பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வரும் ஓவியா! தயார் நிலையில் ஓவியா ஆர்மி!
ஓவியா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறார்
Recommended Video

சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் ஓவியா வருவது உறுதியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே வரும் 30ஆம் தேதி நடக்க உள்ளது. எந்த டாஸ்க் கொடுத்தாலும் சரியாக போகவில்லையே என எரிச்சலில் இருக்கும் பிக்பாஸ் வேறு வழியில்லாமல் வெளியேறிய போட்டியாளர்களை உள்ளே அழைத்து நிகழ்ச்சி முடியும் வரை எதாவது சொல்லி ஓட்டுங்க என்ற ரேஞ்சுக்கு இறங்கிவிட்டார்.

பஞ்சாயத்து பண்ணி பிரச்சனையை தீர்த்து வைக்க கணேஷ், சந்து கேப்பில் சிந்துபாட ஆரவ், மனதில் பட்டதை பட்டென உடைக்க ஓவியா, எனக்கு நடிக்க தெரியாதுங்க என எல்லா வில்லத்தனமும் செய்ய ஜுலி என ஒரு மசாலா படம் போல இருந்த முதல் சீசனை பார்த்த ரசிகர்களுக்கு இரண்டாவது சீசன் கொட்டாவி வர வைத்துவிட்டது.
ஆண்டவருக்காக பார்ப்பேன் என உட்கார்ந்த ரசிகர்களையும் கமல்ஹாசனே விரட்டிவிட்டார். இப்படி வேண்டா வெறுப்புக்கு புள்ளைய பெத்து காண்டா மிருகம்னு பேரு வச்ச கதையா எப்படியாவது பைனல முடிச்சு ஆள உடுங்கடா... நான் இந்தியன் 2 ஷூட்டிங் போகனும் என்ற நிலையில் கமல் இருக்கிறார்.
அதனால், மீதம் இருக்கும் நான்கு நாட்களை கொஞ்சம் கலகலப்பாக்க ஓவியாவை கூட்டிவர திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ரசிகர் ஒருவர் அது சம்பந்தமாக கேட்டதற்கு ஓவியாவும் "ஆம்" என்று பதிலளித்துள்ளார். ஓவியா வருகிறார் எனத் தெரிந்ததும் ஓவியா ஆர்மி ஆயுதங்களை தூசு தட்டி தயாராக வைத்துள்ளது.
ஆமா.. பொருத்திருந்து பாருங்கள் என ஓவியா தெரிவித்துள்ளார். ஆனால் எப்போது வருவார், எப்படி வருவார் எனத் தெரியவில்லை. அட்லீஸ்ட் இன்னக்கி வரச்சொன்னாலவாவது கடைசி நான்கு நாட்களுக்கு ஆறுதலாக இருக்கும். செய்வீர்களா...?


Click it and Unblock the Notifications











