நீயா நானா நிகழ்ச்சியில்.. ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து ஏளனப் பேச்சு.. கண்டித்த பா. ரஞ்சித்!

சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான இயக்குநராக உள்ளார். சினிமா தளத்தில் மட்டும் இல்லாமல், அரசியல் மற்றும் பண்பாட்டுத் தளத்தில் மிகவும் தீவிரமான அம்பேத்கரிய தத்துவத்தை முன் நிறுத்தி செயல்படுபவராக உள்ளார். இவரது நீலம் பண்பாட்டு மையம் நடத்திய வேர்ச்சொல் இலக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பா. ரஞ்சித், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி குறித்து காட்டமாக விமர்சித்து பேசினார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குநர் பா.ரஞ்சித் தமிழ் சினிமாவின் திசை வழிப்போக்கினை மாற்றிய இயக்குநர். இவரது இயக்கங்களில் வெளியான படங்கள் அனைத்தும் அம்பேத்கரியம் குறித்து தெளிவாக பேசி வருகிறது. மேலும் இவரது நீலம் புரெடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே, சமூகத்தை பண்படுத்த எடுக்கப்படும் படங்களாக உள்ளன. மேலும் பலரும் கையாள நினைக்கிற சப்ஜெக்டகளை படங்களாக எடுத்து தமிழ் சினிமாவின் தன்மையை மாற்றிக் கொண்டு உள்ளார்.

Pa Ranjith Slams Vijay TV Neeya Naana Entire Team At Verchol Dalit Literary Festival

இவரது இயக்கத்திலோ, தயாரிப்பிலோ ஒரு படம் வெளியாகிறது என்றால், அந்த படங்கள், அம்பேத்கர் முன் நிறுத்திய அரசியல் தத்துவங்களில் எதை பேசுகிறது என்பது பரவலாக கவனிக்கப்படுகிறது. தங்கலான் படத்தில் அம்பேத்கர் ஏற்றுக் கொண்ட பௌத்தத்தையும், நாகர்கள் குறித்தும் படமாக்கியது அரசியல் தளத்திலும் இலக்கியத் தளத்திலும் கவனிக்கப்பட்டது. இவரது நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த வேர்ச்சொல் தலித் இலக்கியக் கூடுகை நிகழ்ச்சியில் பா. ரஞ்சித் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

பா. ரஞ்சித்: அந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில், " கே.ஜி.எஃப் படம் வெளியான பின்னர், ஒருவர் பேசுகிறார், தமிழ் சினிமாவில் நசுக்கப்பட்டோம் பிதுக்கப்பட்டோம் எனக் கூறி படம் எடுத்து தமிழ் சினிமாவை கெடுத்துவிட்டார்கள் என ஒருவர் கூறுகிறார். நாங்கள் ஒரு ஆறு ஆண்டுகள் படம் எடுத்ததில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் நாங்கள் கெடுத்து விட்டோம் என கூறுகிறார்கள். நசுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம், அமுக்கப்பட்டோம் எனும் வார்த்தைகளை தமிழ்ச் சமூகம் இப்போதுவரை அனுமதித்து வருகிறது.

Pa Ranjith Slams Vijay TV Neeya Naana Entire Team At Verchol Dalit Literary Festival

நீயா நானா: சமீபத்தில் கூட நீயா நானா நிகழ்ச்சியில் ஒருவர் பேசும்போது, அந்த வார்த்தைகளை பயன்படுத்தி தொடர்ந்து பேசுகிறார். உண்மையிலேயே உங்களுக்கு எல்லாம் குறைந்தபட்சம் அக்கறை கூட கிடையாதா? ஒரு சமூகத்தைப் பற்றி மோசமான உரையாடலை நிகழ்த்துவதற்கு, ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். அந்த வார்த்தையை எந்தவிதமான எடிட்டும் செய்யாமல் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்கிறீர்கள். அந்த வார்த்தையை தவிர்க்காமல் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறீர்கள். இதற்காகத்தான் நாங்கள் படம் எடுக்கிறோம்.

Pa Ranjith Slams Vijay TV Neeya Naana Entire Team At Verchol Dalit Literary Festival

புரட்சியாளர்களாக: நாங்களும் படம் எடுக்கவில்லை என்றால், இவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக புரட்சியாளர்களாக மாறியிருப்பார்கள். நாங்கள்தான் உங்களை வாழவைத்தோம், நாங்கள்தான் உங்களுக்கு உணவளித்தோம், நாங்கள்தான் உங்களுக்கு எல்லாம் கொடுத்தோம் என்பதுதான் தொடர்ந்து இருந்து கொண்டே உள்ளது. நீங்கள் இல்லை என்பதை நாங்கள் சொல்வது தான் இங்கு பிரச்னையே. அந்த வார்த்தையை எப்போதும் பேசிக்கொண்டே உள்ளார்கள். தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பேசுகிறார்கள்" என மிகவும் காட்டமாக விமர்சித்துப் பேசினார். அவரது இந்த பேச்சு தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் அவர், “கபாலி, காலா படத்திற்குப் பிறகு நான் தமிழில் படமே செய்யக்கூடாது என ஹிந்தியில் பிர்சா முண்டா குறித்து படம் எடுக்கும் முயற்சியில் இருந்தேன். சில காரணங்களால் அந்த படத்தை எடுக்க முடியவில்லை. நான் எனது சொந்த பணத்தைக் கொண்டு பரியேறும் பெருமாள் படத்தை தயாரித்தேன். படத்தை ரிலீஸ் செய்யும் போது எனது மனைவியிடம் நான் கொடுத்து வைத்த கொஞ்சம் பணத்தையும் வாங்கி வந்து படத்தை ரிலீஸ் செய்தேன். படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் இங்கு இருக்கும் ஊடகங்கள்ன் பா. ரஞ்சித்தின் நீலம் புரெடக்‌ஷன்ஸ் தயாரிப்பு என எழுதவில்லை.

