இன்னுமா பீச்சுல இப்படி நடக்குது... பஞ்சுக்கு தாலி கட்டியாச்சு....!
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் பாக்கியலட்சுமி ரவியிடம் தன் காதலை கூட ரவியிடம் சொல்ல முடியாம தவிச்சுக்கிட்டு இருக்கும் நேரத்தில், ரவி பாக்கியலட்சுமி கழுத்தில் தாலியே கட்டிடறான்.
அதிர்ச்சியாத்தான் இருக்கு.... பீச்சுக்கு போயி தனிமையில் தன் குடும்பத்து பிரச்னையை நினைச்சு, ரவியையும் அவன் காதலையும் மறந்தே ஆகணும்னு முடிவெடுத்து இருக்கா.
ரவி பாக்கியலட்சுமியைத் தேடி கடைக்கு போயிட்டு, கோயிலுக்கு போயிட்டு கடைசியா பீச்சுக்கு வர்றான். அங்கே அவள் இருக்கா.

எங்கெல்லாம் தேடறது
என்ன பாக்கியலட்சுமி உங்களை எங்கெல்லாம் தேடறது... இங்கே என்ன பண்ற பஞ்சுன்னு கேட்கறான். இங்க எதுக்குங்க வந்தீங்க ரவின்னு பஞ்சு கேட்க...பெங்களூருவில் இருந்து உங்களை ஆசையா பார்க்க வந்தேன்...உங்களுக்காக தேடிப்போய் பரிசுப் பொருள் வாங்கிட்டு வந்தேன் பஞ்சுன்னு சொல்றான்.

ரவி வேணாம்
ரவி அழகிய வாட்சை பரிசாக கொடுக்க...வேணாம் ரவி... எதுவுமே வேணாம்.. உங்களுக்கும் எனக்கும் ஒன்னும் இல்லை ரவின்னு சொல்லி, வாட்சை கடலில் தூக்கி போட்டுடறா. என்ன பஞ்சு இப்படிப் பண்ணிட்டே, உனக்காக கடை கடையா ஏறி இறங்கி ஆசை ஆசையா வாங்கிட்டு வந்தேன்னு சொல்றான்.

வாட்ச் கரைக்கு
வாட்ச் மீண்டும் கரைக்கு வந்தால் நம்ம காதல் உண்மையானது பஞ்சு...அப்போ என் காதலை ஏத்துக்குவியான்னு கேட்கறான்.இல்லை ரவி..அது வராதுன்னு சொல்லும்போதே வாட்ச் கரைக்கு வந்திருது. பார்த்தியா பஞ்சுன்னு ரவி சொல்ல... நான் உங்களுக்கு சரியான ஜோடி இல்லை ரவி என்னை விட்டுருங்கன்னு சொல்லிட்டு போறா பாக்கியலட்சுமி.

பசங்க பீச்சில்
நாலைஞ்சு ரவுடி பசங்க மாதிரியும் இல்லாமல், நல்ல பசங்க மாதிரியும் இல்லாம பீச்சில் மஞ்சள் கட்டிய கயிறுடன் சுத்தறாங்க... வீட்டுக்கு தெரியாம லவ்வுன்ற பேரில் இப்படி சுத்தி,சமுதாயத்தை சீரழிக்கறீங்களான்னு கேட்கறானுங்க.இல்லை நாங்க அப்படிப்பட்ட குடும்பம் இல்லைன்னு சொல்லியும் அவனுங்க கேட்கலை.

தாலியை கட்டுடா
பாக்கியலட்சுமி கழுத்தில் தாலியை கட்டுடான்னு அவனுங்க மிரட்டறாங்க. வேணாம் ரவி...வேணாம் ரவின்னு சொல்லியும்...ரவி வேற வழி இல்லாம அங்கு இருந்த ஒரு பிள்ளையார் சதுர்த்தி பிள்ளையாரிடம் வேண்டிக்கிட்டு பாக்கியலட்சுமி கழுத்தில் தாலி கட்டிடறான்.

இனி என்ன
அதிர்ந்து போறா பாக்கியலட்சுமி... பசங்க போயிட்டாங்க... இதுக்குத்தான் ரவி ஆசைப்பட்டீங்க ... உங்க ஆசை நிறைவேறிடுச்சு இல்லை... இங்கே நிக்காதீங்க போங்கன்னு சொல்றா... எது எப்படியோ தாலி ஏறிடுச்சு...இனி என்ன நடக்குது பார்க்கலாம்...


Click it and Unblock the Notifications











