பலன்தரும் பரிகார கோவில்கள் - புதுயுகம் டிவியில் தரிசியுங்கள்

புதுயுகம் டிவியில் பலன்தரும் பரிகார கோவில்கள் பற்றி ஆன்மீக நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

By Mayura Akilan

சென்னை: ஆலயங்களைப் பற்றியும், பலன் தரும் பரிகார கோவில்களைப் பற்றியும் புதுயுகம் டிவியில்
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கு தனி ரசிகர்கள் உண்டு. ஆலய தரிசனம், பலன் தரும் பரிகாரங்களை அறிந்து கொள்வதற்கு தனி ரசிகர்கள் உண்டு.

வாழ்க்கைக்குத் தேவையான, மனித இனத்தை நல்வழிப்படுத்த வழிவகைசெய்யும் "பக்தி நிகழ்ச்சிகளையும்" பயனுள்ள வகையில் புதுயுகம் தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது.

இவ்வகையில், புதுயுகம் தொலைக்காட்சியானது "பலன்தரும் பரிகார கோவில்கள்" என்கிற நிகழ்ச்சியினை புத்தம் புதிதாக வடிவமைத்து, ஒவ்வொரு தலங்களையும் வித்தியாசமான கோணங்களில் அறிமுகப்படுத்தும் ஆன்மீகப் பணியில் தன்னை ஆத்மார்த்தமாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. '

இத்தொடரானது ஆன்மீக ஆர்வலர்கள், பக்தர்கள் என அனைவராலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தெய்வங்களின் தரிசனம்

தெய்வங்களின் தரிசனம்

இந்து மதத்தின் முந்தைய வடிவமான ஷண்மதங்களின் அனைத்து தெய்வங்களையும் பாகுபாடில்லாமல், அவற்றின் ஒவ்வொரு திருத்தலங்களின் அரிய வரலாறு, பெருமைகள், அத்தலங்களைக் குறித்து அறியப்படாத பல புதிய தகவல்கள் என திருத்தலங்களின் மூர்த்தி, அவைதம் நேர்த்தி, காலத்தைவெல்லும் கீர்த்தி அனைத்தையும் அவற்றிற்குரிய அரிய புகைப்படங்கள், விளக்கக் குறிப்புகளை காட்சிப்படுத்தி இந்நிகழ்ச்சி விரிவாக விவரிக்கிறது.

பரிகார தலங்கள்

பரிகார தலங்கள்

ஒவ்வொரு கோவில்களின் தெய்வத்தின் சிறப்பியல்புகளை எடுத்துரைத்து, அத்தகைய தெய்வங்களை பிரார்த்தித்துக் கொள்வதால் நிவர்த்தியாகும் பிரச்சினைகள் எவையெவை? அவற்றை போக்கிக்கொள்ள மேற்கொள்ளப்படும் பரிகாரங்கள், அவற்றை செயல்படுத்தும் முறைகள் ஆகியவற்றை மிகத்துல்லியமாக எடுத்துக்கூறுவதே இந்நிகழ்ச்சியின் மிக முக்கிய அம்சமாகும்.

பக்தர்கள் வரவேற்பு

பக்தர்கள் வரவேற்பு

பொதுமக்களுக்கு பயனளிக்கும் பரிகாரங்கள் குறித்த வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வூட்டும் நற்பணியை இத்தொடர் செய்துவருகிறது என்பதில் இருவேறு கருத்தில்லை. இதனால் இத்தொடரானது ஒளிபரப்பாகத் துவங்கிய குறுகியகால அளவிலேயே அனைத்து மக்களின் நெஞ்சங்களிலும் இடம்பிடித்துள்ளது என்பது பாராட்டத்தக்க ஒன்றாகும்.

ஆலய தரிசனம்

ஆலய தரிசனம்

இந்நிகழ்ச்சியில் இதுவரை செட்டிபுண்ணியம் ஹயக்ரீவர் திருக்கோவில்,எழுச்சூர் நல்லிணக்கீஸ்வரர் திருக்கோவில், குன்றத்தூர் காத்யாயினி அம்மன் திருக்கோவில், ரத்னமங்கலம் குபேரர் திருக்கோவில்,நென்மேலி லெக்‌ஷ்மி, நாராயணர் திருக்கோயில், திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் திருக்கோவில்,பழைய பெருங்களத்தூர் மதுரகாளியம்மன் திருக்கோவில், செங்குன்றம் அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை புஷ்பரதேஸ்வரர் திருக்கோவில் ஆகிய கோவில்களை பற்றி ஒளிபரப்பியுள்ளனர்.

ஆன்மீக நிகழ்ச்சி

ஆன்மீக நிகழ்ச்சி

ஒரு சிறந்த ஆன்மீக நிகழ்ச்சியினை மாறுபட்ட கோணத்தில் வழங்கும் "பலன்தரும் பரிகார கோவில்கள்" என்னும் இத்தொடரினை தனது வளமையான பின்னணிக் குரல்வளத்தால், தலவரலாற்றின் தன்மைக்கேற்ப தொகுத்து வழங்கி இந்நிகழ்ச்சிக்கும மேலும் வளமை சேர்ப்பவர் திருமதி. சரண்யா சாய்பிரஷாந்த். எழுத்து & இயக்கம்: M. பழனிவாசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X