பிக் பாஸால் நான் இழந்தது என்ன தெரியுமா?: உண்மையை சொன்ன ஓவியா #Oviya
Recommended Video

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் தனக்கு என்ன நடந்தது என்று ஓவியா தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் ஓவியாவை போட்டியாளர் போன்று பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
ஓவியாவை பார்த்ததும் 16 போட்டியாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். யார் முகத்திலும் மகிழ்ச்சி இல்லை.

பெட்டி
பிற போட்டியாளர்கள் எல்லாம் 2 பெட்டிகளுடன் வந்துள்ள நிலையில் ஓவியா மட்டும் ஒரு பெட்டியுடன் வந்தது அவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ஓவியாவிடமே கேட்க அவரோ நான் 100 நாட்கள் தங்க வந்துள்ளேன் என்று பிக் பாஸ் கூறியபடி தெரிவித்தார்.

மகிழ்ச்சி
ஓவியாவின் பேச்சை நம்பாத மகத், சென்றாயன் உள்ளிட்ட போட்டியாளர்கள் அவரின் பெட்டியை திறந்து பார்க்க அதில் தண்ணீர் பாட்டில்கள் இருந்தது. ஓவியா போட்டியாளர் இல்லை என்பது தெரிந்ததும் அனைவருக்கம் ஒரே குஷி தான்.

அறிவாளி
நீங்க ரொம்ப அறிவாளி மகத். நான் எதற்காக வந்துள்ளேன் என்பதை கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றார் ஓவியா. நான் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தபோது 55 கிலோ இருந்தேன். இங்கிருந்து சென்றபோது 50 கிலோவாகிவிட்டேன். நான் ஏற்கனவே ஒல்லிங்க என்றார் சென்றாயன். ஓவியாவோ, ஆளே காணாமல் போயிடுவீங்க, முடி மட்டும் தான் இருக்கும் என்றார்.

சந்தோஷம்
ஓவியா பிக் பாஸ் வீட்டிற்கு வந்த உடனே கிளம்பியதை பார்த்த போட்டியாளர்களுக்கு தான் எவ்வளவு மகிழ்ச்சி. உங்களை எல்லாம் பார்த்தால் சிரிப்பு வருது என்று கூறி விழுந்து விழுந்து சிரித்துவிட்டு கிளம்பினார் ஓவியா.

சென்றாயன்
ஓவியாவை தான் பார்க்கிறேனா, பேசுகிறேனா. என்னால் என் கண்ணையே நம்ப முடியவில்லையே, ஓவியா, ஓவியா, ஓவியா என்று சென்றாயன் ஓவர் சீன் போட்டது பார்வையாளர்களை கடுப்படைய வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











