ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்த ஓவியா.. ஆர்மி ஷாக்!

பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பதில்லை எனத் தெரிவித்துள்ளார் ஓவியா.

By Jaya Chitra

Recommended Video

பிக் பாஸ் 2 பற்றி மனம் திறந்த ஓவியா- வீடியோ

சென்னை: பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியை பார்ப்பதில்லை என தெரிவித்துள்ளார் நடிகை ஓவியா.

விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஓவியா. பிக் பாஸ் வீட்டில் குறைந்த நாட்களே இருந்த போதும், தனது இயல்பான நடவடிக்கைகள் மூலம் மக்களிடையே அதிக அன்பு மற்றும் ஆதரவைப் பெற்றவர் அவர். ஓவியா ஆர்மி’ கூட உருவானது.

காதல் பிரச்சினை காரணமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து பாதியிலேயே அவர் வெளியேறினார்.

ஓவியாவின் பதில்:

ஓவியாவின் பதில்:

இந்நிலையில், ரசிகர்களின் கேள்விகளுக்கு நேற்று டிவிட்டரில் பதில் அளித்தார் ஓவியா. அப்போது ‘பிக் பாஸ் 2 பற்றி உங்கள் கருத்து என்ன?' என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு, ‘எந்தக் கருத்தும் இல்லை. ஏனென்றால், நான் ‘பிக் பாஸ் 2' பார்ப்பதில்லை' எனப் பதிலளித்துள்ளார் ஓவியா.

ஓவியா தான் லெஜண்ட்:

ஓவியா தான் லெஜண்ட்:

இந்த கேள்வி பதில் தொடரில் ‘பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்கள் இடத்தை நிரப்ப யாரும் இல்லை. மும்தாஜ், அவருடைய பாணியில் நன்றாக விளையாடுகிறார். ஆனால், ஓவியா தான் லெஜண்ட்' என்று ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் அதிர்ச்சி:

ரசிகர்கள் அதிர்ச்சி:

அதற்கு ஓவியா, ‘எல்லாருமே நல்லவர்கள் தான். யாரையும் யாருடனும் ஒப்பிடாதீர்கள். ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள்" என ஓவியா தெரிவித்துள்ளார். ஓவியாவின் இந்தப் பதிலால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைக்கலாமா ஓவியா என்பது தான் அவர்களது ஆதங்கம்.

பிக் பாஸ் புகழ்:

பிக் பாஸ் புகழ்:

ஏனென்றால் பிக் பாஸ் முதல் சீசனில் அவர் வெற்றி பெறாவிட்டாலும்கூட, இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். பிக் பாஸ் புகழால் அவருக்கு கை நிறைய படவாய்ப்புகள் கிடைத்து, தற்போது பிசியான நடிகையாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X