்களே பின்னர் அவர் நடிக்காமல் இயல்பாக இருப்பதை புரிந்து கொண்டு சமூக வலைதளங்களில் அவருக்கு ஆர்மி துவங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