மாரி செல்வராஜ் இயக்குநர் ராமின் வளர்ப்பு அதனால்தான் இந்த படம் ஹிட் எனக் கூறினார்கள். என்னைப் பாராட்டுவதில் உங்களுக்கு என்ன சிக்கல் இருக்கிறது எனக் கேட்கிறேன். நீலம் புரடெக்‌ஷன்ஸ் என எழுதுவதில் உங்களுக்கு என்ன பிரச்னை? ஒரு சிறந்த படைப்பு வருகிறது. அந்த சிறந்த படப்பை தயாரித்தது யார்? அந்த படம் ஓடும் ஓடாது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இரண்டே காரணங்களுக்காகத்தான் இந்த படத்தை நான் தயாரித்தேன், ரிலீஸ் செய்தேன்.

ஒரு காட்சி டாக்டர் ஆகப்போகிறேன் எனக் கூறும் காட்சி, மற்றொன்று அந்த கல்லூரியின் முதல்வர், ஓடுனா மட்டும் விட்டுடுவாங்களா? எனக் கேட்கும் இரண்டு காட்சிகள் போதும், இந்த படத்தை நான் தயாரிக்கிறேன், ரிலீஸ் செய்கிறேன் என முடிவெடுத்தேன். இதனை நான் மாரி செல்வராஜிடமே கூறினேன். அப்போதும் கூட ரஞ்சித்தின் தயாரிப்பு எனக் கூறுவதில் பிரச்னை. பரவாயில்லை, ஆனால் மாரி செல்வராஜ் எனும் ஒருவன் வந்தான் அல்லாவா?

மாரி செலவராஜ் வந்து இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்து நிற்கிறான் இல்லையா? நீலம் தொடர்பாக பல்வேறு விஷயங்கள் செய்து வருகிறோம். அவை அரசியல் தளத்திலும் எதிரொலித்து வருகிறது. இதில் பல்வேறு கருத்துகள் வருகிறது. சகோதர யுத்தங்களும் உள்ளது. அண்ணன், திருமாவளனுக்கு எதிராக என்னை நிறுத்துகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் எனக்கு ரூபாய் 25 கோடிகள் கொடுத்ததாம், குரு மூர்த்தி கையால் நான் ரூபாய் 25 கோடிகளை வாங்கினேனாம். இது ஒருபுறம் இருக்கிறது. சினிமா வட்டாரங்களில் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்றால், நான் சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்தேன். அப்போது தலித் அமைப்புகள், எச்.ஜி.ஓக்கள் என அனைத்துமே, இணைந்து ரூபாய் 1200 கோடிகளை நிதியாக என்னிடத்தில் கொடுத்துள்ளார்களாம். நான் அதை வீட்டில் வைத்திருக்கிறேனாம். அமலாக்கத்துறை இவற்றை எல்லாம் கவனித்து எங்கள் வீட்டிற்கு விசாரணைக்கு வரவேண்டும்.

கே.ஜி.எஃப் படம் வெளியான பின்னர், ஒருவர் பேசுகிறார், தமிழ் சினிமாவில் நசுக்கப்பட்டோம் பிதுக்கப்பட்டோம் எனக் கூறி படம் எடுத்து தமிழ் சினிமாவை கெடுத்துவிட்டார்கள் என ஒருவர் கூறுகிறார். நாங்கள் ஒரு ஆறு ஆண்டுகள் படம் எடுத்ததில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் நாங்கள் கெடுத்து விட்டோம் என கூறுகிறார்கள். நசுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம், அமுக்கப்பட்டோம் எனும் வார்த்தைகளை தமிழ்ச் சமூகம் இப்போதுவரை அனுமதித்து வருகிறது.

மீபத்தில் கூட நீயா நானா நிகழ்ச்சியில் ஒருவர் பேசும்போது, அந்த வார்த்தைகளை பயன்படுத்தி தொடர்ந்து பேசுகிறார். உண்மையிலேயே உங்களுக்கு எல்லாம் குறைந்தபட்சம் அக்கறை கூட கிடையாதா? ஒரு சமூகத்தைப் பற்றி மோசமான உரையாடலை நிகழ்த்துவதற்கு, ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். அந்த வார்த்தையை எந்தவிதமான எடிட்டும் செய்யாமல் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்கிறீர்கள். அந்த வார்த்தையை தவிர்க்காமல் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறீர்கள். இதற்காகத்தான் நாங்கள் படம் எடுக்கிறோம்” எனவும் அவர் பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X