படுக்கைக்கு அழைத்தால் நோ சொல்ல மாட்டேன்.. ஆனால், ஷாக் கொடுத்த சீரியல் நடிகை!
சென்னை: இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியல் நடிகை பாப்ரி கோஷ் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பேசியது சோஷியல் மீடியாவில் பேசுபொருளாகி உள்ளது. சினிமாவில் இருந்து சீரியலுக்கு வந்தவர் தான் இந்த பாப்ரி கோஷ். இவர்,2009 ஆம் ஆண்டு பெங்காலி மொழியில் வெளியான கால்பீலா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்
பெங்காலியில் ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய டூரிங் டாக்கீஸ் என்ற படத்தில் ஹேமா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். ஒய், பைரவா, சக்கைப்போடு போடு ராஜா, சர்கார் விஸ்வாசம் உள்ளிட்ட தமிழ் படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வெள்ளித்திரை பெரிதாக கைக்கொடுக்காததால், கடந்த 2018-ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் நாயகி தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த சீரியலில் இவரின் கதாபாத்திரத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. 2018ம் ஆண்டு ஒளிபரப்பான இந்த தொடர் 2020ம்ஆண்டு முடிந்ததைத் தொடர்ந்து செல்வம் சுப்பையா இயக்கத்தில் பாண்டவர் பூமி என்ற தொடரில் கயல்விழி என்ற வேடத்தில் நடித்து மேலும் பிரபலமானார்.

நடிகை பாப்ரி கோஷ்: இதையடுத்து, பூவே உனக்காக, சித்தி 2, மகராசி, வானத்தைப்போல, அருவி ஆகிய தொடர்களில் ஒரு சில எபிசோடுகளில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி 2 என்ற சீரியலிலும், கலைஞர் தொலைக்காட்சியில் கண்ணெதிரே தோன்றினாள் என்ற தொடரில் நடித்து வருகிறார். மேலும், பாப்ரி கோஷ், ரவுடி பேபி, பூவா தலையா உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார்.

நோ சொல்ல மாட்டேன்: இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், என்னை படுக்கைக்கு அழைத்தால், நான் முதலில் நோ சொல்ல மாட்டேன். ஆனால், அதற்கு முன்னாடி அவரின் வீட்டுக்கு சென்று அம்மா,அப்பா, தங்கை,அக்கா, மனைவி ஆகியோரின் கண் எதிரே நின்று, நீங்கள் என்னை படுக்கைக்கு அழைத்தீர்கள், அதற்கு எனக்கு சம்மதம் என்று அந்த நபருக்கு முத்தம் கொடுத்து ஒகே சொல்வேன். அதற்கு பிறகு அவரது குடும்பத்தினர் அவரை பார்த்துக்கொள்வார்கள், இதுதான் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நபருக்கு சரியான தண்டனையாக இருக்கும் என்று பதில் அளித்துள்ளார்.

சரியான தண்டனை: வழக்கமாக நடிகைகளிடம் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து கேட்டால், நான் அதற்கு சம்மதிக்க மாட்டேன், அப்படிப்பட்ட படத்தில் நடிக்க மாட்டேன், இது போல எனக்கும் நடந்து இருக்கு என்று தான் பதிலளிப்பார்கள். ஆனால், நடிகை பாப்ரி கோஷ் , அப்படி தவறு செய்பவர்களுக்கு தண்டனை தரவேண்டும் என்று சொன்னது பாராட்டுக்குரியது என்று பலர் அவரை பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











